இளசுகளின் கவனத்திற்கு.. கர்ஜனையை துவங்கும் புது பிஎம்டபிள்யூ பைக்... அக்.1ல் அறிமுகம், ரூ.4.5 லட்சம் பட்ஜெட்!!

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது புதிய ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளுக்கான டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி இந்த புதிய பைக் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மாடல் BMW F 450 R என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 450சிசி புதிய பைக் குறித்து பிஎம்டபிள்யூ இதுவரை முழுமையான தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும், டீசர் படத்தை பார்க்கும்போது இது நகர்ப்புற பயன்பாடு மற்றும் நெடுஞ்சாலை பயணத்தை மையமாகக் கொண்ட நேக்கட் ரக ரோட்ஸ்டர் ரகத்தில் வர இருப்பது தெரிகிறது. இதன் வடிவமைப்பில் கட்டுமஸ்தான பெரிய எரிபொருள் டேங்க் மற்றும் கூர்மையான வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

BMW F 450 R

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான BMW F 450 GS மாடலின் அடிப்படையில் அதே 450 சிசி தளத்தை பயன்படுத்தி இந்த புதிய பைக் நேக்கட் ரக மாடலாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும், F 450 GS பைக்கில் பயன்படுத்தப்படும் 420 சிசி, இரட்டை சிலிண்டர் எஞ்சின்தான் இந்த புதிய ரோட்ஸ்டர் மாடலிலும் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனையில் இருக்கும் F 450 GS பைக்கில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 48 எச்பி பவரையும், 43 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் F 450 R பைக்கில் சாலையில் வேகமாகவும் ஸ்போர்ட்டியாகவும் இயங்கும் வகையில் எஞ்சினில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் வாய்ப்புகள் உள்ளன.

Also Read

இந்தியாவில் இருக்கும் பிஎம்டபிள்யூ F 450 GS பைக் அட்வென்ச்சர் ரகத்தை சேர்ந்தது என்பதால் கரடுமுரடான சாலைகள் மற்றும் நீண்ட பயணத்திற்கான சஸ்பென்ஷன் அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் 180 மிமீ டிராவல் கொண்டதாக வழங்கப்படுகிறது. ஆனால் F 450 R நகர்ப்புற மற்றும் சாலை பயன்பாட்டுக்கான ரோட்ஸ்டர் என்பதால், இதில் குறைந்த சஸ்பென்ஷன் டிராவல் மற்றும் சாலை பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசர் படத்தில் முன்புற யுஎஸ்டி ஃபோர்க் தெளிவாகத் தெரிகிறது. மேலும், புதிய பைக்கில் 17 அங்குல அலாய் வீல்கள், சாலை பயன்பாட்டுக்கான பிரத்யேக டயர்கள் மற்றும் முன்புறத்திலும், பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெறும் என தெரிகிறது. இந்தியாவில் பிஎம்டபிள்யூவின் குறைந்த விலை நேக்கட் பைக்காக இருந்த G 310 R தற்போது விற்பனையில் இல்லை. அதேபோன்று, G 310 GS மாடலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய F 450 R அறிமுகமானால், இந்தியாவில் பிஎம்டபிள்யூவின் புதிய விலை குறைவான ஆரம்ப ரக ரோட்ஸ்டர் ரக பைக் மாடலாக இது நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

Also Read

தற்போதைய தகவல்களின் அடிப்படையில், இதன் விலை சுமார் ரூ.4.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள F 450 GS பைக்கின் ஆரம்ப விலை தற்போது ரூ.4.95 லட்சமாக உள்ளது. புதிய ரோட்ஸ்டர் அதைவிட குறைவான விலையில் நிலைநிறுத்தப்பட்டால், Aprilia Tuono 457 உள்ளிட்ட 400-500 சிசி பிரீமியம் நேக்கட் பைக்குகளுடன் போட்டியிடும்.

BMW Motorrad நிறுவனம் இந்த புதிய மோட்டார்சைக்கிளை இந்திய நேரப்படி வரும் அக்டோபர் 1ந் தேதி மாலை 5.30 மணிக்கு வெளியிட உள்ளது. அப்போது பைக்கின் அதிகாரப்பூர்வ பெயர், எஞ்சின் செயல்திறன், அம்சங்கள், விலை மற்றும் இந்திய சந்தைக்கான விற்பனை தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Friday, September 25, 2026, 11:02 [IST]
English summary
Bmw f 450 r roadster october 1 2026 reveal india launch expected price specs
மேலும்... #bmw motorrad
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out