முதல்வர் விஜய் உடன் சந்திப்பு வேற லேட்டஸ்ட்டா நடந்து இருக்கு... புதிய பைக்குகள் உடன் கம்பெனியின் சிஇஓ

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் CEO மார்கஸ் ஃபிளாஸ்ச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதியதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் புதிய பைக்குகளுக்கு மத்தியில் CEO மார்கஸ் ஃபிளாஸ்ச் நின்றிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தில் காட்சித்தரும் பைக்குகள் தான் அடுத்ததாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளவை ஆகும்.

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் புதியதாக ஒரு பைக் அறிமுகம் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றே. ஆனால், நிறுவனத்தின் CEO உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு இந்த புதிய பைக்கிற்கு மட்டும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதற்கு காரணம், பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது வரலாற்றில் உருவாக்கிய பைக்குகளிலேயே பெரிய அளவிலான பாக்ஸர் என்ஜினை கொண்ட பைக் இதுவாகும்.

bmw motorrad ceo with r20

முதல்முறையாக 2024ஆம் ஆண்டின் மத்தியில் இத்தாலியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் கான்செப்ட் வடிவில் இந்த புதிய பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த கண்காட்சியின் பார்வையாளர்கள் மத்தியில் இந்த வாகனம் கவனம் ஈர்த்தது. அதனை தொடர்ந்து, அந்த கான்செப்ட்டில் இருந்து விற்பனை செய்வதற்கான மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இறங்கியது.

கிட்டத்தட்ட 2 வருடங்களாக நடைபெற்றுவந்த அந்த பணிகளின் விளைவாக, அந்த கான்செப்ட் வாகனத்தில் இருந்து பொது விற்பனைக்கு தயாரான பைக்கை பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் உருவாக்கியுள்ளது. அதனுடன் இந்த நிறுவனத்தின் CEO எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பற்றி தான் இந்த தொகுப்பின் ஆரம்பத்தில் பார்த்தோம். "இப்போது நாங்கள் தயார்" என்கிற கேப்ஷன் உடன் இந்த படத்தை CEO மார்கஸ் ஃபிளாஸ்ச் பகிர்ந்துள்ளார்.

bmw motorrad ceo with r20

2024இல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட போது எந்த பெயரில் கான்செப்ட் வாகனம் அழைக்கப்பட்டதோ அதே 'ஆர்20' என்கிற பெயரில் இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் கருப்பு நிறத்திலான ஆறு பிஎம்டபிள்யூ ஆர்20 பைக்குகளுக்கு மத்தியில் CEO மார்கஸ் ஃபிளாஸ்ச் புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.

ஆனால், 2024இல் இத்தாலி கண்காட்சியில் நியோன் பிங்க் என்கிற பளிச்சிடும் நிறத்தில் ஆர்20 கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CEO வெளியிட்டுள்ள படத்தின் மூலம் பார்க்கும்போது, பிஎம்டபிள்யூ ஆர்20 பைக்கில் பொது சாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹார்ட்வேர் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இருப்பினும் கான்செப்ட் வாகனத்தில் இருந்ததை போன்று ஸ்விங்கார்மின் வலதுபக்கத்தில் ஷாஃப்ட் டிரைவ் வெளியே தெரியும் வகையில் வழங்கியுள்ளனர்.

அதேபோல், ஒருத்தர் மட்டுமே அமரக்கூடிய வகையில் ஒரேயொரு இருக்கை வழங்கப்பட்டுள்ளது. கான்செப்ட் மாதிரியில் பெரிய அளவிலான எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்பட்டு இருந்த நிலையில், விற்பனைக்கான ஆர்20 பைக்கில் சாலை விதிமுறைகளுக்கு ஏற்ப கச்சிதமான எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்பட்டுள்ளது. ஹேண்டில்பாரில் மிரர்கள் பொருத்தப்பட்டுள்ளன; இதனை கான்செப்ட் வாகனத்தில் பார்க்க முடியவில்லை.

அதேபோல், ஒளி எதிரொலிப்பான்கள் மற்றும் நம்பர் பிளேட் பொருத்துவதற்கான ஹேங்கர் உள்ளிட்டவையும் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. CEO வெளியிட்டுள்ள படத்தில் காட்சித்தரும் ஆறு ஆர்20 பைக்குகளிலும் 17-இன்ச்சில் ஸ்போக்டு சக்கரங்கள் உள்ளன. இவற்றில் மிச்செலின் ரோடு 6 டூரிங் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் CEO வெளியிட்டுள்ள படத்தில், ஆறில் ஒரு பைக் மட்டும் மேற்கூறப்பட்ட மிச்செலின் டயரை வேறு விதமான பேட்டர்னில் கொண்டுள்ளதை பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆர்20 பைக் அறிமுகத்திற்கு தயார் என்பதை வெளிகாட்டும் படத்தில் ஆறு பைக்குகளிலும் ஒரே பேட்டர்னில் டயர்கள் இல்லாதது, இந்த பைக்கில் எந்த மாதிரியான பேட்டர்னில் டயர்களை வழங்குவது என்பதில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனம் இன்னும் உறுதியாக இல்லாததை காட்டுகிறது. இவ்வாறு இன்னும் சில பாகங்களை மட்டுமே இந்த நிறுவனம் இறுதி செய்ய வேண்டியுள்ளது என்றாலும், பிஎம்டபிள்யூ ஆர்20 பைக்கின் அறிமுகத்தை இந்த 2026ஆம் ஆண்டிற்குள்ளாக எதிர்பார்க்க முடியாது என்பது எங்களது கருத்து.

சர்வதேச அளவில் 2027இல் அறிமுகம் செய்யப்படலாம். அதனை தொடர்ந்து இந்தியாவில் 2028 அல்லது 2029இல் அறிமுகம் செய்யப்படலாம். முதலமைச்சர் விஜய் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் அதிகாரிகளுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டில் அவற்றின் முதலீடுகளை அதிகரிக்க கோரிக்கை வைத்துள்ளதால், ஆர்20 பைக் 2027ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

Article Published On: Saturday, May 16, 2026, 9:10 [IST]
English summary
Bmw motorrad ceo posts an image with six production ready r20 motorcycles
மேலும்... #bmw motorrad #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+