ராயல் என்ஃபீல்டு எல்லாம் இனி அவ்வளவு தான்.. புத்தம் புதிய பைக் களமிறக்கிய நிறுவனம்.. தரமான வசதிகளும் இருக்கு!

இந்தியாவில் புத்தம் புதிய 'ஸ்கிராம்பிளர் 650' (Scrambler 650) பைக்கை வெளியிட்டுள்ளது BSA. மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக BSA உள்ளது. ஏற்கனவே 'கோல்டு ஸ்டார் 650' (Gold Star 650) என்ற பைக் BSA பைக் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது பைக் மாடலாக இந்த ஸ்கிராம்பிளர் 650 தற்போது வெளியாகியுள்ளது.

விலை:

ரூ.3.25 லட்சம் முதல் ரூ.3.41 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த கிளாஸியான பைக் மாடல் இந்தியாவில் வெளியாகியுள்ளது. ரேவன் பிளாக், விக்டர் யெல்லோ மற்றும் தண்டர் கிரே ஆகிய மூன்று நிறங்களில் புதிய ஸ்கிராம்பிளர் 650 வெளியிடப்பட்டிருக்கிறது. ரேவன் பிளாக் நிறமே குறைந்தபட்சமாக ரூ.3.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. விக்டர் யெல்லோ மற்றும் தண்டர் கிரே ஆகிய நிறங்கள் முறையே ரூ.3.33 லட்சம் மற்றும் ரூ.3.41 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளன.

BSA Scrambler 650 Black

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்:

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கோல்டு ஸ்டார் 650 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 652 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான் புதிய ஸ்கிராம்பிளர் 650 பைக்கிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 6,500 rpm-ல் 44.5 hp பவர் மற்றும் 4,000 rpm-ல் 55 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினில் குறைவான ரெவ்விங்கிலேயே அதிகளவு டார்க்கை நாம் பெற முடியும்.

சேஸி, சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங்:

கோல்டு ஸ்டார் 650-யின் அதே சேஸியின் மீதே இந்த ஸ்கிராம்பிளர் 650-யும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சஸ்பென்ஷனுக்காக இந்த பைக்கின் முன்பக்கம் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பக்கமுமே ப்ரீலோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும். பிரேக்கிங்கிற்காக முன்பக்கம் பிரெம்போ ட்வின்-பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிப்பர்களுடன் 320 மிமீ டிஸ்க்கும், பின்பக்கம் பிரெம்போ சிங்கிள்-பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிப்பருடன் 255 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் ABS வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

BSA Scrambler 650 White

பிற அம்சங்கள்:

இந்த பைக்கின் முன்பக்கம் 19 இன்ச் வீலும், பின்பக்கம் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டள்ளது. சீட் உயரம் 820 மிமீ என்ற அளவில் இருக்கும் நிலையில், சிங்கிள் பீஸ் ரிப்புடு சீட்டாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பைக்கின் முன்பக்கம் ரேலி பீக், LED முகப்பு விளக்கு ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும் இந்த BSA ஸ்கிராம்பிளர் 650 பைக் கொண்டிருக்கிறது.

12 லிட்டர் எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 187 மிமீ கிரௌண்ட கிளியரன்ஸைக் கொண்டுள்ளது. இதனால் இந்தியாவின் மேடு பள்ளமான சாலைகளை எளிதாகக் கடக்கும். நேராக நிமிர்ந்து அமர்ந்து ஓட்டும் வகையிலான ரைடிங் ஸ்டான்சையே இந்த ஸ்கிராம்பிளர் வகை பைக் கொண்டிருக்கிறது. இந்த பைக்கிற்கு 4 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ வரையிலான ஸ்டாண்டர்டு வாரண்டியை வழங்குகிறது கிளாஸிக் லெஜெண்ட்ஸ். இதனை 6 ஆண்டுகள் வரை நாம் நீட்டிப்பும் செய்து கொள்ளலாம்.

போட்டியாளர்கள்:

அனைத்து விதமான மேம்பட்ட அம்சங்களையும் கொண்ட ப்ரீமியமான பைக் மாடலாக வெளியாகியுள்ளது புதிய BSA ஸ்கிராம்பிளர் 650. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ராயல் என்ஃபீல்டின் ஸ்கிராம்பிளர் வகை பைக்கான பியர் 650-க்குப் போட்டியாக இந்த BSA ஸ்கிராம்பிளர் 650 வெளியாகியுள்ளது. புதிய BSA பைக்கில் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பியர் 650-யில் ட்வின் சிலிண்டர் இன்ஜின் இருக்கும். ஆனால் பவர் மற்றும் டார்க் அளவுகளில் பியர் 650-க்கு புதிய ஸ்கிராம்பிளர் 650 நல்ல போட்டியளிக்கிறது.

டிரைவஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு 650 சிசி பைக்குகளுக்கு இந்தியாவில் நேரடிப் போட்டியாக வேறு எந்த நிறுவனத்தின் பைக்குகளும் இல்லை, இந்த BSA பைக்குகளைத் தவிர. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கோல்டு ஸ்டார் 650-யும் சரி, புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஸ்கிராம்பிளர் 650-யும் சரி, ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக்குகளுக்கு சரியான போட்டியாகவே இவை இருக்கின்றன. விலையும் கூட போட்டியிடும் அளவிலேயே இருக்கிறது.

ஆனால் ஒரே ஒரு பிரச்சினை தான். இந்தியாவில் மூலை முடுக்குகளில் எல்லாம் ராயல் என்ஃபீல்டின் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்கள் நிறைந்திருப்பதைப் போல இந்த BSA-விற்கு இல்லை. இந்தியா முழுவதுமே 400 சர்வீஸ் பாயிண்ட்களையே கிளாஸிக் லெஜெண்டர்ஸ் நிறுவனம் கொண்டிருக்கிறது. இது இந்தப் புதிய பைக்கின் விற்பனையையும் கட்டுப்படுத்தக்கூடும். உங்களுக்கு அருகிலேயே சர்வீஸ் செண்டர் இருக்கும் பட்சத்தில் இந்த பைக்கை நீங்கள் பரிசீலனை செய்யலாம்.

Article Published On: Thursday, April 23, 2026, 19:18 [IST]
English summary
Bsa scrambler 650 bike launched in india to rival royal enfield bear 650
மேலும்... #BSA #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+