இந்த ரெண்டு பைக் இருக்கற வரைக்கும் ராயல் என்பீல்டு நிழலை கூட யாரும் தொட முடியாது!

இந்திய சந்தையில் கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கிற்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் என்ற பெருமையை தன்வசம் வைத்திருக்கும் பைக் புல்லட் 350 (Royal Enfield Bullet 350).

நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் இதேதான் நடைபெற்றுள்ளது. காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமையை, வழக்கம் போல் கிளாசிக் 350 பெற்றுள்ளது.

Royal Enfield Bullet 350

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 34,594 கிளாசிக் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 20.84 சதவீத வளர்ச்சி ஆகும். கிளாசிக் 350 பைக்கிற்கு அடுத்தபடியாக அதிகமாக விற்பனையான ராயல் என்பீல்டு பைக் புல்லட் 350 ஆகும்.

நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 23,372 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 35.26 சதவீத வளர்ச்சி ஆகும். கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 ஆகிய இரண்டு பைக்குகள்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதுகெலும்பாக உள்ளன என்பதை இந்த புள்ளி விபரங்கள் மிகவும் தெளிவாக எடுத்து காட்டுகின்றன.

Royal Enfield Classic 350

நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2 பைக்குகள் இடம் பிடித்துள்ளன. அவை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் 350 ஆகியவை ஆகும்.

இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் எட்டாவது இடத்தையும், ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. இதன்மூலம் 350 சிசி செக்மெண்டின் கிங் என்பதை அவை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1,85,854 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கின் ஆரம்ப விலையோ வெறும் 1,64,423 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால்தான் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 ஆகிய இரண்டு பைக்குகளும் இந்திய சந்தையில் விற்பனையில் வெற்றி கொடி நாட்டி வருகின்றன என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 (Honda H'ness CB 350) மற்றும் ட்ரையம்ப் ஸ்பீட் 400 (Triumph Speed 400) போன்ற பைக்குகளுக்கு எல்லாம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 ஆகிய இரண்டு பைக்குகளும் மிக சிறந்த மாற்று தேர்வுகள்.

Article Published On: Tuesday, June 23, 2026, 14:55 [IST]
English summary
Bullet 350 sales report may 2026 2nd most sold royal enfield after classic 350
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out