லிட்டருக்கு 85 கிமீ மைலேஜ் கொடுக்கும் இந்த பைக்கை வாங்கலாமா? எந்தப் பிரச்சினையும் வராதே?

ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கிற்கு மாற்றாக வேறு ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்கள் பஜாஜின் பிளாட்டினா (Bajaj Platina) பைக்கை முயற்சி செய்யலாம். ஸ்ப்ளெண்டரைப் போலவே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பைக் மாடலாகவே பிளாட்டினாவும் இருந்து வருகிறது. இந்த கம்யூட்டர் பைக்கின் சிறப்பம்கள் மற்றும் விலை ஆகிய தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

பிளாட்டினா 100 மற்றும் பிளாட்டினா 100 டிரம் என பிளாட்டினாவையே இரண்டு மாடல்களாக இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது பஜாஜ். இரண்டு மாடல்கள் என்றாலும் இரண்டிற்கும் இடையில் சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டுமே இருக்கும் பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தியாவில் அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகளில் ஒன்றாக இந்த பிளாட்டினாவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Bajaj Platina 110

பிளாட்டினா 100 பைக்கில் 99.59 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 8.02 hp பவர் மற்றும் 8.34 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு பிளாட்டினா பைக்குகளில் விலை குறைவான பைக் இது தான்.

பிளாட்டினா 110 டிரம் பைக்கில் 9.37 hp பவர் மற்றும் 9.81 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, 115.06 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ABS வசதி கொண்ட பிளாட்டினா 110 பைக்கையும் பஜாஜ் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் விற்பனை நிறுத்தப்பட்டு டிரம் பிரேக்குகள் கொண்ட பிளாட்டினா 110 டிரம் வேரியன்ட் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Bajaj Platina 110

100 சிசி பைக்கானது அதிகபட்சமாக 75 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கும் திறனைக் கொண்டிருக்கும் நிலையில், 110 சிசி பிளாட்டினா பைக்கானது சற்று கூடுதலாக 85 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. மேம்பட்ட இன்ஜினுடன், ஷார்ட்டான இடைவெளி கொண்ட கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பது இந்த கூடுதல் மைலேஜ் அளவிற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டு பைக்குகளும் இடையே சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கின்றன. இதனால் பிளாட்டினா 100 பைக்கை விட பிளாட்டினா 110 டிரம் பைக்கானது ஒரு இன்ச் மேம்பட்டு இருக்கிறது. பிளாட்டினா 110 பைக்கில் ஓடோ மீட்டர் மற்றும் எரிபொருள் அளவிற்கு டிஜிட்டல் டிஸ்பிளேவைக் கொடுத்துள்ளது பஜாஜ். மேலும் இந்த பைக்கில் டியூப்லெஸ் டயர்களைக் கொடுத்துள்ளது. 110 பைக்கின் ரியர் சஸ்பென்ஷனானது சற்று மேம்பட்டதாக இருக்கிறது.

இந்த அம்சங்கள் எல்லாம் பிளாட்டினா 100 பைக்கில் இல்லை. மேலும், மேலே குறிப்பிட்டிருப்பது போல இன்ஜின் மற்றும் மைலேஜ் அளவும் பிளாட்டினா 110 பைக்கில் மேம்பட்டதாகவே உள்ளது. இந்த வேறுபாடுகளுடன் பைக்கின் விலையில் மாற்றம் இருந்தாலும் அது சில ஆயிரங்கள் மட்டுமே. பிளாட்டினா 100 பைக்கானது 68,711 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பிளாட்டினா 110 பைக்கானது 72,484 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கிற்கு மாற்றாக வேறு பைக்கை வாங்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பஜாஜ் பிளாட்டினாவை பரிசீலனை செய்யலாம். ஸ்ப்ளெண்டரை விட 5,000 ரூபாய் வரை குறைவான விலையையும் இந்த பைக் கொண்டுள்ளது. மைலேஜும் ஸ்ப்ளெண்டரை விட அதிகமாகவே கொடுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வரும் சிறப்பான கம்யூட்டர் பைக்குகளில் இந்த பிளாட்டினாவும் ஒன்றாக இருக்கிறது.

Article Published On: Thursday, May 28, 2026, 21:15 [IST]
English summary
Can you buy bajaj platina instead of hero splendor plus former gives more mileage than the later
மேலும்... #bajaj auto #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out