இதைவிட கம்மி ரேட்டில் இப்போதைக்கு ஸ்கூட்டர் இல்ல! ஏபிஎஸ் பைக்குகளில் மட்டும்தான் கிடைக்கும்னு யார் சொன்னா?

ஏபிஎஸ் (Anti-lock Braking System - ABS), இன்றைய கால மோட்டார்சைக்கிள் உலகில் மிக முக்கியமானதாக, அத்தியாவசியமானதாக மாறிவிட்ட ஒன்று. ஏனெனில், இதன் முக்கிய நன்மையே விபத்துகளை தடுப்பது ஆகும். அதாவது, விபத்து ஏற்படுவதற்கு முன்னர் நாம் திடீரென கொடுக்கும் அழுத்தமான பிரேக்கிற்கு வாகனத்தின் சக்கரத்தை லாக் செய்து வாகனத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தி விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதுதான் இதன் பணி ஆகும்.

பள்ளம், மேடான சாலைகளிலும், ஈரமான சாலைகளிலும் ஏபிஎஸ்-இன் தேவை இன்றியமையாததாக உள்ளது. இருப்பினும், இன்னமும் பெரும்பாலான ஸ்கூட்டர்களில் இது வழங்கப்படுவதில்லை; சிபிஎஸ் எனப்படும் காம்பி-பிரேக்கிங் சிஸ்டம் தான் வழங்கப்படுகிறது. இருப்பினும், சில செயல்திறன்மிக்க ஸ்கூட்டர்களில் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. அத்தகைய ஸ்கூட்டர்களுள் சிறந்த ஐந்தினை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

cheapest abs scooters in india

ஹீரோ ஸூம் 160 (Hero Xoom 160): இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பின் லேட்டஸ்ட் தயாரிப்பான இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.37 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இதில் பொருத்தப்படும் 156சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 14.6 எச்பி மற்றும் 14 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த ஹீரோ ஸ்கூட்டரில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

வி.எல்.எஃப் மொப்ஸ்டர் 135 (VLF Mobster 135): இத்தாலியன் ஸ்டைல் ஸ்கூட்டரான இதில் ட்யூயல்-சேனல் (Dual-channel) ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் வேறெந்த ஸ்கூட்டரிலும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் இல்லை. அதற்கேற்ப இதன் எக்ஸ்-ஷோரூம் விலையும் சற்று அதிகமாக ரூ.1.30 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. பெயரில் 135 என கொண்டிருந்தாலும் இதில் 125சிசி என்ஜின் தான் பொருத்தப்படுகிறது.

ஏப்ரிலியா எஸ்.ஆர்175 (Aprilia SR175): இந்த லிஸ்ட்டில் நாம் பார்க்கும் மற்றொரு இத்தாலியன் ஸ்டைல் ஸ்கூட்டர் இதுவாகும். இதில் 174.7சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டாலும் மேலே கூறப்பட்ட 156சிசி ஹீரோ ஸூம் ஸ்கூட்டரை விட என்ஜின் பவர் இதில் கொஞ்சம் குறைவே ஆகும். ரூ.1.26 லட்சத்தில் இருந்து கிடைக்கும் இந்த ஸ்கூட்டரில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின் சக்கரத்தில் டிரம் பிரேக் உடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

டிவிஎஸ் எண்டார்க் 150 (TVS Ntorq 150): டிவிஎஸ் மோட்டாரின் பிரபலமான எண்டார்க் ஸ்கூட்டர்கள் வரிசையில் சமீபத்தில் இணைக்கப்பட்ட இதிலிலும் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின் சக்கரத்தில் டிரம் பிரேக் உடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது. இந்த 150சிசி எண்டார்க் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.09 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

cheapest abs scooters in india

சுஸுகி ஆக்ஸஸ் 125 (Suzuki Access 125): இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று. ரைடு கனெக்ட் மற்றும் ரைடு கனெக்ட் டிஎஃப்டி என இதன் இரு வேரியண்ட்களிலும் ஏபிஎஸ் கிடைக்கிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.90,000- ரூ.1 லட்சம் வரையில் உள்ளன. இந்தியாவில் ஏபிஎஸ் வசதியை பெற்ற இரண்டாவது 125சிசி ஸ்கூட்டர் இதுவாகும். மேலும், குறைந்த விலையில் ஏபிஎஸ் வசதியை வழங்கும் ஸ்கூட்டரும் இதுவாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இருசக்கர வாகனங்களில் பாதுகாப்புக்கு, ஏபிஎஸ்-இன் அறிமுகம் மிக சிறந்த கண்டுப்பிடிப்பாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இன்னும் இருசக்கர வாகனங்களில் இது கட்டாயமாக்கப்படவில்லை. குறிப்பாக, பைக்குகளை காட்டிலும் ஸ்கூட்டர்களில்தான் ஏபிஎஸ்-இன் தேவை அதிகம் என கருதுகிறோம். ஆதலால், வருங்காலங்களில் அதிக ஸ்கூட்டர்களில் ஏபிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டால் நன்றாக இருக்கும்.

இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள ஸ்கூட்டர்களில் எங்களது சாய்ஸ் எதுவென்று கேட்டால், சுஸுகி ஆக்ஸஸ் தான். ஏனெனில், குறைந்த விலையில் ஏபிஎஸ்-ஐ வழங்குவது மட்டுமின்றி, பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸ்கூட்டராகவும் இது விளங்குகிறது. அதேநேரம், பவர்ஃபுல்லான ஏபிஎஸ் ஸ்கூட்டரை எதிர்பார்ப்பவர்களுக்கு ஹீரோ ஸூம் 160 ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 16, 2026, 5:00 [IST]
English summary
Cheapest abs scooters in india suzuki access 125 to hero xoom 160 check all details here
மேலும்... #scooters #scooters india #abs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+