ஸ்கூட்டருக்கு பணத்தை கொட்டுவதை விட இதில் ஒன்றை வாங்குவது பெஸ்ட்... ஒவ்வொன்றும் மாடு மாதிரி எடையை சுமக்கும்!

ஸ்கூட்டர்களை கேள்விப்பட்டு இருக்கிறோம், அது என்ன மொபெட் (Moped)? பார்ப்பதற்கு இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருக்கும். ஆனால், பயன்படுத்தும் விதம், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஸ்கூட்டர்களில் இருந்து மொபெட்கள் வேறுப்படுகின்றன. குறிப்பாக, பொருட்களை ஓர் இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு குறைந்த செலவில் இயங்கக்கூடிய மொபெட்கள் ஏற்றவையாக உள்ளன.

இந்தியாவில் மொபெட்கள் கடந்த பல வருடங்களுக்கு முன்பு இருந்தே விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்த பின்பே எலெக்ட்ரிக் மொபெட்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. எலெக்ட்ரிக் மொபெட்களை எளிதாக உருவாக்க முடியும் என்பதால், பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த பிஸ்னஸில் இறங்கின. அவ்வாறு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் மொபெட்களுள் சிறந்த 6 எலெக்ட்ரிக் மொபெட்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cheapest electric mopeds

கோமகி கேட் (Komaki CAT)
2.0 மற்றும் 3.0 என இரு விதமான வெர்சன்களில் இந்த கோமகி எலெக்ட்ரிக் மொபெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தங்களது வணிகத்தின் தேவைக்கேற்ப வடிவமைத்து பெற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பாகும். இரும்பினால் ஆன ஃபிரேமில், பின்பக்கத்தில் லோடு கேரியர் உடன் இந்த இ-மொபெட் உருவாக்கப்படுகிறது.

யுலு வின் எக்ஸ்.பி (Yulu Wynn XP)
வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் ஏற்ற எலெக்ட்ரிக் மொபெட் ஆக இந்த யுலு மொபெட் விளங்குகிறது. இதன் டாப்-ஸ்பீடு அதிகப்பட்சமாகவே மணிக்கு 25கிமீ மட்டுமே என்பதால், இதனை ஓட்ட டிரைவிங் லைசன்ஸ் எதுவும் தேவையில்லை. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த யுலு எலெக்ட்ரிக் மொபெட்டின் ஆன்-ரோடு விலை ரூ.55,555 ஆக தற்சமயம் உள்ளது.

cheapest electric mopeds

மோட்டோவோல்ட் எம்7 (Motovolt M7)
பொருட்களை மட்டுமின்றி, மனிதர்களையும் அழைத்து செல்வதற்கு ஏற்ற மொபெட் இதுவாகும். ஜெர்மன் தரத்தில் இரட்டை-தொட்டில் ஃப்ரேமில் உருவாக்கப்படும் இதில் அதிகப்பட்சமாக சுமார் 180 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லலாம். அதிகப்பட்சமாக மணிக்கு 60கிமீ வேகத்தில் இயங்கக்கூடியதால் எம்7 எலெக்ட்ரிக் மொபெட்டை இயக்க டிரைவிங் லைசன்ஸ் தேவை.

ஒகினவா ட்யூயல் 100 (Okinawa Dual 100)
இந்தியாவின் கமர்ஷியல் எலெக்ட்ரிக் வாகனங்கள் மார்க்கெட்டில் நுழைந்த முதல் நிறுவனங்களுள் ஒன்றான ஒகினவா ஆட்டோடெக் -இன் ட்யூயல் 100 ஆனது 60kmph வேகத்தில் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் மொபெட் ஆகும். LED விளக்குகள், ட்யூயல் டிஸ்க் பிரேக்குகள், சைடு-ஸ்டாண்டர் சென்சார் போன்ற நவீன வசதிகளுடன் கிடைக்கும் இந்த இ-மொபெட்டில் பொருத்தப்படும் 3.12kWh திறன் கொண்ட பேட்டரியை வாகனத்தில் இருந்து வெளியே எடுக்க முடியும்.

மோட்டோவோல்ட் அர்பன் (Motovolt Urban)
எடை குறைவான மற்றும் அன்றாட நடைமுறைக்கு ஏற்றதாக விளங்கும் மோட்டோவோல்ட் அர்பன் ஆனது பெயருக்கேற்ப போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில், குறுகிய தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 120 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லக்கூடிய இந்த எலெக்ட்ரிக் மொபெட் வாகனத்தின் டாப்-ஸ்பீடு மணிக்கு 25கிமீ ஆகும்.

கைனெட்டிக் க்ரீன் இ-லூனா பிரைம் (Kinetic Green e-Luna Prime)
இதுவரையில் நாம் இந்த தொகுப்பில் பார்த்த வாகனங்களிலேயே சிறந்த எலெக்ட்ரிக் மொபெட் ஆக இதனை சொல்லலாம். அந்த அளவிற்கு, அதிக எடையை சுமந்தப்படி தினசரி பயணங்களுக்கு ஏற்றதாக இ-லூனா பிரைம் விளங்குகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 50கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலெக்ட்ரிக் மொபெட்டின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 110கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய கால மாடர்ன் உலகில் மொபெட் வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் மொபெட் வாகனங்கள் அந்த தேவைகளை பூர்த்தி செய்யும் இடத்திற்கு மாறி வருகின்றன. இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மொபெட்களில் எங்களது சாய்ஸ் எதுவென்று கேட்டால், கடைசியாக பார்த்த கைனெட்டிக் இ-லூனா ஆகும்.

Article Published On: Sunday, June 28, 2026, 15:26 [IST]
English summary
Cheapest electric mopeds for daily deliveries and business operations
மேலும்... #moped #electric vehicles #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out