வெறும் 85 ஆயிரம் ரூபாயில் ஓலா பைக்! இன்னும் கொஞ்சம் செலவு பண்ணா கிடைக்கும் எலெக்ட்ரிக் பைக்குகள்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) கிடைத்துவரும் அளவிற்கு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு பெரியதாக வரவேற்பு கிடைப்பதில்லை என்பதை எலெக்ட்ரிக் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிய வருகிறது. அந்த அளவிற்கு எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்கி பயன்படுத்துவதில் இன்னமும் பெரும்பாலான மக்கள் தயக்கம் காட்ட தான் செய்கின்றனர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று, எலெக்ட்ரிக் பைக்குகளையும் விரைவாக சார்ஜ் செய்ய முடியுமா, எலெக்ட்ரிக் பைக்குகள் அதிக ரேஞ்சை வழங்குமா என்பதுதான் பெரும்பாலானவர்களின் சந்தேகமாக உள்ளது. ஆனால் உண்மையில், இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் நிறைய எலெக்ட்ரிக் பைக்குகள் அதிக ரேஞ்சை வழங்குகின்றன. அத்தகைய எலெக்ட்ரிக் பைக்குகளுள் சிறந்த ஐந்தை பற்றி தான் இனி இந்த் தொகுப்பில் பார்க்க போகிறோம்.

cheapest electric motorcycles in india

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் (Ola Roadster X): ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுவதுதான் நிறைய பேருக்கு தெரியும்; ஆனால் ஓலாவில் ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் விலை குறைவானதாக விளங்கும் ரோட்ஸ்டர் எக்ஸ் ரூ.85,038இல் கிடைக்கிறது. இந்தியாவில் தற்போதைக்கு குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் பைக்கான இதன் டாப்-ஸ்பீடு மணிக்கு 105கிமீ மற்றும் ரேஞ்ச் (100%- 0% பேட்டரி சார்ஜில்) 140கிமீ ஆகும்.

ரிவோல்ட் ஆர்வி1 (Revolt RV1): ஓலாவை காட்டிலும் நீண்ட காலமாக எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்துவரும் ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான எலெக்ட்ரிக் பைக் இதுவாகும். தற்சமயம் ரூ.94,990 விலையில் 100கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக இருக்கும் ஆர்வி1 எலெக்ட்ரிக் பைக் உள்பட தனது அனைத்து எலெக்ட்ரிக் பைக்குகளுக்கும் ரூ.25,000 வரையிலான சலுகைகளை இந்த மார்ச் மாதத்தை முன்னிட்டு ரிவோல்ட் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

ஒபென் ரோர் இ.இசட் (Oben Rorr EZ): நகரத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற எலெக்ட்ரிக் பைக்காக வடிவமைக்கப்படும் இது 2.6kWh, 3.4kWh மற்றும் 4.4kWh என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 2.6kWh பேட்டரி உடன் இந்த எலெக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சமாக தற்சமயம் உள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒபென் ரோர் இ.இசட் சிக்மா ரூ.1.27 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

cheapest electric motorcycles in india

ரிவோல்ட் ஆர்வி பிளேஸ் எக்ஸ் (Revolt RV BlazeX): இந்த மார்ச் மாதத்தில் ரிவோல்ட்டின் சலுகை உடன் கிடைக்கும் எலெக்ட்ரிக் பைக் இதுவாகும். மேலே கண்ட ஆர்வி1 எலெக்ட்ரிக் பைக்கை காட்டிலும் பவர்ஃபுல்லான பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றதாக விளங்கும் ஆர்வி பிளேஸ் எக்ஸ்-இல் ரேஞ்சும் அதற்கேற்ப 150கிமீ என்கிற அளவில் கிடைக்கிறது. மேலும், அதற்கேற்ப இதன் விலையும் ரூ.1.20 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

ரிவோல்ட் ஆர்வி400 பி.ஆர்.இசட் (Revolt RV400 BRZ): மேலே கண்ட ஆர்வி பிளேஸ் எக்ஸ் பைக்கின் அதே எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் செயல்திறன் உடன் கிடைத்தாலும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சற்று அதிகமாக ரூ.1.29 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. அதற்கேற்ப இதன் தோற்றமும் கொஞ்சம் ஸ்டைலாக வடிவமைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு தற்சமயம் பெரிய அளவில் மார்க்கெட் இல்லையென்றாலும், வரும் காலங்களில் அவற்றிற்கான மார்க்கெட் விரிவடைவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கு, ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast-charging) உள்கட்டமைப்பு வசதியை நாடு முழுவதும் ஏற்படுத்துவது மட்டுமின்றி, எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் தொழிற்நுட்பத்திலும் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள எலெக்ட்ரிக் பைக்குகளுள் சிறந்தது என்று பார்த்தால், ஓலா எலெக்ட்ரிக்கின் ரோட்ஸ்டர் எக்ஸ் என சொல்லலாம். ஏனெனில், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஓலாவிற்கு பெரிய அளவிலான சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க் (Sales & Service Network) உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, March 16, 2026, 13:43 [IST]
English summary
Cheapest electric motorcycles in india ola roadster x to oben rorr ez check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+