வீட்டிற்கு ஒன்று கட்டாயம் வாங்கி போட வேண்டிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! மொபைல் போனை வெளிய எடுக்க வேண்டியதில்ல!
பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உடன் ஒப்பிடுகையில் இன்றைய கால எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) தோற்றத்திலும் சரி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் சரி வேற லெவல் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. வீட்டிலேயே சார்ஜ் செய்வதன் மூலம் பெட்ரோல் செலவை குறைப்பது மட்டுமின்றி, தொழிற்நுட்ப ரீதியாகவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறு, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மூலமாக இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நுழைந்த அட்வான்ஸ்டு தொழிற்நுட்பம், டிஎஃப்டி தொடுத்திரை டிஸ்பிளே (TFT Touchscreen Display) ஆகும். ஸ்கூட்டர்களில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் ஸ்பீடோ மீட்டர், டச்சோ மீட்டர் வழங்கிய காலம் போய், ஸ்மார்ட் போன் (Smartphone) உடன் இணைக்கக்கூடிய இவ்வாறான டிஸ்பிளேக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அம்சத்துடன் கிடைக்கும் 5 சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்பிள்-ஒன் (Simple One): ஸ்டைலில் மட்டுமின்றி, தொழிற்நுட்ப அம்சங்களிலும் சிறந்து விளங்கும் சிம்பிள் ஒன் 7-இன்ச் டிஎஃப்டி டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உடன் கிடைக்கிறது. இது, க்ரூஸ் கண்ட்ரோல், டிராக்ஷன் கண்ட்ரோல், வாகனம் திருடு போவது மற்றும் டோ செய்து கொண்டு செல்லப்படுவது குறித்த எச்சரிக்கை உள்ளிட்ட அட்வான்ஸான வசதிகளை வழங்குகிறது. 5kWh மற்றும் 4.5kWh பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.69 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
டிவிஎஸ் ஐக்யூப் எஸ்டி (TVS iQube ST): மேற்கூறப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று, டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் டாப் எஸ்டி வேரியண்ட்டில் தான் பெரிய 7 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது. இது, மியுசிக் கண்ட்ரோல், அழைப்பு எச்சரிக்கைகள், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் மற்றும் ஒவ்வொரு திருப்புதலுக்கும் வழிக்காட்டி உள்ளிட்டவற்றை வழங்குகிறது. அளவில் பெரியதான 5.3kWh பேட்டரி உடன் கிடைக்கும் ஐக்யூப் எஸ்டி ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.62 லட்சமாக உள்ளது.

ஓலா எஸ்1 புரோ ஜென் 3 (Ola S1 Pro Gen 3): ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அனைத்து எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் டிஸ்பிளே உடன் மொபைல் போனை இணைக்க முடிகிறது. ஆனால், டச் ஸ்க்ரீன் ஆனது எஸ்1 புரோ மற்றும் எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த எஸ்1 ஸ்கூட்டர்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.1.54 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
ஏத்தர் 450எக்ஸ் (Ather 450X): ரூ.1.46 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7-இன்ச் டிஎஃப்டி டச் ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது. இது, மேஜிக் ட்விஸ்ட், பார்க் அசிஸ்ட், மல்டி-மோட் டிராக்ஷன் கண்ட்ரோல், ஆட்டோ ஹோல்ட் வசதி உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta): இந்தியாவில் டிஎஃப்டி டச் ஸ்க்ரீன் உடன் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுவாகும். மேலும், இந்தியாவில் மிக பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றான இதில் தொடுவதன் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய டிஸ்பிளே 7 இன்ச்சில் வழங்கப்படுகிறது.
ஆனால், ரிஸ்டாவின் இசட் வேரியண்ட்டில் மட்டுமே; எஸ் வேரியண்ட்டில் இல்லை. ஸ்மார்ட்போன் உடன் இணைக்கக்கூடிய இந்த டிஸ்பிளேவும் கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் போலவே இயங்குகிறது. ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை துவங்கினாலும், ரிஸ்டா இசட் வேரியண்ட்டின் விலை ரூ.1.33 லட்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டச் ஸ்க்ரீன் ஆனது மாடர்ன் கார்களில் வழங்கப்படும் அம்சமாகும். கார்களில் இன்னும் அளவில் பெரியதாக வழங்கப்படுகின்றன என்றாலும், ரூ.1- 2 லட்சத்தில் கிடைக்கும் ஸ்கூட்டர்களில் இத்தகைய வசதி வழங்கப்படுவது ஆச்சிரியமான விஷயமாகும். இதில் எங்களது சாய்ஸ் எதுவென்றால், குறைந்த விலையில் கிடைக்கும் ஏத்தர் 450எக்ஸ் ஆகும். ஏனெனில், இது செயல்திறன்மிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications








