சென்னையில் பெருசா வேலைக்கு ஆகல... பெங்களூருவுக்கு தாவிய பைக் கம்பெனி! முதல் ஷோரூம் திறப்பு
சென்னையை சேர்ந்த ராப்டீ.HV (Raptee HV) நிறுவனம் தனது மார்க்கெட்டை பெங்களூருவுக்கு விரிவுப்படுத்தி உள்ளது. இதன்படி, டி30 என்கிற எலெக்ட்ரிக் கார் DNA-ஐ கொண்ட இந்தியாவின் முதல் மோட்டார்சைக்கிளை இந்த நிறுவனம் பெங்களூருவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சென்னையை தாண்டி முதல்முறையாக வெளி நகரத்தில் கால்பதித்துள்ள ராப்டீ.HV தனது டெக்னாலஜி பிளாட்ஃபாரத்தை பெங்களூருவாசிகளுக்கும் வழங்க தயாராகி உள்ளது. கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டுவரும் ராப்டீ.HV நிறுவனத்தின் ஐடியாவே மொத்தமாக வேறுப்பட்டது ஆகும். எலெக்ட்ரிக் கார் அல்லது பைக்கை உருவாக்காமல் இரண்டும் கலந்த கலவையில் வாகனங்களை உருவாக்கி வருகிறது.

அதாவது, எலெக்ட்ரிக் காரின் DNA-இல் மோட்டார்சைக்கிள்கள் ஆகும். இதற்காக HV-TEC என்கிற பிளாட்ஃபாரத்தை ராப்டீ.HV நிறுவனம் உருவாக்கி வைத்துள்ளது. எலெக்ட்ரிக் கார்களின் அம்சங்களை பைக்கில் வழங்கும்போது அவற்றை பரப்பி வழங்க முடியாது. அதற்கு பதிலாக மேலே மேலே அடுக்கியது போல் வழங்க வேண்டியிருக்கும்.
அதாவது, பேட்டரி சிஸ்டங்கள், பவர் எலெக்ட்ரானிக்ஸ், மென்பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை குறுகிய இடத்திற்குள் வழங்குவது சவாலான காரியம் ஆகும். இதனை ராப்டீ-HV நிறுவனம் எளிதாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக 200க்கும் அதிகமான காப்புரிமைகளை இந்த நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் நுழைந்துள்ள ராப்டீ-HV நிறுவனம் அங்கு தனது முதல் மையத்தை திறந்துள்ளது. இந்த மையம் திறப்பு நிகழ்ச்சியில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு நேரில் கலந்துக் கொண்டது. இந்த ஷோரூமில் டி30 பைக்கை டெஸ்ட் ரைடு செய்து பார்ப்பது மட்டுமின்றி, அதன் சர்வீஸ்களையும் பெறலாம் என ராப்டீ-HV நிறுவனம் தெரிவித்துள்ளது.
HV-TEC பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்ட ராப்டீ-HV டி30 எலெக்ட்ரிக் பைக் ஆனது CCS2 தரத்தில் சார்ஜிங் ஏற்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக, நாட்டில் உள்ள 30 ஆயிரத்திற்கும் அதிகமான சார்ஜிங் நிலையங்களில் இந்த மோட்டார்சைக்கிளை சார்ஜ் செய்ய முடியும். அதேநேரம், வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.
ரூ.2.39 லட்சத்தில் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட டி30 எலெக்ட்ரிக் பைக் நிஜ உலகில் 150கிமீ வரையில் ரேஞ்சை வழங்கும் என ராப்டீ-HV நிறுவனம் தெரிவிக்கிறது. அதாவது, இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். 0-இல் இருந்து மணிக்கு 60கிமீ வேகத்தை இந்த பைக்கில் எட்ட வெறும் 3.5 வினாடிகளே போதுமானது ஆகும்.
இந்த வாகனத்திற்கு 3 வருட உத்தரவாதம் வழங்கப்படும் நிலையில், இதன் பேட்டரிக்கு 8-வருட/ 80,000 கிமீ உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இது இல்லாமல், பிரத்யேகமான கஸ்டமர் சப்போர்ட் மற்றும் பயணத்தின்போது தேவைப்படும் உதவிகளையும் டி30 எலெக்ட்ரிக் பைக்கை வாங்கும் கஸ்டமர்களுக்கு ராப்டீ-HV நிறுவனம் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் இந்த ஆண்டு துவக்கத்தில் வெற்றிக்கரமாக தனது வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய துவங்கிய ராப்டீ-HV நிறுவனம் தற்போது பெங்களூருவிலும் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது. இந்தியாவின் மென்பொருள் தலைநகரமாக விளங்கும் பெங்களூரு ஆனது சென்னையை காட்டிலும் ராப்டீ-HV நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் முக்கிய சந்தையாக விளங்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications