பைக்கிற்கு 10 வருஷம் வாரண்டி கொடுக்குறது எல்லாம் பெரிய மனசு வேணும்! 300சிசி ஜாவா பைக்கிற்கு இந்த விலை கம்மி!
நியோ-கிளாசிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் முன்னோடியாகத் திகழும் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Yezdi Motorcycles) நிறுவனத்தில் இருந்து 'ஜாவா 42' பைக்கின் புதிய 'ஐவோரி எடிஷன்' (Ivory Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இனிமையான, பளபளப்பற்ற புதிய நிறமாகும். இதனை 'பாஸ்டல் ஐவரி' (Pastel Ivory) என அழைக்கின்றனர்.
2026ஆம் ஆண்டிற்கான புதிய வண்ணத் தேர்வாக இந்த நிறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ வடிவமைப்பு மற்றும் '42' எண் கொண்ட டெக்கால்கள், புதிய ஜாவா 42 ஐவோரியின் நேர்த்தியான அழகை மேலும் எடுத்துரைக்கின்றன. தனித்துவத்தை விரும்பும் இளைஞர்களுக்கான ஒரு அடையாளமாக, ஜாவா 42 மோட்டார்சைக்கிள் 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் வடிவமைப்பு மற்றும் தனித்துவமான பாஸ்டல் நிறங்கள், அப்போதைய ஒற்றை வண்ண கிளாசிக் பைக்குகள் பிரிவில் ஒரு புதிய அலையை உருவாக்கின. ஜாவா 42 பைக்கின் கவர்ச்சிகரமான கலர் ஆப்ஷன்கள் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் குறிப்பாக இளம் தலைமுறையினரை கவர்ந்துவரும் நிலையில், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2026 ஜாவா 42 ஐவோரி மோட்டார்சைக்கிளின் பின்புற ஃபெண்டர் மற்றும் பெட்ரோல் டேங்க் பகுதியில் பழமையான ஆங்கில எழுத்துருவில் 'forty-two' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
புதிய ஜாவா 42 ஐவோரி பைக்கின் பக்கவாட்டுப் பேனல்கள் முற்றிலும் புதிய வடிவமைப்பில் உள்ளன. ஹெட்லைட் நேசல் உடன் சேர்ந்து, '42' என்ற எண் தனித்துவமாக மின்னுவது, இந்த பாஸ்டல் ஐவரி நிறத்தை மேலும் சிறப்பாக்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 1960கள் மற்றும் 70களில் உலகப் புகழ்பெற்ற டிராக் பைக்குகளை நினைவுக்கூறும் விதமாக, புதுமையான டெக்கால்களுடன் கிளாசிக் ரேசிங் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது.
அதன் அடையாளமான கண்ணீர்த்துளி வடிவ பெட்ரோல் டேங்கில் கட்டக்கட்டமான கிராஃபிக் டிசைன் இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கின் வடிவமைப்பு, ஐல் ஆஃப் மேன் TT காலத்தின் பந்தய பைக்குகளை நினைவூட்டுகிறது. பைக்கில் இருந்து வெளியே நீண்டுக் கொண்டு இருப்பது போன்ற இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் பைக்கின் நேர்த்தியான நியோ-கிளாசிக் தோற்றம் ஆனது வரலாற்று அம்சங்களுடன் சமகால கைவினையை இணைப்பதில் ஜாவா பிராண்டின் நற்பெயரை உறுதிப்படுத்துகின்றன.
ஜாவா 42 ஐவோரி எடிஷனில் சக்திவாய்ந்த 294சிசி லிக்யுடு-கூல்டு J-பாந்தர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 27.32 பிஎஸ் ஆற்றலையும், 26.84 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இது மற்ற 350சிசி மோட்டார்சைக்கிள்களை விட 40 சதவீதம் வரை அதிக ஆற்றலை வழங்குகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
பைக்கின் NVH நிலைகளின் மேம்பாடு, உகந்த கியரிங் மற்றும் த்ரோட்டில் மேப்கள், பிரிவில் மற்ற எந்த பைக்கிலும் இல்லாத அசிஸ்ட் & ஸ்லிப்பர் (A&S) கிளட்ச், சிறந்த பிரேக்கிங் அமைப்பு மற்றும் இந்தியாவின் பல்வேறு விதமான சாலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் ஆகியவை ஓட்டுநர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகின்றன.
இது, டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான ரூ.1,84,950 என்கிற கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கிறது. பிரீமியம் தரத்திலான நுணுக்கமான வேலைப்பாடுகள், தனித்துவமான ஐவோரி ஃபினிஷ், சக்திவாய்ந்த செயல்திறன், சிறந்த ரைடிங் பொசிஷன் ஆகியவை பைக்கின் விலையை விட மிக அதிகமான மதிப்பை அளிக்கின்றன. 2026 ஜாவா 42 ஐவோரி மோட்டார்சைக்கிள், இந்தியா முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஜாவா யெஸ்டி டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கிறது.
ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் சிக்கலற்ற உரிமையை மையமாகக் கொண்ட 'உரிமையாளர் உறுதித் திட்டத்தை' தொடர்ந்து வழங்குகிறது. இதில் 4 ஆண்டுகள்/ 50,000 கி.மீ ஸ்டாண்டர்ட் வாரண்டி, 6 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆப்ஷன்கள், 8 ஆண்டுகள் வரை சாலையோர உதவி மற்றும் நாடு முழுவதும் விரிவான 5 ஆண்டுகள் AMC ஆகியவை அடங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஜாவா 42 ஐவரி மோட்டார்சைக்கிள், நியோ-கிளாசிக் ஸ்டைலிங் மற்றும் செயல்திறன் பொறியியலை மிகவும் கவர்ச்சியான தொகுப்பாக வழங்குகிறது. ஜாவா 42 ஏற்கனவே தனது கவர்ச்சிகரமான சாலை இயக்கம் மற்றும் வெளிப்படையான கலர் ஆப்ஷன்களுடன் நியோ-கிளாசிக் பிரிவில் ஒரு புதிய தடம் பதித்துள்ளது.


Click it and Unblock the Notifications








