அட்டகாசமான அம்சங்களோட அடிமாட்டு விலைக்கு வருது புது பைக்.. ஷோரூம்ல இப்போவே மக்கள் குவிய ஆரம்பிச்சுட்டாங்க!
ஏப்ரல் 23ம் தேதியன்று புதிய ஸ்கிராம்பிளர் (Scrambler) வகை பைக் மாடலை வெளியிடவுள்ளது கிளாஸிக் லெஜெண்டஸ். மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் தான் இந்தியாவில் தற்போது ஜாவா, யெஸ்டி மற்றும் BSA ஆகிய பழைய கிளாஸிக் பிராண்டுகளின் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
புதிதாக ஸ்கிராம்பிளர் ஒன்றை மட்டுமே வெளியிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் கிளாஸிக் லெஜெண்டஸ், அது எந்த மாடல் பைக் என்பதைத் தெரிவிக்கவில்லை. யெஸ்டி பிராண்டில் கீழ் மூன்று பைக் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்று ஸ்கிராம்பிளர் வகையைச் சேர்ந்தது. BSA பிராண்டின் கீழ் புதிய ஸ்கிராம்பிளர் வகை பைக் மாடலை கடந்தாண்டு தான் யுகே-யில் அறிமுகம் செய்தது அந்நிறுவனம்.

யெஸ்டியின் ஸ்கிராம்பிளர் பைக் மாடலை விரைவில் கிளாஸிக் லெஜெண்ட்ஸ் அப்டேட் செய்யவிருப்பதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியானது. மேலும், யெஸ்டியின் மற்ற இரண்டு பைக் மாடல்களான ரோட்ஸ்டர் மற்றும் அட்வென்சர் ஆகியவற்றையும் கடந்தாண்டு அப்டேட் செய்தது கிளாஸிக் லெஜெண்ட்ஸ். இன்னும் ஸ்கிராம்பிளர் மாடல் மட்டும் தான் அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது.
எனவே ஏப்ரல் 23ம் தேதியன்று யெஸ்டி ஸ்கிராம்பிளரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனை கிளாஸிக் லெஜெண்ட்ஸ் வெளியிடுகிறதா அல்லது BSA-வின் புதிய ஸ்கிராம்பிளர் வகை பைக் மாடலை இந்தியாவிற்குக் கொண்டு வருகிறதா என்பது குறித்த தகவல்கள் இப்போது இல்லை. அதற்கு வெளியீடு வரை நாம் காத்திருக்க வேண்டும். இந்த இரண்டு பைக் மாடல்களைக் குறித்த முன்னுரைகளையும் இங்கே நாம் பார்க்கலாம்.

யெஸ்டி ஸ்கிராம்பிளர்: 350 சிசி பிரிவில் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் விற்பனையில் இருக்கும் ஒரு ஸ்கிராம்பிளர் வகை பைக் யெஸ்டி ஸ்கிராம்பிளர். ஸ்டைலான மற்றும் தனித்துவமான நிறங்களைக் கொண்ட இந்த பைக் மாடலை தற்போது ரூ.1.95 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இப்போதே கிளாஸியான மற்றும் ஸ்டைலான பைக்காக இருக்கும் இதனை கூடுதல் அம்சங்களைக் கொடுத்து கிளாஸிக் லெஜெண்ட்ஸ் மெருகேற்றலாம்.
ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்ட யெஸ்டி ஸ்கிராம்பிளர் பைக் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி பைக்கின் எடை சற்று குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது. இத்துடன் க்விக்ஷிப்டர் உள்ளிட்ட வசதிகளையும் புதிய ஸ்கிராம்பிளர் பெறலாம்.
இந்த ஸ்கிராம்பிளர் பைக்கில் 334 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 28.7 hp பவர் மற்றும் 28.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மெக்கானிக்கலாக புதிய ஸ்கிராம்பிளரில் எந்த மாற்றங்களும் செய்யப்பட்டிருக்காது என்றே தெரிகிறது. புதிய ஸ்கிராம்பிளரில் புதிய டிசைனையும் நாம் எதிர்பார்க்கலாம்.
BSA ஸ்கிராம்பிளர் 650: சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியாவில் BSA பிராண்டின் கீழ் முதல் தயாரிப்பாக கோல்டு ஸ்டார் 650 பைக்கை கிளாஸிக் லெஜெண்ட்ஸ் வெளியிட்டது. அந்த ரோட்ஸ்டர் வகை பைக்கை அடிப்படையாகக் கொண்ட ஸ்கிராம்பிளர் 650 பைக் மாடல் கடந்தாண்டு யுகே-யில் வெளியிடப்பட்டது. அதே பைக்கை கிளாஸிக் லெஜெண்ட்ஸ் இந்தியாவிற்கும் கொண்டு வரலாம் என அப்போதே கூறப்பட்டது.
கோல்டு ஸ்டார் 650-யின் அதே பிளாட்ஃபார்மிலேயே புதிய ஸ்கிராம்பளர் 650 பைக் மாடலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்கிராம்பிளர் வகை பைக்கிற்கு ஏற்ப, வீல்கள், சஸ்பென்ஷன் மற்றும் டிசைனில் மாற்றங்களை இந்த ஸ்கிராம்பிளர் 650 மாடல் கொண்டிருக்கும். வசதிகள் மற்றும் இன்ஜின் ஆகிய அம்சங்கள் கோல்டு ஸ்டார் 650-யில் இருப்பதே ஸ்கிராம்பிளரிலும் இருக்கும்.
இன்ஜினைப் பொறுத்தவரை, 652 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினே ஸ்கிராம்பிளர் 650 பைக்கிலும் இருக்கும். இந்த இன்ஜினானது 6,500 rpm-ல் 45 hp பவர் மற்றும் 4,000 rpm-ல் 55 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோல்டு ஸ்டார் 650 பைக்கானது இந்தியாவில் ரூ.3.22 லட்சம் முதல் ரூ.3.46 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்கிராம்பிளர் 650-யும் இதனையொட்டி விலையிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டில் எது அறிமுகப்படுத்தப்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம் தான். இருந்தாலும் ஸ்கிராம்பிளர் 650 பைக் வெளியானால் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதுவொரு புதுவரவாக இருக்கும். யெஸ்டி ஸ்கிராம்பிளர் அப்டேட் செய்யப்படும் பட்சத்தில் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வு கிடைக்கும். கிளாஸிக் லெஜெண்ட்ஸ் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








