மத்த ஸ்கூட்டர்களை வாங்குறதுக்கு முன்ன இந்த ஸ்கூட்டரையும் ஒரு தடவை பாருங்க!

ஸ்கூட்டர் ஒன்று வாங்க வேண்டும், ஆனால் எல்லோரும் வைத்திருப்பதைப் போல இல்லாமல் தனித்துவமானதாக இருக்க வேண்டும், வசதிகளிலும் பெரிய அளவில் குறை இருக்கக்கூடாது, பிராக்டிகலான குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற கிளாஸியான ஸ்கூட்டராக இருக்க வேண்டும், எதை வாங்குவது? ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரை பரிசீலனை செய்யலாம்.

இந்தியாவில் இப்போது டாப் 3 இடங்களில் அதிகம் விற்பனைாகும் ஸ்கூட்டர்கள் என்றால் அவை ஆக்டிவா, ஜூப்பிட்டர் மற்றும் அக்சஸ் தான். ஆக்டிவா ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் யூனிட்டுகள் அளவிற்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ந்து ஜூப்பிட்டர் மற்றும் அக்சஸ் ஸ்கூட்டர்கள் முறையே 1 லட்சம் யூனிட்டுகளுக்கும் மேல் மற்றும் 75,000-திற்கு மேல் விற்பனையாகி வருகின்றன.

Hero Destini 125

இவற்றுக்குப் போட்டியாக ஹீரோ விற்பனை செய்து வரும் ஸ்கூட்டர் தான் டெஸ்டினி. பல ஆண்டுகளாக இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் தற்போது புதுமையான வடிவில் மேலே நாம் பார்த்த கிளாஸியான, அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களுக்கு இணையான பெர்ஃபாமன்ஸ் வழங்கும் திறனுடன் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டெஸ்டினி ஸ்கூட்டரின் விற்பனையும் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது வேகமாக உயர்ந்து வருகிறது.

110 சிசி மற்றும் 125 சிசி என இரண்டு இன்ஜின்களுடனும் டெஸ்டினி ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில் இங்கே நாம் பார்க்கப் போவது 110 சிசி இன்ஜின் கொண்ட டெஸ்டினி ஸ்கூட்டரைப் பற்றித் தான். ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டர் மாடலானது 73,300 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆக்டிவா மற்றும் ஜூப்பிட்டர் 110 சிசி ஸ்கூட்டர்களை விட இது சில ஆயிரங்கள் குறைவு தான்.

Hero Destini 110

இந்த ஸ்கூட்டரில் 110.9 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜினானது 8 hp பவர் மற்றும் 8.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. அனைத்து வகையான பயணங்களிலும் போதுமான பவரை வழங்கும் இன்ஜினாகவே இந்த 110 சிசி இன்ஜின் இருக்கிறது. ஏற்றமான சாலைகளிலும் ஸ்மூத்தாக எந்தப் பிரச்சினையும் இன்றி ஏறுகிறது. இன்ஜினில் குறை சொல்வதற்கு ஏதுமில்லை.

ஒரு ஸ்கூட்டருக்கான முக்கியமான விஷயங்களில் ஒன்று பிராக்டிகாலிட்டி. அந்த வகையில் மிகவும் பிராக்டிகலான ஸ்கூட்டராகவே இந்த டெஸ்டினி 110 ஸ்கூட்டர் இருக்கிறது. இதன் ஃபிளாட்டான ஃபுட்போர்டில் ஒரு முழு சிலிண்டர் அல்லது இரண்டு வாட்டர் கேன்களை எளிதாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு இடம் இருக்கிறது. நன்கு பேடு செய்யப்பட்ட சீட்கள் சொகுசான பயணத்தை வழங்குகின்றன.

பிளாஸ்டிக் பேக்குகள் அல்லது வேறு பைகளை மாட்டிக் கொள்வதற்கு ஏப்ரலில் கொக்கி ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே போன் அல்லது வேறு பொருட்களை வைத்துக் கொள்வதற்கு ஓப்பன் கிளவ்பாக்ஸ் ஒன்று இருக்கிறது. 19 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜை இந்த டெஸ்டினி 110 ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. அந்த ஸ்டோரேஜில் ஒரு அரைமுக ஹெல்மெட்டை மட்டும் வைக்கலாம்.

770 மிமீ உயரத்துடன், 114 கிலோ எடையைக் கொண்டுள்ளது இந்த டெஸ்டினி 110. சீட் உயரம் அனைவருக்கும் ஏற்றதாகவே இருக்கும். எடை இன்னும் சற்றுக் குறைவாக இருந்திருக்கலாம். இல்லதரசிகள் மற்றும் முதியவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும். இந்த ஸ்கூட்டரில் நிறைய மெட்டல் பாகங்களை ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறது ஹீரோ. இதன் காரணமாக எடை அதிகரித்திருக்கலாம்.

நகரங்களில் பயன்படுத்துவதற்கு மிகச் சிறப்பான ஸ்கூட்டர் மாடல்கள் ஒன்றாக, மேலே குறிப்பிட்ட அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுக்கு இணையான ஒரு தயாரிப்பாக இந்த ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டரை கண்டிப்பாகக் கூற முடியும். ப்ரீமியமான ஸ்விட்ச்கியர் மற்றும் பேக்ரெஸ்ட் என பிற அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் சிறப்பாகவே இருக்கிறது. இரண்டு பக்கமும் 12 இன்ச் வீல்களுடன் டியூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பஞ்சர் குறித்து பெரிதாகக் கவலைப்பட வேண்டிதில்லை.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் சிங்கிள் ஷாக் அப்சார்பர் ஒரு பக்கம் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேடு பள்ளங்களில் குறை சொல்ல முடியாத அளவிற்கு இவை வேலை செய்கின்றன. இந்த ஸ்கூட்டரில் டிஜி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. வேகத்தில் அனலாக் இருக்கும் நிலையில், ஓடோமீட்டர், ட்ரப் மீட்டர், எரிபொருள் அளவை ஆகியவை டிஜிட்டலாக சிறிய LCD திரையில் காட்டப்படுகிறது.

இறுதியாக ஸ்கூட்டரின் டிசைனப் பற்றியும் பேசி விடுவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு விற்பனையில் இருந்த டெஸ்டினி ஸ்கூட்டருக்கும், தற்போது விற்பனையில் இருக்கும் டெஸ்டினி ஸ்கூட்டருக்கும் இடையிலான பிரதான மாற்றம் என்றால் அது டிசைன் தான். முந்தைய ஸ்கூட்டரின் டிசைன் அவ்வளவு விரும்பத்தக்கதாக இருக்காது. தற்போதைய டிசைன் பார்த்தவுடன் பிடித்துப் போகும் வகையில் ரெட்ரோ வடிவமைப்பில் இருக்கிறது. இதனாலேயே டாப் 10 ஸ்கூட்டர்கள் பட்டியலிலும் டெஸ்டினி இணைந்திருக்கிறது.

டெஸ்டினி 110 மற்றும் டெஸ்டினி 125 ஆகிய இரண்டு ஒன்று போலான டிசைனையே கொண்டுள்ளன. இந்த டிசைனில் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு ஏதுமில்லை. VX மற்றும் ZX என இரண்டு வேரியன்ட்களாக டெஸ்டினி 110 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. VX வேரியன்டானது எட்டர்னல் ஒயிட், நெக்சஸ் ப்ளூ மற்றும் மேட் ஸ்டீல் கிரே ஆகிய மூன்று நிறங்களையும், ZX வேரியன்டானது குரூவி ரெட், நெக்சஸ் ப்ளூ மற்றும் அக்வா கிரே ஆகிய மூன்று தனித்துவமான நிறங்களையும் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சற்று குறைவான விலையில் மற்றவர்களிடம் இல்லாததைப் போல தனித்துவமான 110 சிசி ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றால் இந்த டெஸ்டினி 110 ஸ்கூட்டரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஏன் இதனை வாங்கினோம் என்று இந்த ஸ்கூட்டர் ஒரு போதும் நினைக்க வைக்காது என்பது மட்டும் உறுதி. 110 சிசி இன்ஜின் பவர் போதவில்லை என்றால் டெஸ்டினி 125 ஸ்கூட்டரை முயற்சி செய்யலாம்.

எரிபொருள் ஸ்கூட்டர்களில் வேறு ஏதாவது ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்று திட்டம் வைத்திருப்பவர்கள் கூட ஹீரோவின் இந்த டெஸ்டினி ஸ்கூட்டரை ஒரு முறை டெஸ்ட் டிரைவ் செய்யலாம். ஏனெனில் முன்பு விற்பனையில் இருந்த மாடலுக்கும் இப்போதுக்கும் நிறையவே மாறியிருக்கிறது. ஒரு முறை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு இதனை வாங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

Article Published On: Monday, May 18, 2026, 10:22 [IST]
English summary
Consider this hero destini 110 also before buying other options like activa or jupiter
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+