கோலம் போட்டு வச்ச மாதிரி டிசைனுடன் ஒரு 125 சிசி ஸ்கூட்டர்.. பார்க்கவே சூப்பரா இருக்கே!

இந்தியாவில் இத்தாலிய நிறுவனமான வெஸ்பா விற்பனை செய்து வரும் சில தனித்துவமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று வெஸ்பா கலா (Vespa Qala). ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்து வந்த வெஸ்பா டெக் ஸ்கூட்டரின் அடிப்படையில், இந்த வெஸ்பா கலாவை சிறப்பு எடிஷன் மாடலாகவே அந்நிறுவனம் வெளியிட்டது. பார்ப்பதற்கே மிகவும் அழகாகவும், ஸ்டைலாகவும், கிளாஸிகாவும் இருக்கும் ஒரு சில ஸ்கூட்டர மாடல்களில் இந்த வெஸ்பா கலாவும் ஒன்று.

இந்த கலா சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரின் சிறப்பம்சமே அதன் மேல் இருக்கும் டிசைன் தான். முழுவதுமாக வெள்ளை நிற பாடி பேனல்கள் மீது வீட்டு வாசலில் கோலம் போடுவது போலான டிசைன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இது பார்ப்பதற்கு மிகவும் தனித்துவமாக இருப்பதுடன், ஸ்டைலாகவும் டிசைனாகவும் இருக்கிறது. இந்த டிசைனைத் தவிர்த்து வெஸ்பாவின் டெக் ஸ்கூட்டருக்கும் இதற்கும் இடையே வசதிகள் மற்றும் பவர்ட்ரெயின் வேறு எந்த வேறுபாடுகளும் இல்லை.

Vespa Qala Special Edition Scooter

125 சிசி மற்றும் 150 சிசி என இரண்டு விதமான இன்ஜின்களுடனும் இந்த வெஸ்பா கலா சிறப்பு எடிஷன் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனித்துவனமான டிசைன் என்னும் போது விலையும் கொஞ்சம் அதிமாகத் தானே இருக்கும். 125 சிசி இன்ஜின் கொண்ட வெஸ்பா கலா ஸ்கூட்டரானது 1.82 லட்சம் என்ற விலையையும், 150 சிசி இன்ஜின் கொண்ட ஸ்கூட்டரா 1.95 லட்சம் ரூபாய் என்ற விலையையும் கொண்டுள்ளது.

வெஸ்பா கலா 125 ஸ்கூட்டரில் 124.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 7,000 rpm-ல் 9.3 hp பவர் மற்றும் 5,600 rpm-ல் 10.1 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினானது CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Vespa Qala Special Edition Scooter

வெஸ்பா கலா 150 ஸ்கூட்டரில் 149.5 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 7,500 rpm-ல் 11.2 hp பவர் மற்றும் 6,100 rpm-ல் 11.66 Nm டார்க்கை உற்பச்சி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினும் CVT டிரான்ஸ்மிஷனுடனே இணைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் மற்றும் சேஸி ஆகியவை இரண்டு ஸ்கூட்டர்களிலும் ஒன்று தான். முன்பக்கம் லீடிங் லிங்க் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு 125 சிசி ஸ்கூட்டரில் முன்பக்கம் 200 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கம் 140 மிமி டிரம்முடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே 150 சிசி ஸ்கூட்டரில் அதே 200 மிமீ டிஸ்க் மற்றும் 140 மிமீ டிரம் செட்டப்புடன் சிங்கிள் சேனல் ABS கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஸ்கூட்டர்களிலுமே முன்பக்கம் 11 இன்ச் மற்றும் பின்பக்கம் 10 இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அலாய் வீல்களுமே பிரான்ஸ் நிறத்தில் பார்த்தவுடன் கவரும் வகையில் தனித்துவமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 770 மிமீ சீட் உயரம், பெரும்பான்மையானவர்கள் ஸ்கூட்டரை இலகுவாகப் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது. இத்துடன் 7.4 லிட்டர் எரிபொருள் டேங்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு எடிஷன் என்பதால் இந்த ஒரு டிசைன் மற்றும் நிறத்தில் மட்டுமே இந்த வெஸ்பா கலாவை வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கிளாஸியான டிசைனுடன் விற்பனை செய்யப்படும் சில ஸ்கூட்டர் மாடல்களில் வெஸ்பா கலாவும் ஒன்றாக இருக்கிறது. வேறு யாரிடமும் இல்லாத வகையில் தனித்துவனமான ஒரு ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்கள் இதனைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அதற்கேற்ப கூடுதல் விலையைக் கொடுக்க வேண்டும். 125 சிசி ஸ்கூட்டருக்கு 1.80 லட்சம் ரூபாய் என்பது கொஞ்சம் அதிக விலை தான்.

Article Published On: Wednesday, June 17, 2026, 19:21 [IST]
English summary
Did you know about vespa qala special edition 125 cc scooter on sale in india
மேலும்... #vespa #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out