E85 பெட்ரோலைப் பயன்படுத்துறதுல இத்தனை பிரச்சினை இருக்கா.. இதையெல்லாம் சொல்லவே இல்லையே!

தற்போது ஆட்டோமொபைல் உலகில் பெரிய பேசுபொருள் எத்தனால் கலந்த பெட்ரோல் தான். தற்போது 20 சதவீதம் வரை எத்தனால் கலப்பு கொண்ட E20 பெட்ரோல் தான் ஸ்டாண்டர்டாக அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இத்துடனேயே 85 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட E85 எரிபொருள் பெட்ரோலின் விற்பனையும் தொடங்கப்பட்டு விட்டது. மேலும், E85 எரிபொருளில் இயங்கும் வகையிலான வாகனங்களின் விற்பனையும் வெகு வேகமாக தொடங்கப்பட்டு விட்டது.

ஹீரோ நிறுவனம் E85 எரிபொருளில் இயங்கும் வகையில் ஃஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் மற்றும் HF டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஆகிய பைக்குகளை இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. மாருதி நிறுவனம் E85 பெட்ரோலில் இயங்கும் வகையிலான வேகன் ஆர் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் காரை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. நம் கண் முன்னேயே அடுத்த கட்ட நகர்வுகளுக்கான காய்கள் நகர்த்தப்படத் தொடங்கிவிட்டன.

Hero Honda Splendor Plus Flex Fuel

E85 பெட்ரோல் பயன்படுத்துவதனால் நமக்கு நன்மையா? தீமையா? நாட்டுக்கும், சுற்றுச்சூழுலுக்கும் நன்மை என்று தான் சொல்லப்படுகிறது. எரிபொருள் இறக்குமதி செலவு குறையும், பெட்ரோலை விட குறைவான காற்று மாசுவை வெளியிடும், எல்லாம் சரி தான். ஆனால் இதற்கான பொருளாதார பாரத்தை யாராவது ஒருவர் சுமக்க வேண்டுமில்லையா. அது இந்த சங்கிலியின் இறுதியில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தான், அதாவது நாம் தான்.

எந்தவொரு விஷயத்தையும் ஒப்பிட்டால் உண்மை புலப்பட்டு விடும். E20 மற்றும் E85 எரிபொருளைப் பயன்படுத்துவதனால் எவ்வளவு செலவு வித்தியாசம் ஏற்படுகிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிந்து விடும். இதற்காக கடந்தாண்டில் இருந்தே விற்பனையில் இருக்கும் சுஸூகியின் ஜிக்ஸர் SF 250 பைக்கை எடுத்துக் கொள்ளலாம். கடந்தாண்டே இந்த பைக்கின் E85 ஃப்ளெக்ஸ் ஃப்யூல் வெர்ஷனையும் அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Suzuki Gixxer SF 250 Flex Fuel Vehicle

E20 பெட்ரோலில் இயங்கும் வழக்கமான ஜிக்ஸர் SF 250 பைக்கானது 1.89 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. E85 பெட்ரோலில் இயங்கும் ஜிக்ஸர் SF 250 ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்கானது 1.98 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இரண்டிற்கும் இடையிலான விலை வித்தியாசம் சுமார் 8,689 ரூபாயாக உள்ளது. தொடக்கத்தில் பைக்கை வாங்கும் இடத்தில் E20 எரிபொருளில் இயங்கும் மாடல் தான் வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாக இருக்கிறது.

இப்போது பயன்பாட்டிற்கு வருவோம். E20 பெட்ரோலானது தற்போது 102.21 ரூபாய் என்ற விலையிலும், E85 பெட்ரோலானது 82.12 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு வகையான எரிபொருளுக்கும் இடையிலான விலை வித்தியாசம் 20 ரூபாயாக உள்ளது.

E20 பெட்ரோலில் இயங்கும் ஜிக்ஸர் SF 250 பைக்கானது லிட்டருக்கு 38 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது. E85 பெட்ரோலில் இயங்கும் ஜிக்ஸர் SF 250 பைக்கானது லிட்டருக்கு 29 கிமீ வரையிலான மைலேஜையே கொடுக்கிறது. இரண்டுக்கும் இடையிலான மைலேஜ் வித்தியாசம் சுமார் 9 கிமீ, அதாவது 24.40 சதவீதமாக இருக்கிறது.

இந்த மைலேஜ் அளவுகளுடன் ஒரு கிமீ பயணம் செய்ய, E20 பெட்ரோல் பைக்கை விட E85 பெட்ரோல் பைக்கில் 0.17 பைசா வரை கூடுதலாக நாம் செலவழிக்க வேண்டும். இதுவே 1,000 கிமீ என்றால் 170 ரூபாய் கூடுதலாகவும், 10,000 கிமீ-க்கு 1,700 ரூபாய் கூடுதலாகவும், 50,000 கிமீ-க்கு 8,500 ரூபாய் கூடுதலாகவும் நாம் செலவழிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக, E20 பெட்ரோலில் இயங்கும் பைக்கை விட E85 பெட்ரோலில் இயங்கும் பைக்கின் தொடக்கத்தில் வாங்கும் செலவும் அதிகம் தான், அதன் பயன்பாட்டுச் செலவும் அதிகம் தான், அதன் தன்மையை வைத்துப் பார்க்கும் போது பராமரிப்புச் செலவும் அதிகமாகவே இருக்கும் என்றே தெரிகிறது. மேலே கூறியது போல இறுதி சுமையை சுமக்கப் போவது வாடிக்கையாளர்களாகிய நாம் தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1,000 கிமீ-க்கு 170 ரூபாய் கூடுதல் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவாகவே இருப்பதாகவே இப்போது தோன்றும். ஆனால் இது E20 பெட்ரோல் மற்றும் E85 பெட்ரோல் ஆகிய இரண்டிற்கும் இடையிலான விலை வித்தியாசம் ஓரளவிற்கு குறைவாக இருக்கும் வரை தான். பின்னாட்களில் தற்போதைய E20 பெட்ரோலுக்கு இணையான விலையிலேயே E85 பெட்ரோலும் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்போது இந்த சுமை இன்னும் அதிகமாகும்.

E85-க்கு மேலாக முழுவதுமாக 100 சதவீதம் எத்தனாலை (E100) எரிபொருளாகப் பயன்படுத்தும் திட்டமும் மத்திய அரசிடம் இருக்கிறது. அது பயன்பாட்டிற்கு வரும் போது இந்த மைலேஜ் அளவு குறைந்து, பயன்பாட்டுச் செலவு இன்னும் அதிகரிக்கும். E85 அல்லது எத்தனால் எரிபொருளின் விலை கட்டுக்குள் இருக்கும் வகை பிரச்சினையில்லை. தற்போதைய பெட்ரோலைப் போலவே எத்தனாலின் விலையும் கட்டுக்கடங்காமல் உயரும் என்னும் போது தான் வாகனம் வைத்திருப்பதே பெரிய சுமையாக மாறும்.

Article Published On: Wednesday, June 17, 2026, 11:18 [IST]
English summary
Disadvantages of using e85 fuel compared to e20 now in use
மேலும்... #bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out