இந்தியாவே பார்த்து வியக்க, ரூ.1 கோடியில் புதிய டுகாட்டி பைக்! பணம் இருந்தாலும் கூட வாங்க முடியாது!

டுகாட்டி (Ducati) நிறுவனம் இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிளை சுமார் ரூ.1 கோடி விலையில் அறிமுகப்படுத்தி அதிர்ச்சிக் கொடுத்துள்ளது. லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய டுகாட்டி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஆடி (Audi) நிறுவனத்தின் கீழ், இத்தாலிய நிறுவனங்களான லம்போர்கினி மற்றும் டுகாட்டி செயல்படுகின்றன. கடந்த சில வருடங்களாக இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கார் மற்றும் பைக்குகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளன. அதாவது, ஒரே தீமில் லம்போர்கினி கார்களையும், டுகாட்டி பைக்குகளையும் உருவாக்குகின்றன.

ducati launches panigale v4 lamborghini

இந்த கூட்டு முயற்சியில், புதியதாக வாகனங்கள் எதுவும் உருவாக்கப்படுவதில்லை; ஏற்கனவே விற்பனையில் இருக்கும் லம்போர்கினி மற்றும் டுகாட்டி வாகனங்களுக்கு புதிய தீம் (Theme) வழங்கப்படுகிறது. அவ்வாறு, டுகாட்டியின் டியாவெல் 1260 (Diavel 1260) மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 (Streetfighter V4) பைக்குகள் லம்போர்கினி உடன் இணைந்து உருமாற்றம் செய்யப்பட்டு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்டன.

அந்த வரிசையில் தற்போது மூன்றாவது டுகாட்டி பைக்காக பனிகளே வி4 (Panigale V4)-க்கு லம்போர்கினியின் தீம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இரு பைக்குகளை போல 'பனிகளே வி4 லம்போர்கினி' என்கிற பெயரில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) சுமார் ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ducati launches panigale v4 lamborghini

இந்த அளவிற்கு அதிகப்படியான விலைக்கு காரணம், இந்த புதிய பனிகளே வி4 லம்போர்கினி பைக்கை மிகவும் குறைவான எண்ணிக்கையில் உருவாக்க திட்டமிட்டு இருப்பது ஆகும். உலகம் மொத்தமாகவே வெறும் 630 யூனிட்கள் மட்டுமே புதிய பனிகளே வி4 லம்போர்கினி பைக் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. அதில் சில யூனிட்கள் மட்டுமே இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அப்படியென்றால், எவ்வாறு இந்த பைக்கை வாங்குவது என கவலைப்பட வேண்டாம். ஏனெனில், இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட இந்த பைக்கின் யூனிட்கள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆதலால், ரூ.1 கோடி செலவு செய்ய தயார் என்றாலும் இந்த பைக்கை வாங்க முடியாது. ஆனால், லம்போர்கினியின் அட் பெர்சோனம் (Ad Personam) வாடிக்கையாளர்களுக்காக என்று தனியாக 63 யூனிட் பனிகளே வி4 லம்போர்கினி பைக்குகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அதாவது, குறிப்பிட்ட சில லம்போர்கினி கார்களை வாங்கி பயன்படுத்தி வருபவர்கள் புதிய பனிகளே வி4 லம்போர்கினி பைக்கை வாங்க முடியும். 1963ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டில் லம்போர்கினி நிறுவனம் நிறுவப்பட்டதை நினைவுக்கூறும் விதமாக 630 யூனிட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பனிகளே வி4 லம்போர்கினி பைக்கில் 1,103சிசி டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல் வி4 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13500 ஆர்பிஎம்-இல் 218.5 எச்பி மற்றும் 11250 ஆர்பிஎம்-இல் 122.1 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 350கிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மணிக்கு 350கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருப்பினும், இந்திய சாலைகளில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்திற்கு மேல் எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை. ஆக, இவ்வாறான டுகாட்டி பனிகளே வி4 லம்போர்கினி பைக்குகள் பணக்காரர்களுக்கு ஒரு மூடிய வளாகத்திற்குள் ஓட்டிப் பார்ப்பதற்கு ஏற்றதாக இருக்கும். வழக்கமான டுகாட்டி பைக்குகளை காட்டிலும் அரிதான டுகாட்டி பைக்குகளை வாங்கி சேகரிக்க விரும்பும் செல்வந்தர்களை உலகளவில் பனிகளே வி4 லம்போர்கினி ஈர்த்துள்ளது.

Article Published On: Tuesday, May 12, 2026, 16:43 [IST]
English summary
Ducati launches panigale v4 lamborghini bike at rs 1 crore price check all details here
மேலும்... #ducati #lamborghini #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+