ரூ.13.99 லட்சம் விலையில் புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் சூப்பர் பைக் அறிமுகம்!

இந்தியாவின் சூப்பர் பைக் சந்தையில் பிரபலமான தேர்வாக இருந்து வரும் டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக் மான்ஸ்ட்டர் வி2 மற்றும் மான்ஸ்ட்டர்+ வி2 என்ற இரண்டு மாடல்களில் வந்துள்ளது.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் வி2 மாடலுக்கு ரூ.13.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், மான்ஸ்ட்டர்+ வி2 மாடலுக்கு ரூ.14.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்த மாடலைவிட ரூ.15,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பைக்கை வாங்க விரும்புவோர் டுகாட்டி இந்தியா இணையதளம் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

2

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக்கில் புதிய எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 937சிசி எஞ்சினுக்கு பதிலாக தற்போது 890சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் சிசி அளவு குறைந்தாலும், செயல்திறனில் பெரிய மாற்றங்கள் இல்லை. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 111எச்பி பவரையும், 91.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த புதிய எஞ்சினில் உள்ள ஐவிடி (IVT) தொழில்நுட்பத்தின் மூலமாக ஆரம்ப மற்றும் மிட் ரேஞ்ச்சில் எஞ்சின் சீரான டார்க்கை வழங்குவதுடன் வேகமாக செல்லும்போது செயல்திறன் மிகச்சிறப்பாக இருக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. எஞ்சினில் உள்ள இன்டேக் வால்வுகள் பைக்கின் வேகத்திற்கு தக்கவாறு திறக்கும் நேரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். இதன்மூலமாக சிறப்பான செயல்திறனையும், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இந்த புதிய பைக்கின் பெட்ரோல் டேங்க் வழக்கம்போல் முரட்டுத்தனமான தோற்றத்துடன் கவர்கிறது. ஏற்கனவே இருந்த மாடலில் அலுமினியம் ஃப்ரேம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் பெட்ரோல் டேங்க் 14 லிட்டர் கொள்திறன் கொண்டது. முந்தைய மாடலைவிட எடையும் 5 கிலோ குறைந்துள்ளது.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் 815 மிமீ இருக்கை உயர அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பத்தின் அடிப்படையில் உயரத்தை குறைத்தும், கூட்டியும் வாங்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதற்கான விசேஷ சஸ்பென்ஷன் கிட் கூட அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் வி2 பைக்கில் முன்புறத்தில் 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட ஷோவா சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 320மிமீ விட்டமுடைய பிரெம்போ டியூவல் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. அதேபோன்று, முன்சக்கரத்தில் 120/70R17 அளவுடைய பைரெல்லி டயாப்லோ ராஸோ-4 டயரும், பின்புறத்தில் 180/55R17 டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய சூப்பர் பைக்கில் டிராக்ஷன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் என பல பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் 5 அங்குல டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. முழுமையான எல்இடி லைட் சிஸ்டம் உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் போன்றவை ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

Article Published On: Tuesday, August 11, 2026, 10:08 [IST]
English summary
Ducati monster v2 launched india price 890cc engine features
மேலும்... #ducati #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out