கோவையில் வருகிறது டுகாட்டி சூப்பர் பைக் ஷோரூம்... டீசருடன் வெளியான தகவலால் பைக் பிரியர்கள் குஷி!

பிரிமீயம் கார்களுக்கு பெயர் போன கோவையில் தற்போது டுகாட்டி சூப்பர் பைக் ஷோரூம் திறக்கப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதற்கான டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, கோவை பைக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Ducati Chennai அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ஒரு புதிய ஆரம்பம் துவங்குகிறது என்ற பொருளில் வெளியிடப்பட்ட பதிவில், கோயம்புத்தூருக்கு டுகாட்டி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுளளது. இதன் மூலம் கோவையில் டுகாட்டியின் புதிய டீலர்ஷிப் வருவது உறுதியாகியுள்ளது.

Ducati Showroom

(Representational Image)

தமிழகத்தை பொறுத்தவரையில் டுகாட்டியின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் சென்னை நகரில் மட்டும் செயல்பட்டு வருகிறது. மெர்குரி டுகாட்டி என்ற டீலர் மூலமாக பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதே மெர்குரி டுகாட்டி நிறுவனம்தான் கோவையிலும் புதிய ஷோரூமை திறக்க உள்ளது தெரிய வந்துள்ளது. டீசர் போஸ்டரில் டுகாட்டியின் லோகோவுடன் மெர்குரி என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால் புதிய டுகாட்டி ஷோரூம் மெர்குரி டுகாட்டி நிறுவனத்தின் கீழ் செயல்பட இருப்பது தெரியவருகிறது.

Also Read

கடந்த 2024ஆம் ஆண்டு சென்னை ஈசிஆர் சாலையில் மெர்குரி டுகாட்டி ஷோரூம் திறக்கப்பட்டது. சுமார் 7,500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட அந்த டீலர்ஷிப், மோட்டார்சைக்கிள் விற்பனை மட்டுமின்றி சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை போன்ற சேவைகளையும் டுகாட்டி பைக் உரிமையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்நிலையில், அதே டீலர் குழுமம் கோவையிலும் தனது செயல்பாட்டை விரிவுபடுத்துவது பிரீமியம் பைக் சந்தையில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. கோவை மற்றும் கொங்கு மண்டலம் பிரீமியம் மற்றும் சூப்பர் பைக் வாடிக்கையாளர்களை கொண்ட முக்கிய சந்தையாக உள்ளது.

Also Read

கோவையில் புதிய டுகாட்டி ஷோரூம் திறக்கப்பட்டால், இந்தப் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் சென்னைக்கு செல்லாமல் டுகாட்டி மோட்டார்சைக்கிள்களை நேரடியாக பார்வையிடவும், டெஸ்ட் ரைடு செய்யவும், வாங்கவும் வாய்ப்பு கிடைக்கும். விற்பனைக்கு பிந்தைய சேவைகளை பெறுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கோவை கோபாலபுரம் பகுதியில் இந்த புதிய ஷோரூம் அமையும் என்று தெரிகிறது. எனினும், ஷோரூமின் சரியான முகவரி, திறப்பு தேதி மற்றும் செயல்படத் தொடங்கும் தேதி போன்ற தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் என்ற வாசகத்துடன் இருப்பதால், இதுகுறித்த முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Wednesday, September 16, 2026, 17:55 [IST]
English summary
Ducati showroom coming soon coimbatore mercury ducati
மேலும்... #coimbatore #ducati #super bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out