165 கிமீ ரேஞ்ச்... ரூ.99,999 விலையில் புதிய E3 ட்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!

இந்தியாவில் குறைந்த விலையில் அதிக ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான போட்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், பெங்களூரை சேர்ந்த E3 மொபிலிட்டி நிறுவனம் தனது புதிய ட்ரியான் (Trion) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.99,999 ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய இ2 மொபிலிட்டி நிறுவனத்தின் புதிய ட்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய அம்சம் அதன் மாடுலர் பேட்டரி அமைப்பு ஆகும். வாங்கும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப பேட்டரி திறனை தேர்வு செய்யலாம். பின்னர், அதிக ரேஞ்ச் தேவைப்பட்டால் அதே ஸ்கூட்டரில் அதிக திறன் வாய்ந்த பேட்டரிக்கு அப்கிரேடு செய்யும் வசதியையும் நிறுவனம் வழங்குகிறது. இதன் மூலம் புதிய ஸ்கூட்டர் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல், பேட்டரியை மட்டும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

E3 Trion Launch

இந்த ஸ்கூட்டரில் எல்எஃப்பி (Lithium Iron Phosphate) பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது, LFP பேட்டரிகள் நீண்ட ஆயுள், அதிக பாதுகாப்பு மற்றும் வெப்பத்தை சிறப்பாக சமாளிக்கும் தன்மை கொண்டது. தினசரி நகரப் பயன்பாட்டிற்கு இது கூடுதல் நம்பகத்தன்மையை வழங்கும்.

செயல்திறனைப் பொறுத்தவரை, இ3 ட்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு சுமார் 80 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. மேலும், Eco, City, Sport உள்ளிட்ட பல்வேறு ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளதால், பயண தேவை மற்றும் போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப ஓட்டும் அனுபவத்தை மாற்றிக்கொள்ளலாம்.

வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை ரேஞ்ச் (சோதனை நிலைகளில்) அதிகபட்ச வேகம்
Trion C1 ₹99,999 108 கிமீ 67 கிமீ/மணி
Trion C1X ₹1,09,999 165 கிமீ 67 கிமீ/மணி
Trion C2 ₹1,19,999 128 கிமீ 82 கிமீ/மணி

வசதிகளைப் பார்க்கும்போது, முழுமையான LED லைட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ் டிராக்கிங், குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே செல்லாதவாறு கட்டுப்படுத்தும் ஜியோ-பென்சிங், OTA (Over-the-Air) அப்டேட்டுகள், ரிவர்ஸ் மோடு மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற நவீன அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிலோமீட்டர் வரை வாரண்டி வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் விற்பனை தொடங்கப்பட உள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுபடுத்தவும் இ3 மொபிலிட்டி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய இ2 ட்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூன்றுவிதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். ட்ரியான் சி1 வேரியண்ட்டிற்கு ரூ.99,999 விலையும், சி1எக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.109,999 விலையும், ட்ரியான் சி2 வேரியண்ட்டிற்கு ரூ.1,19,999 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 2.5kWh கழற்றி சார்ஜ் போடும் பேட்டரியும், 3kWh நிலையான பேட்டரி தேர்வும் உள்ளது.

குறைந்த விலையில் அதிக தூரம் பயணிக்கும் ரேஞ்ச், அதிக திறன் வாய்ந்த பேட்டரியை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றின் மூலம் புதிய ட்ரியான் தனித்துவமான தேர்வாக மாறுகிறது. ஓலா எஸ்1 எக்ஸ், டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஹீரோ விடா விஎக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் போட்டி போடும். பெங்களூரில் புக்கிங் துவங்கப்பட்டுள்ள நிலையில், செம்படம்பர் முதல் டெலிவிரி துவங்க இருக்கிறது.

Article Published On: Thursday, August 6, 2026, 15:54 [IST]
English summary
E3 trion electric scooter launched price range features india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out