எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்.. உடனே வாங்குங்க இல்லைனா கிடைக்காது

பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் மாதம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை விண்ணைப் பிளந்திருக்கிறது. இதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே அதிகளவில் விற்பனையாகியிருக்கின்றன. எலெக்ட்ரிக் பைக்குகளின் அளவு மிகவும் குறைவு தான். வருடங்களுக்கு இடையில் அதிகளவிலான விற்பனை உயர்வு என்பது வழக்கமான விஷயம் தான் ஆனால் இரண்டு மாதங்களுக்கு இடையில் அதிளவில் விற்பனை உயர்ந்திருப்பது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுமார் 1.11 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதுவே மார்ச் மாதம் இந்த அளவு 1.89 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆம், மார்ச் மாதம் சுமார் 78,000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியிருக்கின்றன. இது சுமார் 70.25% விற்பனை உயர்வாகும்.

Bajaj Chetak

என்ன காரணம்? ஒரே மாதத்தில் திடீரென வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மேல் ஆர்வம் கூடிவிட்டது எனக் கூற முடியாது. ஆனால் குறிப்பிட்ட ஒரு காரணம் இருக்கிறது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் மாணியம் மார்ச் மாதத்துடன் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியது, இந்த அதிகளவிலான விற்பனை உயர்வுக்கு வழிவகுத்திருக்கலாம். அந்தத் திட்டம் தற்போது நீட்டிக்கப்பட்டுவிட்டது. எனினும், அந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்தலாம் எனக் கருதி அதிகளவிலான வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்கியிருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

கடந்த மாதமும் டிவிஎஸ் நிறுவனமே 49,453 என்ற யூனிட்டுகள் அளவிற்கு அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் தற்போது இரண்டு மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். ஒன்று ஐ-க்யூப் மற்றொன்று ஆர்பிட்டர். இரண்டுமே வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

TVS i-Qube

இரண்டாவது இடத்தில் பஜாஜ் உள்ளது. 46,246 யூனிட்டுகள் என்ற அளவில் டிவிஎஸ்ஸை மிக நெருக்கமாக பின்தொடர்கிறது பஜாஜ். இந்தியாவில் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை பஜாஜ் விற்பனை செய்து வருகிறது. கிளாஸியான டிசைன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் சேட்டக்கிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தில் பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் எனர்ஜி உள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த நிறுவனம் 35,688 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முக்கியமான நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது ஏத்தர். நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் ஹீரோ விடா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

ஹீரோவின் விடா பிராண்டானது கடந்த மார்ச் மாதம் 21,343 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், ஓலா நிறுவனமானது 10,117 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்துள்ளது. ஓலா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 3,973 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. மார்ச் மாதம் 154% அதன் விற்பனை உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் 20-க்கும் மேலான சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களில் வெறும் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் மாதம் மிகவும் குறைவான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளன. அதில் இரண்டு முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள். ஒன்று சுஸூகி, மற்றொன்று ஹோண்டா.

இந்தியாவில் e-அக்சஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனை செய்து வருகிறது சுஸூகி. சராசரியான வசதிகளுடன், அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால் e-அக்சஸ் ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர்களிடயே எந்த வரவேற்பும் இல்லை. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 12 யூனிட்டுகள் குறைவாக வெறும் 320 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது சுஸூகி.

அதேபோல் ஹோண்டா நிறுவனமானது மார்ச் மாதம் 140 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது 27.46% குறைவாகும். பேட்டரி ஸ்வாப்பிங் என்ற புதிய தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் கால்பதித்த ஹோண்டா, வசதிகள் மற்றும் விலையில் கோட்டை விட்டுவிட்டது. மிகவும் குறைவான ரேஞ்சுடன், அதிக விலையில் வெளியான ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெறவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிட்டிருப்பது போல மாணியம் நிறுத்தப்படலாம் என்னும் காரணத்தினாலேயே மார்ச் மாதம் அதிக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருக்கும் பட்சத்தில் இந்த மாதம் சந்தை மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். இல்லை, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் கூடியிருக்கும் நிலையில், இந்த விற்பனை நிலவரம் ஏப்ரல் மாதமும் தொடரும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 7, 2026, 13:00 [IST]
English summary
Electric 2wheeler sales surge in march by 70 percent over february
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+