ஃபுல்-சார்ஜ் செய்தால் 400கிமீ பயணம் நிச்சயம்... வெறும் 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலவு பண்ணா போதும்!

சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனத்தில் இருந்து புதியதாக அல்ட்ரா (Ultra) என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த சிம்பிள் எனர்ஜியில் இருந்து ஏற்கனவே பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றை போல் இல்லாமல், புதிய சிம்பிள் அல்ட்ரா ஆனது விலைமிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக களமிறக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தின் 450 அபெக்ஸ் (450 Apex) போட்டியாக உள்ளது. சிம்பிள் அல்ட்ரா அளவிற்கு விலைமிக்கதாக இல்லாவிடினும், ஏத்தர் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே விலைமிக்கதாக ஏத்தர் 450 அபெக்ஸ் விளங்குகிறது. இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

simple ultra vs ather 450

செயல்படுதிறன்: புதிய சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெரிய அளவிலான 6.5kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 400கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது சிம்பிள் எனர்ஜி நிறுவனம். மறுப்பக்கம், 450 அபெஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அளவில் சிறியதான 3.7kWh பேட்டரி வழங்கப்படுகிறது.

இதன் ரேஞ்ச் வெறும் 157கிமீ மட்டுமே ஆகும். ஆதலால், ரேஞ்ச் விஷயத்தில் இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. அதேபோல், சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 2.77 வினாடிகளில் எட்டிவிட முடிகிறது. இதன் டாப்-ஸ்பீடு மணிக்கு 115கிமீ ஆகும்.

simple ultra vs ather 450

தொழிற்நுட்ப வசதிகள்: சிம்பிள் அல்ட்ரா ஸ்கூட்டரில் சற்று குறைவான தொழிற்நுட்ப வசதிகளே வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள சில தொழிற்நுட்ப வசதிகளும் மிகவும் அட்வான்ஸானவை ஆகும். அவற்றுள், 4 நிலைகளில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் 7-இன்ச் டிஜிட்டல் க்ளஸ்ட்டர் திரை உள்ளிட்டவை முக்கியமானவை ஆகும். இந்த திரையின் வாயிலாக பேட்டரியில் சார்ஜ் சதவீதம் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட விபரங்களை பெறலாம்.

மறுப்பக்கம், ஏத்தர் 450 அபெக்ஸ் ஆனது தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்ததாக காணப்படுகிறது. குறிப்பாக, இதன் ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்படும் டிஎஃப்டி டிஸ்பிளே ஆனது ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் மேப்ஸ் நேவிகேஷன் வசதிகளை கொண்டதாக உள்ளது. ஸ்மார்ட் ஈக்கோ, ஈக்கோ, ரைடு, ஸ்போர்ட், வ்ராப் மற்றும் வ்ராப் பிளஸ் என 6 விதமான ரைடிங் மோட்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன.

விலை: ஏற்கனவே கூறியதுபோல், சிம்பிள் அல்ட்ரா ஆனது ஏத்தர் 450 அபெக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் விலைமிக்கதாக உள்ளது. ரூ.2.34 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அல்ட்ரா ஆனது இந்தியாவின் நான்காவது விலைமிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக உருவெடுத்துள்ளது. அதுவே, 450 அபெக்ஸ் ஆனது ரூ.1.89 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும், அல்ட்ரா உடன் ஒப்பிடுகையில் வண்ணமயமான நிறங்களில் கிடைக்கக் கூடியதாக 450 அபெக்ஸ் உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் தற்போதைய நிலவரப்படி ஏத்தர் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் விலைமிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 450 அபெக்ஸ் ஆகும். அல்ட்ரா மற்றும் 450 அபெக்ஸ் இவை இரண்டும் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின்படி, அதிக ரேஞ்ச் மற்றும் செயல்படுதிறனை எதிர்பார்ப்பவர்கள் புதிய சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாம். அதுவே, ரூ.2 லட்சம் வரை தான் செலவு செய்ய முடியும் மற்றும் தொழிற்நுட்ப வசதிகள் மிக்கதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எதிர்பார்ப்பவர்களுக்கு 450 அபெக்ஸ் ஏற்றதாக இருக்கும். இருப்பினும், இந்த இரண்டில் எங்களது சாய்ஸ் எதுவென்று கேட்டால், ரூ.50 ஆயிரம் அளவிற்கு விலை அதிகமானதாக இருப்பினும், சிம்பிள் அல்ட்ரா சுமார் 400கிமீ வரையிலான ரேஞ்சை வழங்குவது ஆச்சிரியத்தை தருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 19, 2026, 11:42 [IST]
English summary
Electric scooters comparison between new simple ultra vs ather 450 apex
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+