டெலிவிரி பாய் வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்ற 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! போன் சார்ஜ்காக எங்கேயும் நிற்க வேணாம்!
இன்றைய காலத்தில் மொபைல் போனின் தேவை மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. இதனால், மொபைல் போனை சார்ஜ் செய்வதே தினந்தோறும் பெரிய வேலையாகி விட்டது. ஆனால், இன்றைய மாடர்ன் உலகில் பலருக்கு மொபைல் போனில் தான் வருவாயை ஈட்டுவதற்கான வேலை உள்ளது. ஆதலால், மொபைல் போனை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய தேவை இருக்கும் என்பதால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கூட மொபைல் போன் சார்ஜிங் வசதியை தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குகின்றன. அவ்வாறு, மொபைல் போன் சார்ஜிங் வசதி உடன் இந்தியாவில் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் பிரபலமானவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube): ஸ்மூத்தான பயணத்திற்கு பெயர் பெற்ற இந்த டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்களிலும் மொபைல் சார்ஜிங் வசதி கிடைக்கிறது. இருக்கைக்கு அடியில் சார்ஜிங் பாயிண்ட்டை கொண்ட இந்த டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணத்தின்போதும் மொபைல் போனை சார்ஜ் செய்ய முடியும். 2.2kWh, 3.1kWh, 3.5kWh மற்றும் 5.3kWh என 4 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் ஐக்யூப் விற்பனை செய்யப்படுகிறது.

ஓலா எஸ்1 (Ola S1): இந்திய மார்க்கெட்டில் பல விதமான எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள், எக்ஸ் (X) மற்றும் விலையுயர்ந்த புரோ (Pro) வேரியண்ட்களில் யுஎஸ்பி (USB) சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஐக்யூப் போன்று இல்லாமல், எஸ்1 எக்ஸ் மற்றும் எஸ்1 புரோ ஸ்கூட்டர்களில் ஹேண்டில்பாருக்கு கீழே மொபைல் போன் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta): ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனை செய்யப்படும் ரிஸ்டாவில் மொபைல் போன் சார்ஜிங் வசதி கிடைக்கிறது. இருக்கைக்கு அடியில் 56 லிட்டர்கள் கொள்ளளவிலான ஸ்டோரேஜ் பகுதியில் மொபைல் போன் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதன் 15 வாட்ஸ் யுஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட்டில் மொபைல் போன் உடன் பல்வேறு விதமான மின் சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.

ஹீரோ விடா (Hero Vida): ஹீரோ விடா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் வி1 (V1) மற்றும் வி.எக்ஸ்2 (VX2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மொபைல் போன் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த இரு இ-ஸ்கூட்டர்களிலும் ஹேண்டில்பாருக்கு கீழே இந்த சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இருப்பினும், விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சார்ஜ் செய்யும்போது மொபைல் போனை வைப்பதற்கு பொருத்தமான இடம் வழங்கப்படவில்லை என சில கஸ்டமர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak): பிரீமியம் தரத்திலான உலோக உடலமைப்பில் உருவாக்கப்படும் சேத்தக், மேற்கூறப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று தொழிற்சாலையிலேயே வழங்கப்பட்ட யுஎஸ்பி மொபைல் போன் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. ஹேண்டில்பாருக்கு கீழே இது வழங்கப்பட்டாலும், சார்ஜிங்கின் போது மொபைல் போனை வைப்பதற்கான இடவசதி உள்ளது.
ரிவர் இண்டி (River Indie): ஸ்கூட்டர்களின் எஸ்யூவி (SUV) என அழைக்கப்படும் இதனை அடிப்படையாக கொண்டுதான் யமஹா (Yamaha) நிறுவனம் இந்தியாவில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இசி-06 மாடலை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. இத்தகைய இண்டி இ-ஸ்கூட்டரின் ஹேண்டில்பாருக்கு கீழே 12 லிட்டர்கள் கொள்ளளவிலான க்ளோவ் பாக்ஸ் (Glove Box) பகுதியில் மொபைல் போன் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் (Ampere Magnus EX): நகரத்திற்குள் பயணிப்பதற்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இதில் முன்பக்க க்ளோவ் பாக்ஸ் பகுதியில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. 121கிமீ ரேஞ்சை வழங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக, மேக்னஸ் இஎக்ஸ் குறைந்த விலையில் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பெரும்பாலானவை விலை குறைவானவை ஆகும். இவற்றில் ஒன்றை வாங்குவதன் மூலம் மொபைல் போனை அடிக்கடி சார்ஜிங் செய்யும் வேலையை குறைக்கலாம். குறிப்பாக, ஏற்றுமதி/ இறக்குமதி டெலிவிரி பணிகளில் நாள் முழுக்க இருசக்கர வாகனங்களில் சுற்ற வேண்டி இருப்பவர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்றவையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








