மின்சார இருசக்கர வாகன விற்பனையில் கலக்கிய நிறுவனங்கள்... முதலிடத்தில் டிவிஎஸ்!!

கடந்த மாதம் இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஜூலையில் மின்சார இருசக்கர வாகனங்களின் சில்லறை விற்பனையானது 2 லட்சம் யூனிட்டுகளை கடந்து புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மாதத்தில் 2,04,362 மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2025ம் ஆண்டு ஜூலையில் 1,08,516 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாத விற்பனை 88 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஜூன் மாதத்தில் 1,94,963 யூனிட்டுகள் விற்பனையானதுடன் ஒப்பிடும்போது மாதத்திற்கு மாதம் விற்பனை வளர்ச்சி 4.82 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், மொத்த இருசக்கர வாகன விற்பனையில் மின்சார இருசக்கர வாகனங்களின் பங்கு என்பது 11.24 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது.

டிவிஎஸ் மோட்டார் முதலிடம்

கடந்த மாத மின்சார இருசக்கர வாகன விற்பனையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 55,499 மின்சார இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூலையில் 23,592 யூனிட்டுகள் விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாத விறபனை 135 சதவீதம் அதிகரித்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் விற்பனையில் டிவிஎஸ் ஐக்யூப் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ விற்பனை

இரண்டாவது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உள்ளது. கடந்த மாதத்தில் 45,613 மின்சார இருசக்கர வாகனங்களை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான வரவேற்பு மிக அதிகமாக இருப்பதால், பஜாஜ் ஆட்டோ இந்த மார்க்கெட்டில் வலுவான நிலையில் உள்ளது.

ஏத்தர், ஹீரோ விடா விற்பனை

இதற்கு அடுத்து ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 30,357 யூனிட்டுகளை ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதற்கு அடுத்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் விடா எலெக்ட்ரிக் பிராண்டில் 22,900 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன.

மல்லுக்கட்டும் ஓலா

மிகப்பெரிய திட்டங்களுடன் மின்சார இருசக்கர வாகன மார்க்கெட்டில் கால் பதித்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 14,106 மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில், இது 23.54 சதவீதம் குறைவு. விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதை தடுத்து நிறுத்தும் வகையில், டீலர்கள் வாயிலாக மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய ஓலா எலெக்ட்ரிக் முடிவு செய்துள்ளது.

ஒட்டுமொத்த இருசக்கர வாகன மார்க்கெட்டில் பெட்ரோல் மாடல்களின் பங்கு என்பது 88.67 சதவீதம் என்ற வலுவான நிலையிலேயே உள்ளது. ஆனால், கடந்த ஓராண்டு காலத்தில் மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கவலையும் வாடிக்கையாளர்களை மின்சார வாகனங்கள் பக்கம் திருப்பி வருகிறது.

மேலும், புதிய மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் வருகையும், தற்போது மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியத் திட்டமும் வரும் 2028ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும் இந்த மார்க்கெட்டில் சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வரும் காலங்களில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Wednesday, August 12, 2026, 14:19 [IST]
English summary
Electric two wheeler sales july 2026 tvs bajaj ather ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out