இப்போலாம் யார்ங்க பெட்ரோல் ஸ்கூட்டர்லாம் வாங்குறது.. எல்லாரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான்.. ஏன் தெரியுமா?
எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையானது நடப்பு 2026ம் ஆண்டு அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வளர்ந்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போதே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்னாள் 2016ல் இந்திய வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என்றால என்னவென்றே தெரியாது.
2017ம் ஆண்டு தான் சுமார் 1,516 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன. ஆம் வெறும் 1,516 யூனிட்டுகள் தான். அங்கேயிருந்து தற்போது ஒரு ஆண்டில் 20 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றன எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள். இருசக்கர வாகனங்கள் என்று பொதுவாகக் கூறினாலும் அதில் பிரதானமானது மற்றும் பெருமளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 13.4 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இது தான் ஒரே ஆண்டில் இந்தியாவில் அதிகபட்சம் விற்பனையாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் அளவாகும். இப்போது, 2026ம் ஆண்ட இந்த விற்பனை அளவு இன்னும் அதிகரித்து, 20 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொடலாம் எனத் தற்போது கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த மைல்கல்லை எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் எட்டும் பட்சத்தில், 2026 அவற்றுக்கான ஒரு ஆண்டாக மைல்கல் ஆண்டாக இருக்கும்.
மைல்கல் என்று பேசும் போது இந்த கடந்த ஐந்து ஆண்டுகளுமே எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மைல்கல் ஆண்டுகள் என்று தான் கூற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட அதிகளவிலான எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களே விற்பனையாகி வந்திருக்கின்றன. அதுவும் எதிர்பார்த்தை விட அதிகளவிலான வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2021ம் ஆண்டு தான் முதன் முதலில் 1.5 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனையைக் கடந்தது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள். அந்த ஆண்டு மட்டும் சுமார் 1.64 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தது. 2022ம் ஆண்டு யாருமே எதிர்பாராத அளவு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை 303 சதவீதம் உயர்ந்தது. ஆம், 2021ல் இருந்து மூன்று மடங்காக 6.61 லட்சம் யூனிட்டுகளாக அதன் விற்பனை உயர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த அளவு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உயர்ந்தது. அதாவது 2024ல் 1.21 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனையாகின. தொடர்ந்து 2025ம் ஆண்டு கொஞ்சம் அதிகமாக 1.34 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. நடப்பு 2026ல், 2022ம் ஆண்டைப் போலவே மீண்டும் ஒரு இருசக்கர வாகன அலையைப் பார்க்க முடிகிறது.
மே வரையிலான 2026ன் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 8.01 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் விற்பனையான அளவுடன் ஒப்பிடும் போது இது 49 சதவீதம் விற்பனை உயர்வாகும். 2025ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட அளவில் 60 சதவீதத்தை முதல் ஐந்து மாதங்களிலேயே அடைந்து விட்டது.
இந்த 2026ம் ஆண்டு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.60 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இதே அளவில் இந்த ஆண்டு முழுவதும் விற்பனையாகும் பட்சத்தில் 2026ன் முடிவில் முதல் முறையாக 20 லட்சம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கும். மேலும், தற்போதைய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையானது, ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை அளவில் 8.17 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த 2025ம் ஆண்டு 6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: திடீரென இந்த 2026ம் ஆண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை அதிகம் உயர்ந்து வருவதற்கு பெட்ரோல் விலையும் வேகமாக உயரத் தொடங்கியிருப்பதை முக்கியமான காரணமாக நாம் பார்க்கலாம். மேலும், முன்பை விட அதிக வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நம்பத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும் போது, இப்போது வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு நிறைய மாடல்கள் சந்தையில் குவிந்திருக்கின்றன. அனைத்து வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் கண்டிப்பாக ஒரு மாடலாவது இருக்கிறது. எனவே வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை மேலும் மேலும் அதிகரிக்கும் என்று மட்டும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications