கால் எட்டலனு இனி யாரும் சொல்ல முடியாது! பெட்ரோல் போட்டுனு கஷ்டப்படுவதை விட இது பெஸ்ட்!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) பிராண்டுகளில் ஒன்றான இமோட்டோராட் (EMotorad), அதன் பிரபல மாடலான 'ரேஞ்சர்' (Ranger) எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு புதிய சைஸ் மற்றும் கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது. புனேவைச் சேர்ந்த இந்த நிறுவனம், இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான ரைடர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை எளிதாக அணுக வழிவகை செய்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ரேஞ்சர் எலெக்ட்ரிக் சைக்கிளில், தற்போதுள்ள பெரிய (L) பிரேமுடன் கூடுதலாக, ஒரு நடுத்தர (M) பிரேம் அளவும் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய நடுத்தர (M) பிரேம், 5.1 அடி முதல் 5.6 அடி உயரம் கொண்ட ரைடர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 'சிட்ரஸ் நீலம்' (Citrus Blue) மற்றும் 'சன்ஸ்டோர்ம் மஞ்சள்' (Sunstorm Yellow) ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

emotorad ranger electric cycle

அதேசமயம், 5.6 அடிக்கு மேல் உயரம் கொண்ட ரைடர்களுக்கு ஏற்ற பெரிய (L) பிரேம், 'சிட்ரஸ் நீலம்', 'சன்ஸ்டோர்ம் மஞ்சள்' மற்றும் 'கிரீன்' (Green) ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில், சிட்ரஸ் நீலம் ஆனது இந்த எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு தற்போது சேர்க்கப்பட்டுள்ள புதிய கலர் ஆப்ஷன் ஆகும். இது இரண்டு பிரேம் அளவுகளிலும் கிடைக்கிறது.

இமோட்டோராட் ரேஞ்சர் எலெக்ட்ரிக் சைக்கிளில் ஒரேயொரு அளவு மட்டுமே இருப்பதால் சௌகரியம் குறைவாக உள்ளதாக ரைடர்களிடம் இருந்து வந்த புகார்களை தொடர்ந்து இந்த புதிய அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ரேஞ்சர் இ-சைக்கிள், அதன் ஆற்றல், சௌகரியம் மற்றும் சிறந்த ஹேண்ட்லிங் ஆகியவற்றின் சமநிலையால் அதிகம் விரும்பப்படும் எலெக்ட்ரிக் சைக்கிள்களில் ஒன்றாகத் திகழ்கிறது என இமோட்டோராட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடுத்தர பிரேம் சேர்க்கப்பட்டுள்ளதால், இது பலதரப்பட்ட ரைடர்களுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தும். இது பயணத்தின் நிலைத்தன்மையும், பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்று பிராண்ட் கூறுகிறது. இன்கோடாப் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இமோட்டோராட், மகாராஷ்டிராவின் புனேவில் தனது தலைமையகத்தைக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் மற்றும் உலகளவில் பரவியுள்ள வாடிக்கையாளர்களுக்கு நிலையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்தை (eco-friendly mobility) கிடைக்கச் செய்வதில் இமோட்டோராட் கவனம் செலுத்துகிறது. இந்த நிறுவனம் தனது நெட்க்வொர்க் மூலம் மட்டுமல்லாமல், ஒரு பரந்த டீலர் நெட்வொர்க் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட், பிளைவ், சூஸ்-மை-பைசைக்கிள் போன்ற முக்கிய ஆன்லைன் விற்பனை தளங்கள் வழியாகவும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

இமோட்டோராட், பல்வேறு பயண தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற எலெக்ட்ரிக் சைக்கிள்களை வழங்குகிறது. இதில் ரூ.19,999-இல் தொடங்கும் எக்ஸ்-ஃபாக்டர், ரூ.34,999-இல் தொடங்கும் டிசையர் மற்றும் ரேஞ்சர், டி-ரெக்ஸ் ஏர், டி-ரெக்ஸ் புரோ, டூடுல் சீரிஸ், இ.எம்.எக்ஸ், நியோ மற்றும் எக்ஸ்கேப் ஜி1 கார்கோ பைக் போன்ற மாதிரிகள் அடங்கும்.

இந்தியாவின் முதல் மொபைல் செயலி மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் சைக்கிளான (app-enabled electric cycle) டி-ரெக்ஸ் ஸ்மார்ட் உள்பட அனைத்து இமோட்டோராட் சைக்கிள்களும் ஐபி65 நீர்-எதிர்ப்பு திறன் கொண்டவை ஆகும். அதாவது, இதன் எலக்ட்ரானிக் பாகங்கள் அனைத்து வானிலைக்கும் ஏற்றவாறு பாதுகாக்கப்படுகின்றன. இந்த இ-சைக்கிள்கள் பெடல்-அசிஸ்ட், த்ரோட்டில், வாக், க்ரூஸ் மற்றும் மெக்கானிக்கல் பெடல் என ஐந்து ரைடிங் முறைகளை ஆதரிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உயர்தரமான, நம்பகமான மற்றும் புதுமையான எலெக்ட்ரிக் சைக்கிள்களை வழங்குவது இமோட்டோராட் நிறுவனத்தின் நோக்கம். நகர்ப்புற பயணிகள், பொழுதுபோக்கிற்கு சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்பவர்கள் மத்தியில் ரேஞ்சர் எலெக்ட்ரிக் சைக்கிளை அதிக கொண்டு சேர்ப்பதற்கு இந்த புதிய அப்டேட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, February 27, 2026, 14:19 [IST]
English summary
Emotorad introduces new medium frame and colour option for ranger electric cycle
மேலும்... #cycle #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+