பெடலை பயன்படுத்தாமலே 70கிமீ பயணம்... அமேசான், ஃபிளிப்கார்டில் கூட கிடைக்கும் புதிய எலெக்ட்ரிக் சைக்கிள்!

இ-மோட்டாராட் (EMotorad), இந்தியாவின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) நிறுவனம். பல்வேறு விதமான எலெக்ட்ரிக் சைக்கிள்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்துவரும் இ-மோட்டாராட் புதியதாக 'வைபர்' (Viper) என்கிற எலெக்ட்ரிக் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் சைக்கிளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இதுவரையில் இ-மோட்டாராட் நிறுவனம் உருவாக்கியதிலேயே மிகவும் ஸ்டைலிஷான எலெக்ட்ரிக் சைக்கிளாக விளங்கும் புதிய வைபர் ஆனது அதற்கு இணையாக மிகவும் செயல்படுதிறன் மிகுந்ததாகவும் உள்ளது. இதன் விலை ரூ.66,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அட்வான்ஸான என்ஜினீயரிங்கில் மோட்டோ-ஸ்டைலில் இந்த புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

e-motorad viper electric cycle launch

இதனால், அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாக விளங்கும் புதிய இ-மோட்டாராட் வைபரில் 48 வோல்ட் 250 வாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில், சைக்கிளில் இருந்து நீக்கக்கூடிய 48 வோல்ட் 15.6 ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 70கிமீ-க்கு பெடலை உபயோகிக்காமல் பயணிக்கலாம்.

இடையிடையே பெடலையும் பயன்படுத்தினால் அதிகப்பட்சமாக 85கிமீ தொலைவு வரையில் பயணிக்கலாம். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 100மிமீ-இல் சஸ்பென்ஷன் டிராவலும், பின்பக்கத்தில் 40மிமீ டிராவலும் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் 20-இன்ச் x 4-இன்ச் அளவில் பருமனான நைலான் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பிரேக் சிஸ்டமாக, ஆட்டோ கட்-ஆஃப் வசதி உடன் ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

e-motorad viper electric cycle launch

இவற்றுடன், ஷிமனோ 7-ஸ்பீடு டிரைவ்ட்ரெயின் மற்றும் என்.எஃப்.சி அன்லாக் வசதி உடன் ஹேண்டில்பாருக்கு மத்தியில் சி9 டிஸ்பிளே உள்ளிட்டவையும் இந்த சைக்கிளில் இடம்பெற்றுள்ளன. இரவு நேரங்களில் வெளிச்சத்தை வழங்க இந்த எலெக்ட்ரிக் சைக்கிளின் முன்பக்கத்தில் டி.ஆர்.எல் உடன் 420 லக்ஸ் விளக்கும், பின்பக்கத்தில் ஹார்ன் உடன் விளக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அதிவலிமைமிக்க ஸ்டீல் ஃபிரேமில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வைபர் எலெக்ட்ரிக் சைக்கிளில் அலுமினியத்திலான இரட்டை சுவர் அலாய் ரிம்கள் இடம்பெற்றுள்ளன. அளவில் பார்க்க சிறியதாக இருப்பினும், இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் ஆனது அதிகப்பட்சமாக 110 கிலோ வரையில் எடை கொண்ட சுமைகளை சுமக்க கூடியது ஆகும்.

அதேபோல், 5'2 அடிக்கும் அதிகமான உயரம் கொண்டவர்களும் இந்த சைக்கிளை தாராளமாக ஓட்ட முடியும் என்கிறது இ-மோட்டாராட் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களில் புதிய வைபர் எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அமேசான் (Amazon), ஃபிளிப்கார்ட் (Flipkart) போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இந்த இ-சைக்கிளை வாங்க முடியும். இ-மோட்டாராட் நிறுவனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், புனேவை சேர்ந்த இந்த நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டில்தான் துவங்கப்பட்டது. ஆனால், அதற்குள்ளாகவே இந்தியாவின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் சைக்கிள் பிராண்டாக உருவெடுத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இ-மோட்டாராட் நிறுவனம் அதன் தயாரிப்புகளை இந்தியாவிலேயே வடிவமைத்து, தயாரித்து விற்பனை செய்கிறது. இதன் மூலமாக, இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் சைக்கிள் நிறுவனமாக இ-மோட்டாராட் விளங்குவதால், இதன் தயாரிப்புகளை பெறுவதும், அவற்றின் உதிரி பாகங்களை பெறுவதும் எளியதாக உள்ளது. புதிய வைபர் எலெக்ட்ரிக் சைக்கிளை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது புதுமையான டிசைனில் எவரொருவராலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 16, 2026, 15:43 [IST]
English summary
Emotorad introduces new viper electric cycle check price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+