பெட்ரோல் விலை தாறுமாறா குறைய போகுது! இதுக்காகதான் மக்கள்கிட்ட மத்திய அரசு முட்டி மோதிகிட்டு இருக்கு!
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படுவது E20 எரிபொருள் ஆகும். இது 20 சதவீதம் எத்தனாலும் (Ethanol), 80 சதவீதம் பெட்ரோலும் (Petrol) கலந்த கலவை. இதை தொடர்ந்து பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை அதிகரிப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. அதாவது எத்தனால் புரட்சிக்கு இந்தியா தயாராகி வருகிறது.
பெட்ரோல் உடன் எத்தனால் கலக்கப்பட்டு வரும் நிலையில், கூடிய விரைவில் ஐசோப்யூட்டனால் (Isobutanol) கலந்த டீசல் (Diesel) பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதன் மூலம் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் (Crude Oil) அளவை குறைக்க முடியும். அத்துடன் இந்திய விவசாயிகளுக்கும் இதன் மூலம் நன்மையை ஏற்படுத்த முடியும். எத்தனால் மற்றும் ஐசோப்யூட்டனால் போன்றவை கரும்பு போன்ற விவசாய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுபவை ஆகும்.

இந்தியாவில் எத்தனால் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், E85 எரிபொருளில் இயங்க கூடிய (85 சதவீதம் எத்தனால் + 15 சதவீதம் பெட்ரோல்) ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus) மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்குகள் நேற்று (ஜூன் 3) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் (Flex Fuel Vehicles) ஆகும்.
இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனின் விலை 82,710 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனின் விலை 72,792 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்களை தொடர்ந்து, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அடுத்த 2 ஆண்டுகளுக்குள்ளாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து டூவீலர்களின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்களும் விற்பனைக்கு வந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் போலவே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மற்ற அனைத்து டூவீலர்களும் E85 எரிபொருளில் இயங்க கூடியதாகவே இருக்கும்.
இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள E20 எரிபொருளை விட E85 எரிபொருளின் விலை சற்று குறைவாக இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே E85 எரிபொருளில் இயங்க கூடிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை போலவே, மாருதி சுஸுகி நிறுவனமும் இன்று (ஜூன் 4), மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் (Maruti Suzuki Wagon R Flex Fuel) வெர்ஷனை பொது பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் எத்தனால் புரட்சி தொடங்கி விட்டதையே தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.


Click it and Unblock the Notifications