பெட்ரோல் பைக்குகளுக்கு பதிலாக ஹீரோவில் இப்படிப்பட்ட இரு பைக்குகளா! விலையை கேட்டால் ஒன்றை வாங்கிப் போடுவீங்க!
ஃபிளெக்ஸ்-ஃபியூல் (Flex-Fuel) என்கிற வார்த்தையை சமீப காலமாக அடிக்கடி கேள்விப்பட்டு வருகிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால், 20%-இல் இருந்து சுமார் 85% வரையில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் என்பதையே ஃபிளெக்ஸ்-ஃபியூல் என அழைக்கின்றனர். இதன் தமிழ் அர்த்தம் என்னவென்றால், நெகிழ்வான எரிபொருள் என்பதாகும். 85% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் வெறும் 15% மட்டுமே பெட்ரோல் மூலக்கூறுகள் இருக்கும்.
அப்படியிருந்தும் இயங்கக்கூடிய வாகனங்களையே ஃபிளெக்ஸ்-ஃபியூல் வாகனங்கள் என அழைக்கின்றனர். இவ்வாறு அதிக எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கக்கூடிய வாகனங்கள் தற்போதைக்கு அதிகமாக இரு சக்கர வாகனங்களில் களமிறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மோட்டார்சைக்கிள்களில் இவற்றின் மார்க்கெட் தொடர்ந்து பெரியதாகி வருகிறது. தற்சமயம் 4 விதமான ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹீரோ ஸ்பிளெண்டர்+ ஃபிளெக்ஸ்-ஃபியூல்
இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் பைக் என்பதினாலேயே, ஸ்பிளெண்டர்+ பைக்கில் ஃபிளெக்ஸ்-ஃபியூல் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் நேரில் கலந்துக் கொண்டனர். டெல்லி மற்றும் மஹாராஷ்டிராவின் சில பகுதிகளில் இந்த ஜூலை மாதத்தில் இருந்து இந்த பைக் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளது.
இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.82,810-இல் இருந்து துவங்குகின்றன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்கான இது ஜெய்பூரில் உள்ள ஹீரோவின் ஆராய்ச்சி & தொழிற்நுட்ப மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பவர்டிரெயினுக்கு ஏற்ப இந்த பைக்கின் தோற்றமும் வழக்கமான ஸ்பிளெண்டர்+ பைக்கில் இருந்து சற்று மாறுப்பட்டதாக உள்ளது.

ஹீரோ HF டீலக்ஸ் ஃபிளெக்ஸ்-ஃபியூல்
ஸ்பிளெண்டர்+ ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக் உடன் சேர்த்து கடந்த ஜூன் 3ஆம் தேதியில் இந்த ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்கையும் ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஸ்பிளெண்டர் மாடலை காட்டிலும் குறைந்த விலையில் ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்கை விரும்புபவர்களுக்கு இது ஏற்றதாகும். ஏனெனில், இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வெறும் ரூ.72,792-இல் இருந்து துவங்குகின்றன.
முதன்முதலாக 2025ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட HF டீலக்ஸ் ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்கில் 97.2சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், சைடு ஸ்டாண்ட் போடப்பட்டு இருந்தால் என்ஜின் தானாக ஆஃப் ஆகும் வசதி, ட்யூப்லெஸ் டயர்கள் மற்றும் புதிய டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
யமஹா FZ ஃபிளெக்ஸ்-ஃபியூல்
பிரபலமான ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா, இந்தியாவில் அதன் முதல் ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்காக அதன் பிரபலமான FZ பைக்கின் ஃபிளெக்ஸ்-ஃபியூல் வெர்சனை மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.1.24 லட்சத்தில் இருந்து எக்ஸ்-ஷோரூம் விலைகளை கொண்ட இந்த யமஹா ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்கை தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் மட்டுமே தற்போதைக்கு வாங்க முடிகிறது.
சுஸுகி ஜிக்ஸெர் SF250 ஃபிளெக்ஸ்-ஃபியூல்
ஹீரோ HF டீலக்ஸ் ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்கை போன்று, இந்த சுஸுகி ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்கும் 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், இது பவர்ஃபுல்லான 250சிசி என்ஜின் உடன் சுமார் ரூ.2.17 லட்சத்தில் விலையைக் கொண்டதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் எத்தனாலின் பயன்பாடு நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டு வந்தாலும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளும் சில வாகன ஓட்டிகளிடம் இருந்து தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், எத்தனாலை பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ் குறையவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆதலால், இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள நான்கு ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்குகளுள் ஒன்றை தைரியமாக வாங்கலாம்.
பைக்குகளின் படங்கள் லேட்டஸ்ட் படங்களாக மாற்றப்பட்டன.


Click it and Unblock the Notifications