கொல்லிமலை போனவங்களுக்கு இந்த கஷ்டம் தெரியும்! எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குறதா இருந்தால் இப்படி ஒன்றை வாங்கனும்
கொல்லிமலை (Kolli Hills), தென் இந்தியாவின் சவாலான மலைப்பாதைகளில் ஒன்று. 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலைப்பாதையில், கிரேவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) நிறுவனத்தின் ஆம்பியர் நெக்ஸஸ் (Ampere Nexus) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஓட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சவாலான கொல்லிமலை பாதையை வெற்றிகரமாக ஏறிய முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் என்கிற பெருமையைப் பெற்று, ஆசிய சாதனைப் புத்தகத்தில் (Asia Book of Records) ஆம்பியர் நெக்ஸஸின் பெயர் இடம்பிடித்துள்ளது. இது வாகனத்தின் வலிமை மற்றும் செயல்திறனை நிரூபிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

2026 ஜனவரி 7ஆம் தேதி காலை 7 மணிக்கு தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் பேளூக்குறிச்சியில் இருந்து கொல்லிமலை உச்சியை நோக்கி தொடங்கிய இந்த சாதனை முயற்சியில் ஆம்பியர் நெக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெறும் 22 நிமிடங்கள் 10 வினாடிகளில் இந்த சவாலான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
ஆசிய சாதனைப் புத்தகத்தின் அதிகாரிகள், அதே நாளில் இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி அங்கீகரித்தனர். இது, கிரேவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்தச் சவாலான பாதை, கிரேவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் 'பாரதத்திற்காக உருவாக்கப்பட்டது' (Built for Bharat) என்கிற பொறியியல் திறனை நிரூபித்துள்ளது.

செங்குத்தான சரிவுகள், கரடுமுரடான மலைப்பாதைகள், கூர்மையான திருப்பங்கள் மற்றும் வெவ்வேறான சுமைகளை சுமக்கும் திறன் போன்ற இந்தியாவின் பல்வேறு சவாலான சூழ்நிலைகளுக்காகவே ஆம்பியர் எலெக்ட்ரிக் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படுகின்றன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. ஆம்பியர் நெக்ஸஸ் தனது லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உயர் இழுவிசை கொண்ட எஃகு சேசிஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமையால் இந்த தனித்துவமான வெற்றியை அடைந்துள்ளது.
LFP பேட்டரி, -40°C முதல் 60°C வரையிலான வெவ்வேறு விதமான வெப்பநிலைகளில் நிலையாகச் செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்படுகிறது. நீண்ட மலை ஏற்றங்கள், தொடர்ச்சியான பிரேக்கிங் மற்றும் சுமை மாற்றங்களின்போதும் சீரான ஆற்றலைத் தொடர்ந்து வழங்குகிறது. மேலும், மலை ஏறுவதற்கான உடனடி டார்க் திறன் (torque), இறங்குவதற்கான ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (regenerative braking) மற்றும் வழுக்கும் சரிவுகளுக்கான டிராக்ஷன் கண்ட்ரோல் (traction control) ஆகியவற்றை ஆம்பியர் நெக்ஸஸின் மேம்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் மென்பொருள்கள் வழங்குகின்றன.

இது அனைத்து நிலப்பரப்புகளிலும் மென்மையான, திறமையான செயல்திறனை உறுதி செய்கிறது. இதன் உயர் வலிமை கொண்ட எஃகு சேசிஸ், வாகனத்தை சமநிலையில் வைத்து, குறிப்பாக கொண்டை ஊசி வளைவுகளில் கணிக்கக்கூடிய ரைடிங்கை உறுதி செய்கிறது. தொடர்ச்சியான ஆற்றல் வெளியீட்டிற்காக முன்பை காட்டிலும் சரிசெய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் சீரான பிரேக்கிங் மூலம் செங்குத்தான ஏற்றங்களிலும் நெக்ஸஸ் எளிதாக கையாளக்கூடியதாக இருக்கிறது.
நேபாளத்தில் வலுவான சந்தை இருப்புடன், இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் தனது சந்தையை கிரேவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது. ஆசிய சாதனை புத்தகத்தில் தற்போதைய அங்கீகாரம் பிராண்டின் சகிப்புத்தன்மை, திறன் மற்றும் நீடித்த தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. இ.எக்ஸ் மற்றும் எஸ்டி என்கிற இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஆம்பியர் நெக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.1.20 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆசிய சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டது, கிரேவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டிக்கு இதுவே முதல் முறையாகும். இது 'மேக் இன் இந்தியா' தயாரிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. நீண்ட தூர சோதனைகளை விட, இவ்வாறான சவாலான சோதனை பயணங்கள் தினசரி பயன்பாட்டில் ஸ்கூட்டரின் செயல்திறன் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications









