ஹீரோ எடுத்த அதிரடி முடிவு.. இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்!

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது ஹார்லி டேவிட்சன் (Harley Davidson). இந்த நிறுவனங்களின் கூட்டணியில் ஹார்லி டேவிட்சன் பிராண்டின் கீழ் X440 மற்றும் X440 T ஆகிய பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்பிரின்ட் 440 (Sprint 440) என்ற மற்றொரு புதிய குறைவான விலை கொண்ட பைக் மாடலையும் வெளியிடவிருப்பதாக ஹார்லி டேவிட்சன் அறிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் அமெரிக்கவைச் சேர்ந்த நிறுவனம். இதன் க்ரூஸர் பைக்குகள் உலகமெங்கும் மிகவும் பிரபலம். மேலே நாம் குறிப்பட்ட X440 பைக்குகளைத் தவிர்த்துவிட்டால், 10 லட்சம் ரூபாய்க்கு மேலான விலையிலேயே புதிய ஹார்லி பைக்கை நாம் வாங்க முடியும். அப்படி விலை அதிகமான பைக்குகளை மட்டுமே உலகமெங்கும் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

Harley Davidson bikes

இந்தியாவில் விலை குறைவான பைக்குகளைத் தான் மக்கள் அதிகம் வாங்குகிறார்கள் என்ற காரணத்தினாலேயே X440 என்ற விலை குறைவான பைக்கை ஹீரோவுடன் கூட்டணி அமைத்து வெளியிட்டது ஹார்லி. ஹீரோ நிறுவனமே இந்தியாவில் இந்த X440 பைக்கை தயாரித்து வருகிறது. இந்த பைக்கின் இன்ஜினை தங்களுடைய பைக்குகளிலும் ஹீரோ பயன்படுத்திக் கொண்டுள்ளது.

குறைவான விலை என்றாலும் இந்த X440 பைக் வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. ஹார்லி டேவிட்சனிடம் இருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த டிசைன் இது இல்லை. அதிகம் விற்பனையாவதற்கு பிராண்டின் பெயர் மட்டும் போதவில்லை. எனவே இந்த X440 பைக்கைத் தொடர்ந்து ஸ்பிரிண்ட் 440 (Sprint 440) என்ற புதிய பைக் மாடலை வெளியிடத் திட்டமிட்டதோடு, இதன் டிசைன் ஸ்கெட்ச்சையும் தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பகிர்ந்து கொண்டுள்ளது.

Harley Davidson Fat boy

ஹார்லி டேவிட்சனின் பெரிய க்ரூஸர் பைக்குகள் என்ன வகையான டிசைன் லாங்குவேஜைக் கொண்டிருக்குமோ அதே போன்ற டிசைன் லாங்குவேஜை புதிய ஸ்பிரிண்ட் 440 பைக்கிறகும் அந்நிறுவனம் கொடுக்கவிருப்பதை இந்த டிசைன் ஸ்கெட்ச்சைப் பார்த்தே நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இப்போது தான் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் சரியான பாதையில் செல்லத் தொடங்கியிருக்கிறது. இது போன்ற பைக்கையே வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்திடம் எதிர்பார்க்கிறார்கள்.

டிசைன் இது தான் என்றாலும், இன்ஜின் மற்றும் மற்ற வசதிகள் எல்லாம் X440 பைக்கில் இருப்பதே இருக்கும் எனத் தெரிகிறது. அந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு வரும் 27 hp பவர் மற்றும் 38 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 440 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜின் தான் புதிய ஸ்பிரிண்ட் பைக்கிலும் பயன்படுத்தப்படும். X440 T பைக்கில் கொடுக்கப்பட்டிருப்பது போல ரைடு-பை-வயர் திராட்டில், ட்ராக்ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோடுகள் ஆகிய அம்சங்கள் புதிய ஸ்பிரிண்ட் 440-யிலும் எதிர்பார்க்கப்படுகின்றன.

X440 பைக்குகளை இந்தியாவில் மட்டுமே ஹார்லி டேவிட்சன் விற்பனை செய்தது. ஆனால் புதிய ஸ்பிரிண்ட் 440 பைக் மாடலை இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி, இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 3 லட்சம் ரூபாயை ஒட்டி விலையில் இந்தப் புதிய பைக் மாடல் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ன் இறுதியில் இதன் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: X440 பைக்கின் டிசைன் நன்றாகத் தான் இருக்கிறது என்றாலும், ஹார்லி டேவிட்சன் என்ற பிராண்டுக்கு ஏற்றதாக இல்லையோ என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது. புதிய ஸ்பிரிண்ட் 440 பைக்கின் டிசைன் ஸ்கெட்ச்சைப் பார்த்தவும் அந்தக் எண்ணம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஹார்லி டேவிட்சனின் ஸ்பிரிட்டை வெளிக்காடும் ஒரு பைக் மாடலாக புதிய ஸ்பிரிண்ட் 440 இருக்கும்.

Article Published On: Friday, May 8, 2026, 12:56 [IST]
English summary
Harley davidson to launch low price sprint 440 bike in india soon
மேலும்... #harley davidson #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+