மக்கள் தலையில இடியை இறக்கிட்டாங்க.. ஒரே ராத்திரியில் நடந்த சம்பவம்.. இனி யாரும் நெனைச்சு கூட பார்க்க முடியாது!

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் விலை குறைவான பைக்கான X440-யின் விலையை உயர்த்தியிருக்கிறது ஹார்லி டேவிட்சன். ஹீரோவுடன் கூட்டணி அமைத்து பெரும்பான்மை பைக் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக இந்த X440 பைக்கை அந்நிறுவனம் வெளியிட்டது. ஓரளவிற்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பைப் பெற்றது இந்த பைக். தற்போது இதன் விலையை உயர்த்தியிருக்கிறது அந்நிறுவனம்.

X440 பைக்கை விவிட் மற்றும் S என இரண்டு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது ஹார்லி டேவிட்சன். இவை இந்த பைக்கின் தொடக்கத்தில் இருந்தே விற்பனையில் இருக்கும் வேரியன்ட்கள் தான். இந்த நிலையில் X440 T என்ற மேம்படுத்தப்பட்ட மாடலையும் கடந்தாண்டு டிசம்பரில் அந்நிறுவனம் வெளியிட்டது. X440 விவிட் மற்றும் X வேரியன்ட்களில் இருந்து காஸ்மெடிக்காக சிறிய அளவில் வேறுபட்டும், அவற்றை விட கூடுதல் வசதிகளையும் இந்த T மாடல் கொண்டிருந்தது.

Harley Davidson X440

தற்போது அனைத்து X440 வேரியன்ட்களின் விலைகளையும் ஹார்லி டேவிட்சன் உயர்த்தியிருக்கிறது. X440 லைன்-அப்பிலேயே விவிட் தான் விலை குறைவான வேரியன்ட். அதன் விலையை தான் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது. அதேபோல் S வேரியன்டின் விலையை ரூ.4,000 வரை உயர்த்தியிருக்கிறது. இந்த வேரியன்ட்கள் இனி முறையே 2.36 லட்சம் ரூபாய் மற்றும் 2.59 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

அதேபோல், மேம்பட்ட வசதிகளுடன் விலை உயர்ந்த வேரியன்டாக X440 T-யே இருந்து வருகிறது. இதன் விலையை தான் அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது ஹார்லி டேவிட்சன். இனி X440 T பைக் மாடலானது 2.84 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Harley Davidson X440

அனைத்து வேரியன்ட்களிலும் ஒரே 440 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் அல்லது ஆயில் கூல்டு இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 27 hp பவர் மற்றும் 38 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

மற்ற இரண்டு வேரியன்ட்களை விடவும் T வேரியன்டில் கூடுதல் வசதிகள் இருக்கின்றன என மேலே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா. மற்ற வேரியன்ட்களை விட, ரைடு-பை-வயர் திராட்டில், இரண்டு ரைடிங் மோடுகள், ஸ்விட்சபிள் ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஸ்விட்சபிள் ஏபிஎஸ் ஆகிய அம்சங்களையே கூடுதலாகக் கொண்டிருக்கிறது X440 T மாடல்.

பைக்கின் பின்பக்க டிசைனையும் விவிட் மற்றும் S வேரியன்ட்களில் இருந்து T வேரியன்டில் மாற்றி அமைத்திருந்தது ஹார்லி. முந்தைய மாடலின் பின்பக்க அவ்வளவு சிறப்பாக இல்லையென்ற வாடிக்கையாளர்களின் கருத்துக்கு ஏற்ப இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்தது. இந்த மாற்றங்களைத் தொடர்ந்து விவிட் மற்றும் S வேரியன்ட்களில் இருந்து X440 T வேறுபட்ட ஒரு வடிவமாக மாறியது.

இந்த விலை உயர்வானது X440 T மாடலை போட்டியாளர்களை விட இன்னும் சற்று விலை உயர்ந்ததாக மாற்றியிருக்கிறது. இந்தியாவில் ட்ரையம்ப் ட்ராக்கர், ஹோண்டா CB350 RS மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இந்த X440-யை கூறலாம். இந்த விலை உயர்வுடன் கிளாஸிக் 350-யை விட சுமார் 1 லட்சம் வரை கூடுதல் விலையைக் கொண்டதாக மாறியிருக்கிறது ஹார்லி டேவிட்சன் X440 T.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: X440 பைக்கின் டிசைன், பெர்ஃபாமன்ஸ் எல்லாம் ஓகே தான். ஆனால் நாம் கொடுக்கும் விலைக்கு நம்மை இந்த பைக் அசரவைக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். போட்டியாளர்கள் இல்லையென்றால் பிரச்சினையில்லை. 400 சிசி முதல் 450 சிசிக்குள்ளான பைக் பிரிவில் தற்போது நிறைய போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த விலை உயர்வு பைக்கின் விற்பனை மீது எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Article Corrections

தலைப்பில் 'மனசுல' என இருந்தது 'தலையில' என மாற்றப்பட்டது.
Article Published On: Tuesday, June 16, 2026, 8:59 [IST]
English summary
Harley davidson x440 bike price hiked in india now more expensive than ever
மேலும்... #harley davidson #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out