ஐந்து மடங்கு உயர்ந்த விற்பனை.. அப்படி இந்த ஸ்கூட்டர்ல என்ன தான் இருக்கு?

ஒரு ஸ்கூட்டரின் விற்பனை குறிப்பிட்ட கால அளவுடன் ஒப்பிடும் போது சில ஆயிரங்கள் அதிகரிப்பது ஓகே தான். ஆனால் இந்த ஸ்கூட்டரின் விற்பனை 5 மடங்க, அதாவது 488% உயர்ந்திருக்கிறது. அது எந்த ஸ்கூட்டர் தெரியுமா, வேறெதுவும் இல்லை ஹீரோவின் டெஸ்டினி தான். பல ஆண்டுகளாக இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இதனை ஹீரோ அப்டேட் செய்தது. அதன்பிறகு விற்பனை விண்ணைப் பிளந்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் சுமார் 4,393 டெஸ்டினி ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது ஹீரோ. இதுவே கடந்த ஏப்ரல் மாதம் இதன் அளவு மேலே கூறியது போது 5 மடங்கு, அதாவது சுமார் 488% அதிகரித்து 25,861 யூனிட்டுகளாக உயர்ந்திருக்கிறது. ஒரே ஆண்டில் எந்தவொரு ஸ்கூட்டரின் விற்பனையும் இதுவரை இவ்வளவு உயர்ந்ததில்லை. இந்த விற்பனை அளவுடன் ஸ்கூட்டர் சந்தையில் 4.35% சந்தைப் பங்குகளை தன்வசப்படுத்தியிருக்கிறது டெஸ்டினி ஸ்கூட்டர்.

Hero Destini 110

ஒரு ஸ்கூட்டரின் விற்பனை ஒரே ஆண்டில் இவ்வளவு உயர்ந்ததிற்கு பின்னால் ஒரு காரணம் இருக்க வேண்டும் இல்லையா? இருக்கிறது. முன்பு சாதாரணமாக டிசைனையே இந்த டெஸ்டினி ஸ்கூட்டர் கொண்டிருந்தது. தற்போது மிகவும் கிளாஸியான ரெட்ரோ டிசைனைக் கொண்டிருக்கிறது. பார்த்தவுடன் ஒரு கணம் இது என்ன ஸ்கூட்டர் என்று திரும்பிப் பார்க்க வைக்கும் வகையிலான டிசைனை தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டெஸ்டினி ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது.

இந்த டிசைன் மாற்றம் தான் டெஸ்டினியை தற்போது உச்சத்தில் தூக்கி வைத்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் இதன் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் ஸ்கூட்டர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர், சுஸூகி அக்சஸ், டிவிஎஸ் என்டார்க் ஆகிய ஸ்கூட்டர்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டராக ஹீரோ டெஸ்டினி இருக்கிறது.

Hero Destini 125

தற்போது இந்தியாவில் இரண்டு விதமான டெஸ்டினி ஸ்கூட்டர்களை ஹீரோ விற்பனை செய்து வருகிறது. ஒன்று டெஸ்டினி 110, மற்றொன்று டெஸ்டினி 125. டெஸ்டினி 110 ஸ்கூட்டரானது 110 சிசி இன்ஜினுடன், 73,550 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் டெஸ்டினி 125 ஸ்கூட்டரானது 124 சிசி இன்ஜினுடன், 77,888 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இரண்டுமே நல்ல மைலேஜ் கொடுக்கும் ஸ்கூட்டரகளாகவே இருந்து வருகிறது. டெஸ்டினி 110 ஸ்கூட்டரானது லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ் கொடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது ஹீரோ மோட்டோகார்ப். அதேபோல் டெஸ்டினி 125 ஸ்கூட்டரானது லிட்டருக்கு இன்னும் சற்று அதிகமாக 60 கிமீ மைலேஜ் கொடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம்.

டெஸ்டினி 110 ஸ்கூட்டரை VX மற்றும் ZX என இரண்டு வேரியன்ட்களாக ஐந்து தனித்துவமான நிறங்களிலும், டெஸ்டினி 125 ஸ்கூட்டரை VX, ZX மற்றும் ZX+ என மூன்று வேரியன்ட்களாக ஆறு விதமான தனித்துவமான நிறங்களிலும் விற்பனை செய்து வருகிறது ஹீரோ. அதேபோல் 125 சிசி ஸ்கூட்டரின் டாப் எண்டு வேரியன்டில் பிரான்ஸ் எலமென்ட்கள் கொடுக்கப்பட்டிருப்பது ப்ரீமியமான லுக்கைக் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்டினி ஸ்கூட்டர் நீங்கள் முன்பு பார்த்தைப் போல இல்லை. எனவே புதிய ஸ்கூட்டர் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் டெஸ்டினியை மீண்டும் ஒரு முறை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். இப்போது உங்களுக்குப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதே வேகத்தில் சென்றால் அடுத்த சில ஆண்டுகளில் ஆக்டிவா, ஜூப்பிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனைக்குப் போட்டியாக டெஸ்டினி வந்துவிடும்.

Article Published On: Thursday, May 21, 2026, 11:44 [IST]
English summary
Hero destini scooter sales increased 5 fold in just 1 year how is it happen
மேலும்... #hero motocorp #scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+