ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் புதிய ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 பைக் அறிமுகம்... முழு விபரம்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது கிளாமர் எக்ஸ் 125 பைக்கில் முக்கியமான பாதுகாப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஏபிஎஸ் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் அமைப்புடன் கூடிய புதிய கிளாமர் எக்ஸ் 125 பைக் ரூ.1,01 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறிப்பாக, 125 சிசி பைக் சந்தையில் ஒற்றை சேனல் ஏபிஎஸ் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்கிங் அமைப்பு ஆகிய இரண்டும் இணைந்து வழங்கப்படும் முதல் பைக் கிளாமர் எக்ஸ் 125 என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. இதனால், மிகச் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்ட பைக் மாடலாக இது மாறி இருக்கிறது.

Hero Glamour 125 ABS Launched

ஏபிஎஸ் வசதியை தவிர்த்து ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அவசரமாக பிரேக் போடும்போது பின்புறம் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் எல்இடி விளக்குகள் கொண்ட அவசர பிரேக் எச்சரிக்கை வசதி இதில் உள்ளது. அவசர நிலைகளில் மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை அளிக்க அபாய விளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, கிளாமர் எக்ஸ் 125 தொடர்ந்து அதன் கவர்ச்சியான தோற்றத்தை தக்க வைத்துள்ளது. கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட உடல் அமைப்பு, முழு எல்இடி விளக்குகள் மற்றும் ஹீரோ நிறுவனத்தின் அடையாள வடிவமைப்புடன் கூடிய விளக்குகள் ஆகியவை பைக்கின் தோற்றத்திற்கு வலு சேர்க்கின்றன.

Also Read

இந்த பைக்கில் 4.2 அங்குல அளவிலான பல் வண்ண தகவல் திரை வழங்கப்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட தகவல்களை பார்க்க முடியும். கியர் மாற்றுவதற்கான பரிந்துரை, மீதமுள்ள எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்ற தகவல் மற்றும் நிகழ்நேர மைலேஜ் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெறுகின்றன.

புளூடூத் இணைப்பு, வழிகாட்டுதல் வசதி, அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி எச்சரிக்கைகள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. நீண்ட தூர பயணங்களில் ஒரே வேகத்தை பராமரிக்க உதவும் வேகக் கட்டுப்பாட்டு வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

Also Read

புதிய கிளாமர் எக்ஸ் 125 மாடலில் 124.7சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சமாக 8,250 என்ற எஞ்சின் சுழல் வேகத்தில் 11.4 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மென்மையான பவரை வெளிப்படுத்தும் திறன், குறைவான அதிர்வு மற்றும் சத்தம் ஆகியவற்றை வழங்கும் வகையில் இந்த எஞ்சின் பெயர் பெற்றுள்ளது.

ஓட்டுநர்களின் தேவைக்கு ஏற்ப ஈக்கோ, ரோடு மற்றும் பவர் என எஞ்சினை மூன்று விதமான செயல்திறன் முறைகளில் ஓட்டும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அகலமான கைப்பிடி, நீளமான இருக்கை, உயரம் குறைவானவர்களுக்கும் ஏதுவான குறைந்த இருக்கை உயரம், இருக்கைக்கு அடியில் இரட்டை கைப்பேசி வைப்பதற்கான இடவசதி மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் வசதி ஆகியவை அன்றாட பயன்பாட்டுக்கு உதவுகின்றன.

புதிய ஏபிஎஸ் மாடலுக்கு கன் மெட்டல் கிரே மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே என இரண்டு புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் ஏற்கனவே வழங்கப்பட்ட பிளாக் பேர்ல் ரெட் மற்றும் பிளாக் டீல் ப்ளூ ஆகிய நிறங்களிலும் இந்த பைக் கிடைக்கும்.

நாட்டின் அனைத்து ஹீரோ மோட்டோகார்ப் விற்பனையகங்களிலும் புதிய கிளாமர் எக்ஸ் 125 ஏபிஎஸ் மாடல் கிடைக்கும். பாதுகாப்பு, தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அன்றாட பயன்பாடு ஆகியவற்றை ஒரே பைக்கில் எதிர்பார்க்கும் 125 சிசி வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய மாடல் கூடுதல் தேர்வாக இருக்கும்.

Article Published On: Sunday, September 13, 2026, 9:28 [IST]
English summary
Hero glamour x 125 abs launched india price features specs availability
மேலும்... #new launches #hero motocorp
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out