அதிக மைலேஜ் கொடுக்கும் ஹீரோ கிளாமர் எக்ஸ்.. க்ரூஸ் கண்ட்ரோல், ரைடு-பை-வயர் வசதிகளையும் கொண்டுள்ளது!

இந்தியாவில் ப்ரீமியமான வசதிகளுடன் குறைவான விலையில் ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்று நினைத்தால் ஹீரோ கிளாமர் எக்ஸ் (Hero Glamour X) அதற்கான சிறந்த தேர்வாக இருக்கும். கிளாமர் சாதாரண பைக் தானே என்று தான் நினைப்பீர்கள், நாம் பேசிக் கொண்டிருப்பது கடந்தாண்டு வெளியான மேம்பட்ட கிளாமர் எக்ஸ் பைக்கைப் பற்றி.

ஸ்டாண்டர்டான கிளாமர் பைக்கில் இருந்து வேறுபட்டு நிற்கும் வகையில் பல்வேறு வகையிலும் ப்ரீமியம் வசதிகள் கொண்ட பைக்காக இந்த கிளாமர் எக்ஸ் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகவும் குறைவான விலையில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியைக் கொண்டிருக்கும் பைக் மாடல் இது தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ப்ரீமியமான வசதிகள் மட்டுமின்றி, அதிக மைலேஜ் கொடுக்கும் பைக் மாடலாகவும் இந்த கிளாமர் எக்ஸ் இருக்கிறது.

Hero Glamour X

இந்த பைக்கை டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியன்ட்களாக இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹீரோ. இரண்டு வேரியன்ட்களிலும் என்னென்ன அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த வேரியன்டை நீங்கள் தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கும் ஆகிய தகவல்களை எல்லாம் இங்கே நாம் பார்க்கலாம்.

முதலில் இந்த பைக்கின் மெக்கானிக்கல் அம்சங்களைக் குறித்து பார்த்துவிடலாம். மெக்கானிக்கலாக இரண்டு வேரியன்ட்களிலும் ஒரே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 124.7 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 8,250 rpm-ல் 11.5 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 10.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Hero Glamour X

டிரம் வேரியன்ட்:

ஹீரோ கிளாமர் எக்ஸ் மாடலின் அடிப்படை வேரியன்ட் இது தான். வேரியன்டின் பெயருக்கேற்ப இதில் இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வேரியன்ட் என்பதால் LED இன்டிகேட்டர்கள், பேனிக் பிரேக் அலர்ட் ஆகிய அம்சங்களை இதில் ஹீரோ கொடுக்கவில்லை. மேலும், கிளாமர் எக்ஸ் பைக்கின் பேசுபொருளாக இருக்கும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் இதில் மிஸ்ஸிங். இந்த அடிப்படை வேரியன்ட் ரூ.88,410 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.

டிஸ்க் வேரியன்ட்:

கிளாமர் எக்ஸ் மாடலின் டாப் எண்டு வேரியன்டான இதில் பெயருக்கு ஏற்றது போல, முன்பக்க வீலில் மட்டும் டிரம் பிரேக்கிற்குப் பதிலாக டிஸ்க் பிரேக் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலே அடிப்படை வேரின்டில் மிஸ்ஸான அனைத்து வசதிகளும் இந்த டாப்-எண்டு வேரியன்டில் கொடுக்கப்பட்டுள்ளது. LED இண்டிகேட்டர்கள் மற்றும் பின்பக்க விளக்குகள், பேனிக் பிரேக் அலர்ட், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரைடு-பை-வயர் ஆகிய மேம்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இந்த கிளாமர் எக்ஸ் வேரியன்ட்.

இரண்டு வேரியன்ட்களையும் பல்வேறு டூயல் டோன் நிறங்களில் நாம் வாங்கலாம். இந்த மேம்பட்ட வசதிகள் கொண்ட டாப்-எண்டு வேரியன்டை ரூ.95,785 என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹீரோ. இது அடிப்படையான டிஸ்க் வேரியன்டை விட 7,375 ரூபாய் கூடுதலான விலை என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேம்பட்ட அம்சங்களுக்காகவே இந்த கிளாமர் எக்ஸ் 125 சிசி பைக்கை வாங்குகிறோம் என்று சொல்லும் வாடிக்கையாளர்கள் டாப் எண்டான டிஸ்க் வேரியன்டை வாங்கவே நாங்கள் பரிந்துரை செய்கிறோம். ரூ.7,000 வரை கூடுதல் விலை என்றாலும் அதற்குண்டான மதிப்பையும் இந்த டாப் எண்டு வேரியன்ட் கொண்டிருக்கிறது.

அடிப்படை வேரியன்டின் விலை சற்று குறைவு தான் என்றாலும், அதற்கு போட்டியாக நிறைய பைக்குகளையும் நாம் கூற முடியும். ஆனால் டாப் எண்டு வேரியன்ட் கொண்டிருக்கும் வசதிகளை, அதே விலையில் வேறு எந்த பைக் மாடலும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, May 2, 2026, 13:45 [IST]
English summary
Hero glamour x variants features and price explained check all details here
மேலும்... #hero motocorp #bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+