யானைக்கும் அடி சறுக்கும்! திடீரென விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்த பைக்! கனவுல கூட இதை யாரும் நெனச்சு பாக்கல!
இந்திய சந்தையில் அவ்வளவு எளிதில் வீழ்ச்சியை காணாத ஒரு சில பைக்குகள் இருக்கின்றன. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல், ஒரு சில சமயங்களில் அவையும் வீழ்ச்சியை சந்தித்து விடுகின்றன. இந்த வகையில் தற்போது ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக், விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் வெறும் 66,722 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 1,07,768 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது இம்முறை 41,046 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 38.09 சதவீத வீழ்ச்சி ஆகும். ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் ஒவ்வொரு மாதமும் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வந்த பைக் ஆகும். ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் திடீரென விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பதிவு செய்துள்ளது.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில், மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருப்பது ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ்தான். ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் தவிர, வேறு எந்த பைக்கும் விற்பனையில் இந்த அளவிற்கு வீழ்ச்சியை சந்திக்கவில்லை.

எனினும் கூடிய விரைவிலேயே ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெகு சமீபத்தில் ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் (Flex-Fuel) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது E20 (20 சதவீதம் எத்தனால் + 80 சதவீதம் பெட்ரோல்) முதல் E85 (85 சதவீதம் எத்தனால் + 15 சதவீதம் எத்தனால்) வரையிலான எரிபொருளில் இயங்க கூடியதாகும்.
இந்திய சந்தையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனின் விலை 72,792 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹெச்எஃப் டீலக்ஸ் மட்டுமல்லாது, ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் பைக்கின் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வெர்ஷனையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
அதன் விலை 82,710 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் E20 முதல் E85 வரையிலான எரிபொருளில் இயங்க கூடியதாகும். முதற்கட்டமாக இந்த 2 பைக்குகளின் டெலிவரியும் அடுத்த ஜூலை மாதத்தில் இருந்து டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தொடங்கப்படவுள்ளது. அதன் பின் படிப்படியாக இந்தியா முழுவதும் டெலிவரி தொடங்கப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100), பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) போன்ற பைக்குகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் திகழ்கிறது. தற்போது வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, கூடிய விரைவில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக், மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications