650 கிமீ மைலேஜ் தரும் ஹீரோ பைக்! விலை வெறும் 56 ஆயிரம்தானா! மொத்த உலகத்தையும் திரும்பி பாக்க வெச்சுட்டாங்க!
இந்திய சந்தையில் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு (Entry Level Commuter Bikes) மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது. இவை குறைவான விலையில் கிடைப்பதும், அதிக மைலேஜ் வழங்குவதும்தான் இதற்கு காரணம். குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ் ஆகிய 2 அம்சங்கள்தான், இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கின்றன.
இந்த 2 அம்சங்களையும் ஒரு சேர பூர்த்தி செய்யும் ஒரு சில பைக்குகளில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல.

ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 49,051 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 41,713 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7,338 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் விற்பனையில் 17.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இந்த வளர்ச்சியின் மூலமாக கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 டூவீலர்களின் பட்டியலில் (Top 10 Two Wheelers December 2025), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் 7வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த பட்டியலில் முதல் 6 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர், ஹோண்டா ஆக்டிவா, ஹோண்டா ஷைன், டிவிஎஸ் ஜூபிடர், பஜாஜ் பல்சர் மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் ஆகிய டூவீலர்கள் உள்ளன. இந்த வரிசையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.
ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில் 97.2 சிசி, ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர், ஓஹெச்சி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5.9 Kw பவரையும், 8.05 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின் பகுதியில் 2 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்த பைக்கின் இருக்கை உயரம் 805 மிமீ ஆக இருக்கிறது. இது மிகவும் சிறப்பான இருக்கை உயரமாக கருதப்படுகிறது.
இருக்கை உயரம் சிறப்பாக முறையில் வழங்கப்பட்டிருப்பதால், குறைவான உயரம் கொண்டவர்களால் கூட, இந்த பைக்கை எளிமையாகவும், நம்பிக்கையுடனும், பாதுகாப்பாகவும் ஓட்ட முடியும். அதே நேரத்தில் இந்த பைக்கின் எடையும் கூட வெறும் 112 கிலோவாக மட்டுமே இருக்கிறது. எனவே இந்த பைக்கின் கையாளுமை மிகவும் எளிமையான ஒரு விஷயமாக இருக்கும். மறுபக்கம் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 165 மிமீ ஆகவும், எரிபொருள் டேங்க் கொள்ளளவு 9.6 லிட்டர்களாகவும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை வெறும் 56,742 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 69,235 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இது விலை குறைவானது என்பதுடன், ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியதாக உள்ளது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஆகும். எனவே எரிபொருள் டேங்க்கை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 652.8 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) போன்ற பைக்குகள் உடன், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் போட்டியிட்டு வருகிறது.
ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியா ஆகிய பிராந்தியங்களில் உள்ள உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








