70 கிமீ மைலேஜ் தரும் பைக் விலை வெறும் 57 ஆயிரம்தானா! 15, 20 வருஷத்துக்கு வெச்சு ஓட்டலாம்! மாடு மாரி உழைக்கும்!
இந்தியாவில் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகள்தான் (Entry Level Commuter Bikes) மிகவும் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளின் விலை குறைவு. அத்துடன் அவற்றை பராமரிப்பதும் மிகவும் எளிமையான ஒரு விஷயமாகவே உள்ளது. கூடுதலாக அவை சிறப்பான மைலேஜையும் வாரி வழங்குகின்றன.
எனவே ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளைதான், இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இந்த செக்மெண்ட்டில் ஏராளமான பைக்குகள் கிடைக்கின்றன. இதில், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மிகவும் முக்கியமானது. இந்திய சந்தையில் இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 71,717 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 70,581 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 1,136 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 1.61 சதவீத வளர்ச்சி ஆகும்.

விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், நடப்பு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில், (Top 10 Bikes February 2026) ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் 4வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது.
இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஷைன் (Honda Shine) மற்றும் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) ஆகிய பைக்குகள் உள்ளன. இந்த வரிசையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் 4வது இடத்தை பிடித்துள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான பைக்குகளில் ஒன்றாகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை வெறும் 57,657 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 70,150 ரூபாயாக மட்டுமே உள்ளது. இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
அதே நேரத்தில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கில் 97.2 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஓஹெச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 5.9 kW பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 8.05 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 70 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) தரும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக் என்பதால், கையாள்வதற்கும், பராமரிப்பதற்கும் மிகவும் எளிமையானது. எனவே அடிப்படையான பராமரிப்பு பணிகளை மட்டும் சரியாக மேற்கொண்டாலே ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கை நீண்ட வருடங்களுக்கு பயன்படுத்த முடியும்.
ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக i3S தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது மைலேஜை அதிகரிக்க உதவி செய்யும். அத்துடன் செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டிஜிட்டல் கன்சோல் போன்ற வசதிகளையும் (Features) ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) ஆகிய பைக்குகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனான ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் திகழ்கிறது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








