ஷைன், பிளாட்டினாவை விட 10 ஆயிரம் குறைவான விலையில் ஹீரோ பைக்! 70 கிலோ மீட்டர் மைலேஜை வாரி வழங்குது!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான பைக்குகளில் ஒன்று ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe). அத்துடன் இது சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய பைக்குகளில் ஒன்றாகவும் இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.
இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதமும் விதிவிலக்கு அல்ல. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 71,690 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 62,223 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 9,467 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 15.21 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes January 2026), ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ், 4வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹோண்டா ஷைன் (Honda Shine), பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) ஆகிய பைக்குகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. இந்த வரிசையில் 4வது இடம் பிடித்துள்ள ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், மிகவும் விலை குறைவானது ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை வெறும் 56,742 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 69,235 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இது போட்டி மாடல்களை விட மிகவும் குறைவான விலை ஆகும்.
ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் மிக முக்கியமான போட்டி மாடல்களில் ஒன்று பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100). இதன் ஆரம்ப விலை 66,015 ரூபாயாக இருக்கிறது. அதாவது பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் ஆரம்ப விலையுடன் ஒப்பிடும்போது, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 9,273 ரூபாய் குறைவு ஆகும்.
அதேபோல் ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) பைக்கும், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கிற்கு முக்கியமான போட்டி மாடல்களில் ஒன்றுதான். இதன் ஆரம்ப விலை 65,243 ரூபாயாக இருக்கிறது. அதாவது ஹோண்டா ஷைன் 100 பைக்குடன் ஒப்பிடும்போது, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை 8,501 ரூபாய் குறைவு ஆகும். இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் பஜாஜ் பிளாட்டினா 100 மற்றும் ஹோண்டா ஷைன் 100 ஆகிய பைக்குகளுக்கு எல்லாம் மாற்றாக, மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடிய ஒரு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ஏற்றது. இதன் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








