உறுதியா 70 கிமீ மைலேஜ் தரும்! ஆனா விலை வெறும் 58 ஆயிரம்தான்! பஜாஜ், ஹோண்டாவை திணற வைக்கும் ஹீரோ பைக்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கம்யூட்டர் ரக பைக்குகளில் ஒன்று ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe). இந்த பைக்கில் 97.2 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5.9 kW பவரையும், 8.05 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 70 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைலேஜில் மட்டுமல்லாது, வசதிகளிலும் (Features) ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக் தலைசிறந்து விளங்குகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Hero HF Deluxe

இதில், அதிக மைலேஜ், உடனடி பிக்-அப் மற்றும் பவர் ஆகியவற்றை உறுதி செய்யும் சென்சார் அடிப்படையிலான எக்ஸ்சென்ஸ் ஸ்டார்ட் சென்சார் தொழில்நுட்பம், செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக அதிக மைலேஜை உறுதி செய்யும் i3S தொழில்நுட்பம், செக்மெண்ட்டிலேயே முதல் முறையாக எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

சிறப்பான மைலேஜ் மற்றும் ஏராளமான வசதிகள் என பல்வேறு ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தாலும் கூட, ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விலை மிகவும் குறைவு. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 58,977 ரூபாயாக மட்டுமே உள்ளது.

Hero HF Deluxe

அதே நேரத்தில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 71,470 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Delhi Ex-Showroom Price) ஆகும்.

இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருப்பதால், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை, இந்திய சந்தையில் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் மட்டும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கிற்கு சிறப்பாக அமையவில்லை. ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்கின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 85,088 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 91,821 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது இம்முறை 6,733 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 7.33 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் விற்பனை எண்ணிக்கை சிறப்பாக உள்ளதால், நடப்பு 2026ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் பட்டியலில் ஹெச்எஃப் டீலக்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 3,32,227 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் வழக்கம் போல ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) முதல் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100), ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது. தற்போது அந்த பைக்கிற்கு ஏற்பட்டிருப்பது தற்காலிகமான ஒரு சரிவாக மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். எனவே கூடிய விரைவிலேயே ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என்பது எங்கள் கருத்து.

Article Published On: Tuesday, April 28, 2026, 16:19 [IST]
English summary
Hero hf deluxe sales report march 2026 7 per cent down
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+