இந்தியாவிலேயே விலை குறைவான.. அதிக மைலேஜ் கொடுக்கும் பைக் இது தான்!
இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ஒரு பைக்கை வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் இது தான். நாம் பேசிக் கொண்டிருப்பது ஹீரோவின் HF100 பைக்கைப் பற்றித் தான். இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான பைக் இது தான். இதனை 57,810 ரூபாய் என்ற விலையில் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) நாம் வாங்கலாம்.
குறைவான விலைக்கேற்ப வசதிகளும் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் தினசரிப் போக்குவரத்திற்கு போதுமான பைக்காகவே HF100 இருக்கும். இன்றைய நிலையில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அனைத்து பைக்குகளிலும் சாதாரணமாகக் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அடிப்படையான HF100 பைக்கில் கிக் ஸ்டார்ட் மட்டும் தான். செல்ஃப் ஸ்டார்ட், அதாவது எலெக்ட்ரிக் ஸ்டார்ட் கிடையாது.

எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேண்டும் என்றால் HF டீலக்ஸ் பைக்கை நீங்கள் பரிசீலனை செய்யலாம். ஆனால் விலையும் சற்று கூடுதலாக இருக்கும். HF டீலக்ஸின் விலை குறைவான ஆல் பிளாக் வேரியன்டானது 69,366 ரூபாய் என்ற விலையை (எக்ஸ்-ஷோரூம் சென்னை) விலையைக் கொண்டுள்ளது. சற்று கூடுதல் விலைக்கேற்ப HF100-ஐ விட சில கூடுதல் வசதிகளையும் இந்த பைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்கானிக்கலாகவும், டிசைன் வகையிலும் HF100 மற்றும் HF டீலக்ஸ் ஆகிய இரண்டு பைக்குகளும் ஒன்று தான். இரண்டு பைக்குகளிலும் 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால் இந்த இன்ஜின் தான் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த இன்ஜின் ஸ்மூத்னஸ் பற்றி நாம் தனியே சொல்ல வேண்டியதில்லை.

4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 8 hp பவர் மற்றும் 8.05 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. HF100 மற்றும் ஸ்பிளெண்டர் இரண்டிலும் இந்த இன்ஜின் ஒரே போலான பெர்ஃபான்ஸை வெளிப்படுத்தும் விதமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
HF100 பைக்கானது ஒரேயொரு வேரியன்டாக, மேலே குறிப்பிட்ட குறைவான விலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ப்ளூ பிளாக் மற்றும் ரெட் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் இந்த பைக்கை நாம் வாங்கலாம். கூடுதல் நிறத் தேர்வுகள் மற்றும் வசதிகள் வேண்டும் என்பவர்கள் HF டீலக்ஸ் பைக்கையே தேர்வு செய்ய வேண்டும். முழுவதுமான கருப்பு நிறம் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறங்களில் HF டீலக்ஸை நாம் வாங்கலாம்.
இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கில், சைடு ஸ்டாண்டு இன்ஜின் கட்-ஆஃப் மற்றும் கீழே விழுந்தால் இன்ஜின் ஆஃப் ஆகி விடும் சில பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகளில் ஒன்றாகவும் இந்த HF100 உள்ளது.
குறைவான விலை மற்றும் அதிக மைலேஜ் என்பது இந்திய இருசக்கர வாகன சந்தையில், அதுவும் தொடக்கநிலை இருசக்கர வாகனங்களில் சிறப்பான ஒரு காம்போ. எனவே தான் இந்த HF சீரிஸ் பைக்குகள் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒன்றாகவும் இருக்கின்றன. லிட்டருக்கு 70 கிமீ வரையிலான மைலேஜை கொடுக்கும் திறனைக் HF100 பைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பட்ஜெட் மற்றும் அதிக மைலேஜ் தான் உங்களது முக்கியம் என்றால் கண்களை மூடிக் கொண்டு இந்த ஹீரோ HF டீலக்ஸ் பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம். சில கூடுதல் வசதிகளும் வேண்டும் என்றால் HF டீலக்ஸையும், பார்ப்பதற்கு கொஞ்சம் நல்ல டிசைனுடனும் இருக்க வேண்டும் என்றால் ஹீரோ ஸ்பிளெண்டரையும் சேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications