ஜூலை மாதத்திற்குள் புக் செய்தால் ரூ.4,000 சேமிக்கலாம்! ரூ.80,000க்கும் குறைவான புதிய ஸ்பிளெண்டர் பைக்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய 'ஃபிளெக்ஸ்-ஃபியூல்' (Flex-Fuel) என்ஜின் கொண்ட ஸ்பிளெண்டர்+ மற்றும் ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த பைக்குகளுக்கு புதிய அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்குகளுக்கு, தற்போதில் இருந்தே ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இந்த ரூ.4,000 தள்ளுபடிக்கு பிறகு, ஸ்பிளெண்டர்+ ஃபிளெக்ஸ் (Splendor+ Flex) பைக்கின் தமிழ்நாட்டிற்கான எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.78,606 ஆகக் குறைந்துள்ளது. இது வழக்கமான E20 பெட்ரோல் ஸ்பிளெண்டர்+ பைக்கை விட வெறும் ரூ.1,150 மட்டுமே அதிகம் ஆகும். இதைவிட ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஹெச்.எஃப் டீலக்ஸ் ஃபிளெக்ஸ் (HF Deluxe Flex) பைக் இந்த புதிய தள்ளுபடியால் வெறும் ரூ.68,792 என்கிற விலையில் கிடைக்கிறது.

hero motocorp announced new discount

இது அதன் வழக்கமான E20 ஹெச்.எஃப் டீலக்ஸ் i3S காஸ்ட் பைக்கை விட ரூ.1,650 குறைவு என்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான ட்விஸ்ட் ஆகும். இந்த புதிய ரூ.4,000 பணம் தள்ளுபடி ஆனது வருகிற ஜூலை வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ள இந்த பைக்குகளில் ஹீரோவின் பாரம்பரியமிக்க மற்றும் நம்பகமான 97.2cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் வழக்கம்போல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 20% முதல் 85% வரையிலான எத்தனால் கலந்த எரிபொருளில் (E20 to E85) தங்குதடையின்றி இயங்கும் வகையில் இந்த என்ஜினில் அபாரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

hero motocorp announced new discount

எத்தனால் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட புதிய ECU மேப்பிங், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் பம்ப் மற்றும் கூடுதல் பாதுகாப்பு அம்சமாக துணை ஃபியூல் ஃபில்டர் ஆகியவற்றை ஹீரோ இதில் புகுத்தியுள்ளது. இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்ட இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 8.6 எச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்-இல் 8.3 என்.எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக மாறியுள்ளது.

இவ்வாறு, எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்கள் புதியது, புதியதாக அறிமுகம் செய்யப்பட்டு வருவதற்கு மத்தியில், இந்தியாவில் மிக விரைவில் 100% எத்தனால் (E100) எரிபொருளுக்கான சட்டப்பூர்வ விதிகள் கையெழுத்தாகி உள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், ஹீரோவின் இந்த ஃபிளெக்ஸ்-ஃபியூல் பைக்குகளின் வருகை எதிர்காலத்திற்கான ஒரு பெரிய நுழைவாயிலாகப் பார்க்கப்படுகிறது.

இந்த பைக்குகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற ஜூலை மாதம் முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே விற்பனைக்கு வரவிருக்கும் இந்த பைக்குகள், படிப்படியாக நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் மற்றும் ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் முக்கியமானவை ஆகும். அத்தகைய வழக்கமான பெட்ரோல் ஸ்பிளெண்டர் மற்றும் ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளின் விலைக்கு அவற்றின் புதிய ஃபிளெக்ஸ்-ஃபியூல் வெர்சன்களை இந்த புதிய அதிரடி விலைக் குறைப்பு மிக நெருக்கமாக கொண்டு வந்திருப்பது இந்த பைக்குகளை வாங்க ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஏனெனில், புதிய தொழிற்நுட்பத்துடன் வரும் வாகனங்களின் விலைகள் வழக்கமாக மிக அதிகமாக நிர்ணயிக்கப்படுவதே வழக்கம். இதனால், விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஹீரோவின் இந்த அதிரடி வியூகம், எத்தனால் வாகனப் புரட்சியை இந்தியாவில் எந்த அளவிற்கு வேகப்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Article Published On: Monday, June 15, 2026, 20:11 [IST]
English summary
Hero motocorp announced new discount offer for splendor and hf deluxe flex fuel
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out