ஒரே மாதத்தில் கிட்டத்தட்ட 6 லட்சம் 2-வீலர்களை விற்று எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்த ஹீரோ கம்பெனி!

உலகின் மிகப்பெரும் மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), கடந்த 2026 மார்ச்சில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு இதே மாதத்தில் 5,49,604 யூனிட்களாக ஹீரோ மோட்டோகார்பின் 2-வீலர்கள் விற்பனை இருந்த நிலையில், இந்த ஆண்டு 5,98,198 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹீரோ கம்பெனியின் சில்லறை விற்பனையும் மேலும் வலுவடைந்துள்ளது; அரசாங்கத்தின் வஹான் (VAHAN) பதிவு தரவுகளின்படி 5,42,436 யூனிட்கள் பதிவாகி, சுமார் 24% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஹீரோவின் 100சிசி- 125சிசி பைக் பிரிவு தலைமை தாங்குகிறது. பெட்ரோல் ஸ்கூட்டர் பிரிவு 24% என்கிற இரு இலக்க வளர்ச்சியை கண்டுள்ளது.

hero motocorp two wheelers sales

அதேபோல், ஹீரோ க்ளாமர் (Glamour) மற்றும் எக்ஸ்ட்ரீம் (Xtreme) மோட்டார்சைக்கிள்களின் வலுவான விற்பனையும் இதற்குத் துணை நிற்கிறது. அத்துடன், வருடத்தின் ஆரம்ப கால பண்டிகைகளின் சாதகமான சூழலால் கிராமப்புற சந்தைகளில் ஹீரோ 2-வீலர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான துணை பிராண்டான விடா (VIDA), அதன் வளர்ச்சிப் பாதையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 21,434 யூனிட்கள் விற்பனை உடன், முந்தைய பிப்ரவரி மாதத்தை விட விடா பிராண்ட் 70% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தோடு நிறைவடைந்த 2025-26ஆம் நிதியாண்டில் விடாவின் டெலிவிரிகள் (Deliveries) 154% என்கிற பெரிய அளவிலான வளர்ச்சியை கண்டுள்ளன. விடா வி2 (V2) மற்றும் விடா வி.எக்ஸ்2 (VX2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், ஜே.டி பவர் (J.D. Power) நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட 2026 இந்தியா டூ-வீலர் இனிஷியல் குவாலிட்டி (Initial Quality) ஆய்வில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தன.

hero motocorp two wheelers sales

அத்துடன், கடந்த மார்ச் மாதத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நிர்வாகத்துடன் இணைந்து, விஎக்ஸ்2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதியதாக கேகேஆர் லிமிடெட் எடிஷனை விடா அறிமுகப்படுத்தியது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகம் 2026 மார்ச்சில் 45,693 யூனிட் இருசக்கர வாகனங்களை விநியோகித்து, கடந்த ஆண்டின் 39,518 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 16% வளர்ச்சியை பெற்று, சாதனை உச்சத்தை தொட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2025-26ஆம் நிதியாண்டிலும் ஹீரோவின் உலகளாவிய விற்பனை அதற்கு முந்தைய 2024-25ஆம் நிதியாண்டை காட்டிலும் சுமார் 40% அதிகமாக சிறப்பாக நிறைவடைந்துள்ளது. ஹீரோ நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான தயாரிப்புகளுக்கான சர்வதேச அளவிலான தேவையே இந்த வளர்ச்சிக்கு அடித்தளம் ஆகும். ஹீரோ மோட்டோகார்ப் சர்வதேச அளவில் தனது பிராண்ட் இருப்பை வலுப்படுத்த பல முக்கிய நிகழ்வுகளை நடத்தியது.

டிபி வேர்ல்டு டூர் (DP World Tour) மற்றும் இந்திய கோல்ஃப் யூனியன் (Indian Golf Union) உடன் இணைந்து, 2026 மார்ச் 26- 29ஆம் தேதி வரை ஹீரோ இந்தியா ஓபனை வெற்றிகரமாக நடத்தியது; இதில் அலெக்ஸ் ஃபிட்ஸ்பாட்ரிக் (Alex Fitzpatrick) தனது முதல் டிபி வேர்ல்டு டூர் பட்டத்தை வென்றார். மேலும், ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் ரேலி அணி, போர்ச்சுகலில் நடைபெற்ற 2026 ரேலி ரெய்ட் (Rally Raid) போட்டியில் டாப்-10 இடத்தைப் பிடித்து அசத்தியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 5 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இது கடந்த 2026 மார்ச் மாதத்திலும் தொடர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதனை மேலும் பலப்படுத்தும் முயற்சியாக சர்வதேச அளவிலான தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்த ஹீரோ முனைப்பு காட்டி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 4, 2026, 11:08 [IST]
English summary
Hero motocorp dispatched nearly 6 lakh two wheelers in march 2026 check all details here
மேலும்... #hero motocorp #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+