ஸ்பிளெண்டரை போலவே 100சிசி பைக்கை மாற்றிய ஹீரோ கம்பெனி! விலை வெறும் ரூ.84,128
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் பிரபலமான பேஷன்+ பைக்கில் புதியதாக டிஸ்க் பிரேக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.84,128 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் மூலம் பேஷன்+ பைக்கை பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் -இல் இருந்து பல மோட்டார்சைக்கிள்கள் மார்க்கெட்டில் பிரபலமாக உள்ளன. அவற்றுள் ஒன்று, பேஷன்+ ஆகும். ஸ்பிளெண்டர் பைக்குகள் அளவிற்கு இலட்சக்கணக்கில் விற்பனையாகா விடினும், ஒவ்வொரு மாதமும் பல ஆயிரக்கணக்கிலான பேஷன்+ பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனாலேயே அவ்வப்போது இந்த பைக்கில் அப்கிரேட்களை கொண்டுவரும் ஹீரோ நிறுவனம், அந்த வரிசையில் தற்போது புதியதாக டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. டிஸ்க் பிரேக் வேரியண்ட் என பெயர் சூட்டப்பட்டாலும், முன் சக்கரத்தில் மட்டுமே டிஸ்க் பிரேக் கிடைக்கும். பின் சக்கரத்தில் டிரம் பிரேக்குகளே கிடைக்கும்.
இது இல்லாமல், இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் உடன் மட்டுமே கிடைக்கும் டிரம் பிரேக் வேரியண்ட்டிலும் பேஷன்+ விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், டிரம் பிரேக்கை காட்டிலும் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் இருப்பது, ஷார்ப்பான பிரேக் கண்ட்ரோலுக்கும், பாதுகாப்பான ரெஸ்பான்ஸிற்கும் வழிவகுக்கும். முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் மட்டுமின்றி, தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய வேரியண்ட்டில் மற்றொரு அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.

அது என்னவென்றால், ஹேண்டில்பாருக்கு மத்தியில் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் திரை ஆனது முழுவதும் டிஜிட்டல் தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ரியல்-டைமில் மைலேஜ் இண்டிகேட்டர், பெட்ரோல் குறைந்தால் அதுகுறித்த எச்சரிக்கை, சர்வீஸ் ரீமைண்டர்ஸ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளை பெறலாம்.
ப்ளூடூத் இணைப்பு மூலமாக மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பைக்கின் திரையின் வாயிலாகவே கண்ட்ரோல் செய்யலாம். மேலும், புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பேஷன்+ டிஸ்க் பிரேக் வேரியண்ட்டில் LED புரோஜெக்டர் ஹெட்லேம்ப், சைடு-ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் சென்சார், USB சார்ஜிங் துளை மற்றும் பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல ஸ்டோரேஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
மற்றப்படி, என்ஜின் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. பேஷன்+ பைக்கில் பொருத்தப்படும் 100சிசி என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 5.9 கிலோவாட்ஸ் மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 8.05 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் சிஸ்டத்தில் ஐ3எஸ் ஐடியல் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
இதன் மூலமாக பேஷன்+ பைக்கில் லிட்டருக்கு சுமார் 71கிமீ வரையிலான மைலேஜை பெறலாம் என்கிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். புதிய பேஷன்+ டிஸ்க் வேரியண்ட்டை ஹெவி கிரே, நெக்ஸஸ் ப்ளூ, டார்க் இன்டஸ்ட்ரியல் கிரே மற்றும் பேர்ல் சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரபலமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக விளங்குவதினாலேயே பேஷன்+ அவ்வப்போது தொடர்ந்து அப்கிரேட் செய்யப்படுகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வேரியண்ட்டின் மூலமாக டிஸ்க் பிரேக் உடன் பைக்கை வாங்க விரும்புபவர்களையும் பேஷன்+ ஈர்க்கும்.


Click it and Unblock the Notifications