இந்தியர்களுக்கு பாதி விலையில் பைக்குகள்... ஹீரோ கம்பெனியின் செயலால் ஒட்டுமொத்த நாடும் பெருமை படுது!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் பிரபலமான எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை யுகே மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் நம்மை ஆச்சிரியப்படுத்துவது என்னவென்றால், யுகே-இல் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை ஆகும். வாருங்கள் இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கும் அட்வென்ச்சர் வகை மோட்டார்சைக்கிளாக எக்ஸ்பல்ஸ் 200 உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கான மார்க்கெட்டை உருவாக்கியதில் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். இதனாலேயே அதே நம்பிக்கையில் இந்த அட்வென்ச்சர் பைக்கை யுகே நாட்டில் ஹீரோ நிறுவனம் களமிறக்கியுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 4வி மற்றும் எக்ஸ்பல்ஸ் 200 புரோ என்கிற இரு பைக்குகள் யுகே-இல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த எக்ஸ்பல்ஸ் பைக்குகளின் அறிமுகத்தின் மூலமாக, ஐரோப்பாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மார்க்கெட் பெரியதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் எக்ஸ்பல்ஸ் 200 ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.
கடந்த 2025ஆம் ஆண்டில் யுகே நாட்டு சந்தையில் நுழைந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அந்த நாட்டில் வணிகம் மேற்கொள்வதற்காக 'மோட்டோஜிபி' என்கிற நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்தது. எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது 'எல்லையில்லா அட்வென்ச்சர்' என்கிற தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

யுகே-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கிற்கும், எக்ஸ்பல்ஸ் 200 புரோ பைக்கிற்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. குறிப்பாக, கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கான ஆஃப்-ரோடு திறன்களில் இந்த இரு எக்ஸ்பல்ஸ் பைக்குகளுக்கும் இடையே முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன. இதில், எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் விலை ஆனது யுகே-இல் 2,699 பவுண்ட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ஏறக்குறைய ரூ.3.5 லட்சம் ஆகும். அதுவே, இந்தியாவில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் வெறும் ரூ.1.42 லட்சத்தில் இருந்து ரூ.1.45 லட்சம் வரையில் உள்ளன. மறுப்பக்கம், எக்ஸ்பல்ஸ் 200 புரோ பைக்கின் விலை யுகே-இல் 2,899 பவுண்ட் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயில் இதன் மதிப்பு தற்சமயம் ரூ.3.76 லட்சம் ஆகும். எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கின் எடை 159 கிலோவாக இருக்கும் நிலையில், எக்ஸ்பல்ஸ் 200 புரோ பைக்கின் எடை சற்று அதிகமாக 161 கிலோ ஆகும். அதேபோல், எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கில் ரைடர் இருக்கை உயரமானது தரையில் இருந்து 825மிமீ உயரத்தில் இருக்கும் நிலையில், எக்ஸ்பல்ஸ் 200 புரோ பைக்கில் 891மிமீ உயரத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், எக்ஸ்பல்ஸ் 200 புரோ பைக்கில் கியர் லிவரும் நீட்டிக்கப்பட்டதாக வழங்கப்படுகிறது. இந்த இரு எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளிலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உடன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் எல்இடி டிஆர்எல்-கள் உடன் எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஹெட்லைட்கள் 230% கூடுதலான பிரகாசத்தை வழங்கக் கூடியவைகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுகே எனப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் அட்வென்ச்சர் வகையை சேர்ந்த பைக்குகளுக்கு பஞ்சமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும், அவை எல்லாவற்றையும் விட குறைந்த விலையிலான அட்வென்ச்சர் பைக்காக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ரூ.3.5 லட்சம் என்பது நம்ம ஊர் விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications