ஓலாவை கதறவிட எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கும் ஹீரோ கம்பெனி! அறிமுகம் செய்ய அனுமதியை பெற்றாச்சு!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), தனது எலெக்ட்ரிக் வாகனப் பிரிவான 'விடா' (Vida) மூலம் வேகமாக வளர்ந்து வருகிறது. வி1 (V1), வி2 வரிசை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மற்றும் மலிவு விலையிலான வி.எக்ஸ்2 (VX2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசைக்குப் பிறகு, சமீபத்தில் குழந்தைகளுக்கான டெர்ட்.இ கே3 (DIRT.E K3) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தி, எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் அடியெடுத்து வைத்துள்ளது.

இதனை தொடர்ந்து, பெரியவர்களுக்கான எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களிலும் ஹீரோ விடா தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அதன் வெளிப்பாடாக, ஹீரோ விடா நிறுவனம் சமீபத்தில் வி.எக்ஸ்.இசட் (VxZ - Vida x Zero) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பிற்கான வர்த்தக முத்திரையைப் பதிவு செய்தது. அதேபோல் இப்போது உபெக்ஸ் கான்செப்ட் (UBEX Concept)-இன் உற்பத்திக்கு ஒரு படி நெருக்கமாக இருப்பதாகத் தோன்றும் ஒரு எலெக்ட்ரிக் பைக் வடிவமைப்புக்கான காப்புரிமையையும் ஹீரோ மோட்டோகார்ப் பெற்றுள்ளது.

hero motocorp registered design patented

கடந்த ஆண்டு இறுதியில், இத்தாலியில் நடைபெற்ற 2025 EICMA கண்காட்சியில் டெர்ட்.இ, உபெக்ஸ், நெக்ஸ் (NEX) மற்றும் வி.எக்ஸ்.இசட் ஆகிய நான்கு புதிய எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட்டுகளை ஹீரோ விடா காட்சிப்படுத்தியது. இவற்றில், விடா நெக்ஸ் என்பது இரு கதவுகள் மட்டுமே கொண்ட மைக்ரோ எலக்ட்ரிக் கார் ஆகும்.

மற்ற மூன்றுமே எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் மாதிரி பெயர்களாகும். அவற்றில் தற்போது, உபெக்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் வடிமைப்பிற்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றுள்ளது. பெயருக்கு ஏற்றவாறு, உபெக்ஸ் ஒரு நகர்ப்புற எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இதன் வடிவமைப்பு ஒரு ஆக்ரோஷமான மற்றும் ஸ்போர்ட்டியான ஸ்ட்ரீட் ஃபைட்டர் (Streetfighter) பைக் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

hero motocorp registered design patented

ஒற்றை புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் அதற்கு மேலும் கீழும் LED DRL-கள் கொண்ட ஸ்போர்ட்டியான முன்பகுதியை இந்த இ-பைக் கொண்டதாகும். இவற்றின் பக்கவாட்டில் LED டர்ன் இண்டிகேட்டர்கள் அமைந்துள்ளன. தற்போது காப்புரிமைப் பெற்ற வடிவமைப்பு ஆனது கிட்டத்தட்ட உற்பத்தி பணிகளுக்கு தயாராகிவிட்டது போலவே தெரிகிறது. EICMA கண்காட்சியில் உபெக்ஸ் கான்செப்ட் பைக்கில் முன்பக்கத்தில் USD டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் இருந்த நிலையில், காப்புரிமைப் பெற்ற வடிவமைப்பில் வழக்கமான RSU டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் உள்ளன.

இது உற்பத்தி மாடலாக இருப்பதற்கான ஒரு குறியீடு ஆகும். சக்கரங்கள் மற்றும் பைக்கின் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஆனது கான்செப்ட் மாடலுடன் ஒத்துப்போகின்றன. இதில் சமதளமான ஹேண்டில்பார், ஸ்போர்ட்டியான பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பேனல்கள் ஆகியவற்றைக் காணலாம். பின் இருக்கைக்காக சற்று உயர்ந்த சிங்கிள்-பீஸ் இருக்கை உள்ளது.

மத்தியில் வழங்கப்பட்டுள்ள ரைடர் கால் வைப்பதற்கான ஃபுட்பெக் பொசிஷனிங் காரணமாக பைக்கின் ஒட்டுமொத்த எர்கோனாமிக்ஸ் வசதியாகவும் நேரானதாகவும் தெரிகிறது. பின்புற கிராப் ஹேண்டில்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. உபெக்ஸ் கான்செப்ட்டில் டயர் ஹக்கர், ட்யூப்லர் ட்ரெல்லிஸ் வகை ஸ்விங்கார்ம் மற்றும் முன்-பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவையும் அடங்குகின்றன.

இதன் பெரிய பேட்டரி பேக் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இது கீழ்விளிம்பு வரை நீண்டுள்ளதால், இது அதிக திறன் கொண்ட பேட்டரியைக் குறிக்கிறது. உபெக்ஸ், மத்தியில் பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டாருடன் வருவதால், இது பின் சக்கரங்களுக்கு ஆற்றலை வழங்கும். டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் உட்பட பல அம்சங்களுடன் கூடிய TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விடா உபெக்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொது சாலைகளில் சோதனை ஓட்டங்கள் இன்னும் தொடங்கவில்லை. உபெக்ஸ் அறிமுகப்படுத்தப்படும்போது, ஹீரோவின் பிரீமியா டீலர்ஷிப்கள் மற்றும் பிரத்யேக விடா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனைக்கு வரும். இது ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தின் ரோட்ஸ்டர் (Roadster) எலெக்ட்ரிக் பைக்கிற்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 9, 2026, 10:53 [IST]
English summary
Hero motocorp registered design patented for ubex electric bike check all details here
மேலும்... #hero motocorp #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+