இதுவரைக்கும் யாருமே செய்யாத காரியத்தை செய்த ஹீரோ மோட்டோகார்ப்... இந்த மாதிரி பைக்கை ஒருத்தரும் பாத்தது இல்ல...
இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம், உலகின் மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதற்கு நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் விதிவிலக்கு அல்ல.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 5,03,763 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 4,75,164 பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

அதாவது இம்முறை 28,599 பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 6.02 சதவீத வளர்ச்சி ஆகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பைக்குகளின் விற்பனையை போலவே, ஸ்கூட்டர்களின் விற்பனையும் உயர்ந்துள்ளது. நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 66,305 ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது.
ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 32,537 ஸ்கூட்டர்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது இம்முறை 33,768 ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது 103.78 சதவீத வளர்ச்சி ஆகும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் (பைக்குகள் + ஸ்கூட்டர்கள்) நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 5,70,068 டூவீலர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் வெறும் 5,07,701 டூவீலர்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது இம்முறை 62,367 டூவீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 12.28 சதவீத வளர்ச்சி ஆகும்.
ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே இந்தியாவின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட டூவீலர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இன்று (ஜூன் 3) ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகளின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்தியாவின் 100 சிசி செக்மெண்ட்டில் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை ஹீரோ மோட்டோகார்ப் பெற்றுள்ளது.
இந்த 2 பைக்குகளும் E20 முதல் E85 வரையிலான எரிபொருட்களில் இயங்கும் திறன் வாய்ந்தவை. அடுத்த மாதம் (ஜூலை) முதல் இந்த 2 பைக்குகளின் டெலிவரியும் தொடங்கப்படவுள்ளது. இது போன்ற புதிய பைக்குகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்வதன் மூலமாகவே உலகின் மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமையை ஹீரோ மோட்டோகார்ப் தக்க வைத்து கொண்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications