இந்த காலத்திலும் லிட்டருக்கு 65கிமீ மைலேஜ் வழங்கும் 100சிசி ஹீரோ பைக்! விலையை கேட்டால் உடனே வாங்கி போடுவீங்க!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள், ஸ்பிளெண்டர் ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா? ஸ்பிளெண்டர் அளவிற்கு இல்லையென்றாலும், ஹீரோ நிறுவனத்தில் இருந்து இன்னொரு பைக்கும் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகிறது.
அது என்னவென்றால், ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் ஆகும். ஸ்பிளெண்டர் பைக்குகளை காட்டிலும் குறைந்த விலையில், 100சிசி என்ஜின் உடன் எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்பிளெண்டர் பைக்குகளை கூட வாங்க முடியாதவர்களின் பிரதானமான தேர்வாக எச்.எஃப் டீலக்ஸ் விளங்குகிறது. இதனாலேயே ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 லட்சம் எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகவில்லை என்றாலும், கிட்டத்தட்ட அதற்கு இணையாக 91 ஆயிரத்து 977 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை தொடவில்லை என்றாலும், கடந்த 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏப்ரலில் எச்.எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனை சுமார் டபுள் மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.
ஏனெனில், 2025 ஏப்ரலில் வெறும் 41 ஆயிரத்து 645 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளின் விற்பனை ஆனது கடந்த ஆண்டு ஏப்ரலை விட இந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 120.86%, அதாவது 50 ஆயிரத்து 332 யூனிட்கள் அதிகரித்துள்ளது.

கடந்த 2026 மார்ச் மாதத்திலும் 85 ஆயிரத்து 88 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளை மட்டுமே ஹீரோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த மார்ச் மாதத்தை காட்டிலும் ஏப்ரல் மாதத்தில் 6 ஆயிரத்து 889 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் சுமார் 91 ஆயிரத்து 821 யூனிட் எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அதற்கடுத்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை அப்படியே பாதிக்கும் மேல் சரிந்துள்ளது. கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் 71 ஆயிரத்து 717 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம் பிரேக்/ டிஸ்க் பிரேக், கிக்-ஸ்டார்ட்/ செல்ஃப்-ஸ்டார்ட் என பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.58 ஆயிரத்தில் இருந்து ரூ.71,500 வரையில் உள்ளன. முற்றிலும் கருப்பு நிறத்திலான 'ஆல் பிளாக்' வேரியண்ட்டிலும் இந்த விலை குறைவான ஹீரோ பைக் கிடைக்கிறது.
விலைமிக்க டாப் வேரியண்ட்களில் முக்கிய அம்சமாக ஐ3எஸ் தொழிற்நுட்பம் இந்த பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் 97.2சிசி என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 7.91 பிஎச்பி மற்றும் 8.05 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஸ்பிளெண்டர் பைக்கை வாங்கும் அளவிற்கு கூட பணம் இல்லாதவர்கள் தான் ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்கின் கஸ்டமர்களாவர். இதன் மூலமாகவே ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் எச்.எஃப் டீலக்ஸ் ஆனது குறைந்த எடை கொண்ட பைக்காக அதிக மைலேஜை வழங்குகிறது. ஆதலால், தினசரி பயணங்களுக்கு சிறந்த மைலேஜ் பைக்கை எதிர்பார்ப்பவர்கள் எச்.எஃப் டீலக்ஸை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications