லிட்டருக்கு 70கிமீ மைலேஜ் தரும் பைக்கை வாங்க ஷோரூம்களில் கூட்டம் நிரம்பி வழியுது! மிரள விடும் இந்திய கம்பெனி!

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), இந்தியாவின் தேசிய பைக் என அழைக்கும் அளவிற்கு ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகக் கூடிய பைக்காக விளங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், சுமார் 3.21 லட்சத்திற்கும் அதிகமான ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்து ஹீரோ மோட்டோகார்ப் அசத்தி உள்ளது.

இந்தியர்களுக்கும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கும் இருக்கும் பிணைப்பு நீண்ட வருடங்களாக மிகவும் வலுவானதாக இருந்து வருகிறது. இந்தியாவின் எந்த பகுதியில், எந்த நேரத்தில் சாலைக்கு சென்றாலும் குறைந்தது ஒரு ஸ்பிளெண்டர் பைக்கை ஆவது பார்க்க முடியும். அந்த அளவிற்கு கடந்த 6 வருடங்களாக இந்தியாவில் மற்ற அனைத்து விதமான 2-வீலர்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 2-வீலராக ஸ்பிளெண்டர் விளங்குகிறது.

hero splendor february 2026 sales

கடந்த பிப்ரவரி மாதத்தில் இன்னும் அதிகமாக சுமார் 3 லட்சத்து 21 ஆயிரத்து 952 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் விற்பனையான ஸ்பிளெண்டர் பைக்குகளின் எண்ணிக்கை மட்டுமே இதுவாகும். அதாவது, கடந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 ஆயிரத்து 700க்கும் அதிகமான ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன.

அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டில் இதே பிப்ரவரி மாதத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 763 ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை ஆனது சுமார் 54.96% அதிகரித்துள்ளது. அதாவது, 2025 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டதில் 50%-க்கும் அதிகமான யூனிட்கள் இந்த ஆண்டு பிப்ரவரியில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

hero splendor february 2026 sales

ஆனால், கடந்த 2026 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பிப்ரவரியில் 2,067 ஸ்பிளெண்டர் பைக்குகள் குறைவாக விற்பனையாகி உள்ளன. ஏனெனில், கடந்த ஜனவரி மாதத்தில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 19 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஸ்பிளெண்டர் பைக்குகள் இவ்வளவு அதிகமாக விற்பனையாகுவதற்கு காரணம், மூன்று விதமான ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்படுவது ஆகும்.

அவையாவன, ஸ்பிளெண்டர் பிளஸ், ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (XTEC) மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் ஆகும். இதில், 125சிசி பைக்கான சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக்கை தவிர்த்து மற்ற இரண்டும் 100சிசி ஸ்பிளெண்டர் பைக்குகள் ஆகும். ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் ஐ3எஸ் டெக்னாலஜி மற்றும் அலாய் சக்கரங்கள் சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் ரூ.74,902இல் இருந்து துவங்குகின்றன.

ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் பைக்கின் விலைகள் ரூ.78,428இல் இருந்து துவங்கும் நிலையில், இதில் டிஜிட்டல் கன்சோல் திரை, ப்ளூடூத், எல்இடி டிஆர்எல்-கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கின் சிறப்பம்சங்களாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.83,448இல் இருந்து துவங்குகிறது.

125சிசி என்ஜினை பெறுவதால் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் பைக்கில் மற்ற இரு ஸ்பிளெண்டர் பைக் மாடல்கள் உடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான மைலேஜே கிடைக்கிறது. மற்றவைகளில் லிட்டருக்கு 70கிமீ-க்கும் அதிகமான மைலேஜ் கிடைக்கும் நிலையில், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக்கில் 65கிமீ அளவிலான மைலேஜே கிடைக்கிறது. கடைசியாக, ஸ்பிளெண்டர் பைக்குகளை கடந்த 2025 துவக்கத்தில் ஒபிடி2பி இணக்கமானதாக ஹீரோ மோட்டோகார்ப் அப்கிரேட் (Upgrade) செய்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் அடையாளமே அவற்றின் சிறந்த மைலேஜ் (Mileage) ஆகும். அத்துடன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பரந்து விரிந்த சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கும் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் ஸ்பிளெண்டர் பைக்குகளை வாங்குவதற்கு காரணம் ஆகும். இதனாலேயே கடந்த பிப்ரவரி மாதத்திலும் வழக்கம்போல் அதிக பேர் ஸ்பிளெண்டர் பைக்குகளை வாங்கி உள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 24, 2026, 16:08 [IST]
English summary
Hero splendor february 2026 sales report 54 96 yoy growth compared to 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+