மைலேஜை அள்ளிக் கொடுக்கும் பைக்.. அதுனாலேயே லட்சக்கணக்குல மக்கள் வாங்குறாங்க.. நீங்க வாங்கலையா?
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனை செய்யப்படும் பைக் எது தெரியுமா? சந்தேகத்திற்கு இடமின்றி அது ஸ்ப்ளெண்டர் பிளஸ் தான். ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் இந்த பைக்கை தான் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வாங்கிக் குவிக்கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதமும் சுமார் 3.09 லட்சம் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது.
பல ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் அதிக விற்பனை அளவுடன் இந்த இருசக்கர வாகன சந்தையின் உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. அதனை கீழே இறக்குவதற்கு இன்னும் எந்த பைக்கும் வரவில்லை. இப்போதைக்கு இன்னோரு பைக் வரும் என்று கூறம் வகையில் திறன் கொண்ட பைக்குகள் எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்தாண்டு ஏப்ரல் மாதம் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கின் விலை 56.12 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 1.97 லட்சம் யூனிட்டுகளே ஸ்ப்ளெண்டர் பிளஸ் விற்பனையாகியிருந்தது. இந்தாண்டு மேலே கூறியது போல 3.09 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. இந்த விற்பனை அளவுடன் 33.52 சதவீதம் சந்தைப் பங்குகளையும் கொண்டிருக்கிறது.
அப்படியென்றால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மூன்று பைக்குகளில் ஒன்று ஸ்ப்ளெண்டர் பிளஸ் தான். இரண்டானது இடத்தில் இருக்கும் ஹோண்டா ஷைன் எவ்வளவு விற்பனையாகியிருக்கிறது தெரியுமா? 1.82 லட்சம் யூனிட்டுகள் தான். கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 8.27 சதவீதம் அதிகம். இந்த விற்பனை அளவுடன் 19.83 சதவீத சந்தைப் பங்குகளைக் கொண்டிருக்கிறது ஹோண்டா.

பைக்குகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டதால் ஷைன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஸ்கூட்டர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால் ஹோண்டாவின் ஆக்டிவாவே இரண்டாவது அதிகம் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனமாக இருந்திருக்கும். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 2 லட்சத்திற்கும் மேலான ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஹோண்டா.
சரி பைக்குளின் பட்டியலுக்கு வருவோம். ஹோண்டா ஷைனைத் தொடர்ந்து 1.31 லட்சம் யூனிட்டுகள் விற்பனையுடன் பஜாஜ் பல்சர் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 91,977 யூனிட்டுகள் விற்பனையுடன் ஹீரோ HF டீலக்ஸ் நான்காவது இடத்திலும், 49,390 யூனிட்டுகள் விற்பனையுடன் டிவிஎஸ் அப்பாச்சி ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது விற்பனை குறைந்த ஒரேயொரு பைக் மாடல் என்றால் அது டிவிஎஸ்ஸின் ரெய்டர் தான். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 43,028 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஏப்ரல் மாதம் 29,064 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது ரெய்டரின் விற்பனை 32.45 சதவீதம் வரை சரிந்திருக்கிறது.
இந்த பைக்குகளைத் தவிர்த்து ஹோண்டா CB யூனிகார்ன், ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 350, ஹீரோ கிளாமர் மற்றும் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ஆகிய பைக்குகளும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. பத்தாவது இடத்தில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் மாடலானது 25,040 யூனிட்டுகள் விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 51.86 சதவீதம் விற்பனை உயர்வாகும். கடந்தாண்டு ஏப்ரலில் 16,489 புல்லட் பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனை பைக்குகள் குறைவான விலையைக் கொண்டிருந்தாலும், அதிக வசதியினைக் கொண்டிருந்தாலும் அல்லது இந்த இரண்டையும் சேர்த்தே கூட கொண்டிருந்தாலும் ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸை இப்போதைக்கு அசைக்க முடியாது. ஹீரோவே நினைத்தாலும் கூட ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸைப் போல மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இன்னொரு பைக்கை இந்திய சந்தையில் களமிறக்க முடியாது. இப்போது ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸே ஹீரோ மிக முக்கியமான தூணாக இருந்து வருகிறது. அந்த ஒற்றை பைக் மாடலே ஹீரோவை ஒட்டுமொத்த பைக் விற்பனையின் முதலிடத்தில் வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications