விஜய் பூவே உனக்காக நடிக்கறதுக்கு முன்னாடில இருந்து இருக்கு! 32 வருஷம் கடந்தும் ஒரு பைக்கால கூட இதை தொட முடியல
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor). ஹீரோ ஸ்பிளெண்டருக்கு தற்போது 32 வயதாகிறது. ஆம், இது கடந்த 1994ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பைக் ஆகும். விஜய்யின் (Vijay) பூவே உனக்காக (வெளியான ஆண்டு 1996) திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே ஹீரோ ஸ்பிளெண்டர் விற்பனையில் இருந்து வருகிறது.
விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே மாறி விட்டார். ஆனால் இன்னமும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் இந்தியாவிலேயே மிகவும் அதிகமாக விற்பனையாகும் பைக் என்ற பெருமையுடன்! இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes), ஹீரோ ஸ்பிளெண்டர்தான் எப்போதும் முதலிடம் பிடித்து வருகிறது.

இந்த வரிசையில் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இந்த பட்டியலில் ஹீரோ ஸ்பிளெண்டர் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3,09,131 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 1,97,893 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது இம்முறை 1,11,238 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 56.21 சதவீத வளர்ச்சியுடன், நடப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பைக் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளெண்டர் பெற்றுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் தற்போதைய நிலையில் 100 சிசி மற்றும் 125 சிசி என்று 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், 100 சிசி இன்ஜினில் 3 வெர்ஷன்கள் உள்ளன. அவை ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (77,694 ரூபாய்), ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் (81,081) மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 (83,214 ரூபாய்) ஆகியவை ஆகும்.
மறுபக்கம் 125 சிசி இன்ஜினில் ஒரே ஒரு வெர்ஷன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக் (83,221 ரூபாய்) ஆகும். நாங்கள் அடைப்பு குறிக்குள் கூறியுள்ள அனைத்துமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் 100 சிசி வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 70 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்க கூடியவையாக இருக்கின்றன. அதே நேரத்தில் 125 சிசி வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 68 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கிறது. இவை அனைத்துமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மைலஜ் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் (Honda Shine), பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport) போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ஹீரோ ஸ்பிளெண்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications